புகையிலை பொருள் உபயோகம்: ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இறப்பு

புகையிலைப் பொருட்கள் உபயோகத்தால் ஆண்டுக்கு 10 லட்சம் இந்தியர்கள் இறப்பதாக புகை(யிலை)யில்லா சென்னை திட்டத் துவக்க விழாவில் தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்களிடையே புகையிலைப் பொருட்கள் உபயோகிப்பால் ஏற்படும் தீங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் உபயோகத்தை குறைப்பதற்கான, 'புகை(யிலை)யில்லா சென்னை' திட்ட துவக்க விழா நேற்று நடந்தது. விழாவில், அமைச்சர் பன்னீர்செல்வம் சிறப்பு தபால் உறையை வெளியிட்டார். பொது சுகாதார இயக்குனர் இளங்கோவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு விருதுகளை வழங்கினார். சுகாதார பணியாளர் கையேட் டினை வெளியிட்டார். சட்ட நடவடிக்கை வாகனத்தை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: உலகளவில் ஆண்டுக்கு 50 லட்சம் பேரும், இந்தியாவில் 10 லட்சம் பேரும், தமிழகத்தில் ஒரு லட்சம் பேரும், புகையிலைப் பொருட்கள் உபயோகிப்பதால் இறக்கின்றனர். ஒரு நாளைக்கு 2,500 பேர் புகையிலைப் பொருட் கள் உபயோகிப்பால் இறக்கின்றனர். தினமும் 5,500 பேர் புகையிலைப் பொருட்கள் உபயோகிப்பதற்கு பழகுகின்றனர். புகைப்பவர்களால், அந்த பழக் கம் இல்லாத 1,000 பேர் ஆண்டுதோறும் இறக்கின்றனர்.


பள்ளி மாணவர்கள் புகையிலை பழக்கத்திற்கு எளிதில் ஆட்படுகின்றனர். பார்க்கும் போதே வாங்க வேண்டும் என்ற ஆசையை தூண்டும் விதமாக, புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. பெட்டிக் கடைகளில் இத்தகைய விற்பனை குறைக்கப் பட்டுள்ளது. அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த சட்டத்தால், பொது இடத்தில் புகைப்பவர்கள் பயந்து கொண்டே புகைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. போலி மருந்து, கலப்பட உணவுப் பொருட்களுக்கு எதிராக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையால், எப்படி அது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற் பட்டுள்ளதோ அதுபோன்ற விழிப்புணர்வு, புகை பிடிக்கும் பழக்கத்திற்கு எதிராகவும் ஏற்பட் டுள்ளது.


இதனால், புகைப்பவர்கள் பயந்து கொண்டே, மறைவான இடங்களுக்கு சென்று புகை பிடிக்கின்றனர். புகையிலை இல்லா சென்னை திட்டத்தை, சிங்கார சென்னை திட்டத்தின் ஒரு பகுதியாக கருதி, வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார். நிகழ்ச்சியில் மேயர் சுப்ரமணியம், கவர்னரின் முதன்மைச் செயலர் ரமேஷ்ராம் மிஸ்ரா, சுகாதாரத்துறை செயலர் சுப்புராஜ், சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர் ராமானுஜம், காசநோய் மற்றும் நுரையீரல் நோய்களுக்கு எதிரான, பன்னாட்டு கூட்டமைப்பின் தென்கிழக்கு ஆசியா அலுவலக இயக்குனர் நெவின் வில்சன் உள்ளிட்டோர் பங்கேற் றனர்

0 comments: