இதுகுறித்து அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஆற்றி வரும் சமூகப் பணியைப் பாராட்டி உலக அளவில் செயல்பட்டுவரும் இறையியல் கல்லூரியான குருகுலம் அகாடமி, டாக்டர் (முனைவர்) பட்டம் வழங்குகிறது.
சமூகப் பணி மற்றும் இறைதொண்டு ஆகியவற்றில் சிறப்பான முறையில் பணியாற்றிய சிந்தனையாளர்கள் மற்றும் களப் போராளிகளுக்கு இக்கல்லூரி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாக்டர் பட்டம் வழங்கி வருகிறது.
2009ஆம் ஆண்டுக்கான டாக்டர் பட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு இக்கல்லூரி வழங்குகிறது.
மிகவும் கீழ்நிலையில் கேட்பாராற்று ஒடுக்குண்டு கிடந்த தலித் மக்களைத் தலைநிமிர வைத்த தொல்.திருமாவளவன் பணியை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக இந்த டாக்டர் பட்டத்தை இக்கல்லூரி வழங்குகிறது என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment