மேகாலயா மாநிலத்தில் 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சியில் அமர்ந்தது. அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் ஐக்கிய ஜனநாயக கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியது.
இந்த கட்சி காங்கிரசுடன் கூட்டணி சேர முன்வந்தது. இதையடுத்து காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அமர்ந்தது. காங்கிரஸ் தலைவர் லபாங் முதல்வர் ஆனார். ஆனால் லபாங் மீது காங்கிரஸ் உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்தனர். மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 எம்.எல்.ஏ.க்களில் 28 பேர் காங்கிரசில் உள்ளனர்.
இவர்களில் 20 பேர் லபாங்குக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் தற்போது துணை முதல்வராக இருக்கும் முகுல் சங்மாவை முதல்வராக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த பிரச்சினையை அடுத்து முதல்வர் லபாங் இன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். புதிய முதல்-மந்திரி தேர்வு இன்று நடக்கிறது. முகுல் சங்மா முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
Showing posts with label ராஜினாமா. Show all posts
Showing posts with label ராஜினாமா. Show all posts
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறார் சிரஞ்சீவி?
தெலுங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவர் சிரஞ்சீவி, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நடிகர் சிரஞ்சீவி, இதுவரை, தெலுங்கானா மாநிலம் அமைக்க ஆதரவு தெரிவித்து வந்தார். ஆனால், தெலுங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அவரது பிரஜா ராஜ்யம் கட்சியைச் சேர்ந்த 15 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்குமாறும், ஒன்றுபட்ட ஆந்திராவுக்காக சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்யுமாறும் சிரஞ்சீவியை அவர்கள் நிர்பந்தம் செய்து வருகிறார்கள். இதுபற்றி நேற்று கட்சியின் மூத்த தலைவர்களுடன் சிரஞ்சீவி ஆலோசனை நடத்தினார்.
தனது திருப்பதி தொகுதி சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்வது குறித்து, இன்று முடிவு அறிவிப்பதாக, கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களிடம் சிரஞ்சீவி அறிவித்தார்.கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில், சிரஞ்சீவி தனது முடிவை அறிவிக்கிறார்.
இதற்கிடையே, தெலுங்கானாவுக்கு எதிராக சிரஞ்சீவி மாறி இருப்பதற்கு தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த பிரஜா ராஜ்யம் கட்சி பிரமுகர்கள் நேற்று அவரிடம் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர்.
Labels:
ராஜினாமா
Subscribe to:
Posts (Atom)