தஞ்சை தமிழ்ப் பல்கலை கழகத்தில் கிராமப்புற பகுதி மாணவர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் இன்று (29ம்தேதி) நடக்கிறது என பல்கலைக்கழக பதிவாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பல்கலைக்கழக மான்யக்குழு நிதியுதவியுடன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இன்று 29 மற்றும் நாளை 30ம்தேதிகளில் கிராமப்புற பகுதி மாணவர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இன்று 29ம்தேதி ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டத்துடன் பி.எட். மற்றும் எம்.எட். படித்தவர்கள் பங்கேற்கலாம்.
30ம்தேதி கணிதம், வரலாறு, தாவரவியல், புவியியல் மற்றும் விலங்கியல் ஆகியவற்றில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டத்துடன் பி.எட், மற்றும் எம்.எட் படித்தவர்களும், டிடிஇடி படித்தவர்களும் இப்போது கல்வியியல் படித்துக் கொண்டிருப்பவர்களும் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்கள் அறிய 9842633753, 9952540048, 9486291561, 9245107548 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment