பாகிஸ்தானிலிருந்து கடல் வழியாக வந்த கசாப், அவனது கூட்டாளி அபு இஸ்மாயில் மற்றும்மேலும் எட்டு தீவிரவாதிகள் மும்பையின் தாஜ் ஓட்டல், நாரிமன் இல்லம், ஓபராய் ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தினர்.
2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடத்தப்பட்ட இந்த கொடூர பயங்கரவாத தாக்குதல் வழக்கில் மே மாதம் 3ந் தேதி தீர்ப்பளிக்கப்படவுள்ளது. தீர்ப்புக்கு பிறகு சம்பவ இடங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட 24 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தை போலீசார் எரித்து அழிக்கவுள்ளனர்.
தாக்குதலின்போது, மூன்று இடங்களிலிருந்து வெடிக்காத 24 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு சாட்சியாக வைக்கப்பட்டது. தற்போது இவற்றை எரித்து அழிக்க போலீசாருக்கு நீதிமன்றம் கடந்த மாதம் அனுமதி வழங்கியது. ஆயினும் எந்த இடத்தில் அவை அழிக்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை.
இதனிடையே அக்கொடூர சம்பவத்தை நினைவுகூர்ந்த ஜமுனாவகேலா என்ற 50 வயது பெண்மணி, ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்த பிறகு தன்னுடைய 32 வயது மகனை தீவிரவாதி அஜ்மல் கசாப் சுட்டுக் கொன்றதை குறிப்பிட்டு அவனை இனியும் தாமதமின்றி தூக்கில் போட வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், கசாப்புக்கு எவ்வித கருணையும் காட்டப்படக்கூடாது என்று தெரிவித்தார். மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதி அஜ்மல் கசாப் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment