மேகாலயா முதல்வர் ராஜினாமா

மேகாலயா மாநிலத்தில் 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சியில் அமர்ந்தது. அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் ஐக்கிய ஜனநாயக கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியது.

இந்த கட்சி காங்கிரசுடன் கூட்டணி சேர முன்வந்தது. இதையடுத்து காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அமர்ந்தது. காங்கிரஸ் தலைவர் லபாங் முதல்வர் ஆனார். ஆனால் லபாங் மீது காங்கிரஸ் உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்தனர். மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 எம்.எல்.ஏ.க்களில் 28 பேர் காங்கிரசில் உள்ளனர்.

இவர்களில் 20 பேர் லபாங்குக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் தற்போது துணை முதல்வராக இருக்கும் முகுல் சங்மாவை முதல்வராக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த பிரச்சினையை அடுத்து முதல்வர் லபாங் இன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். புதிய முதல்-மந்திரி தேர்வு இன்று நடக்கிறது.
முகுல் சங்மா முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

0 comments: