ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ் பெறக் கோரி அனைத்து ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கங்களின் கூட்டுப் போராட்டக் குழுவினர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ் பெற வேண் டும். ஆட்டோ உள்ளிட்ட முறைசாரா நலச்சங்கத்தை நலவாரியமாக மாற்றி, 60 வயதான ஆட்டோ தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சுற்றுலாத் துறை மூலம் கட்டண மீட்டர் வழங்கி கட்டணத்தை முறைபடுத்த வேண்டும். 8ம் வகுப்பு தேர்ச்சி பெறாத ஆட்டோ டிரைவர்கள் அனைவருக்கும் லைசென்ஸ், பேட்ச் வழங்க வேண்டும்.


ஆட் டோ ஸ்டேண்டுகளுக்கு நகராட்சி சார்பில் மேற் கூரை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, நேற்று புதுச்சேரி அனைத்து ஆட்டோ சங்கங் களின் கூட்டு போராட்டக் குழுவினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆட்டோ ஓட்டுனர்கள் அண்ணா சாலையில் இருந்து பேரணியாக புறப் பட்டு சட்டசபை நோக்கி வந்தனர். சட்டசபை அருகில் அவர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டு, பின் முதல்வர் வைத்திலிங் கத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

0 comments: