ரோட்டோரம் பஸ் கவிழ்ந்து விபத்து : 42 பேர் காயம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு லிங்கன் என்ற தனியார் பஸ் சென்றது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தில்லைவிளாகம் லிங்கத்தடி அருகே வந்தது. ரோட்டை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. எதிரே வந்த பைக்குக்கு வழிவிடுவதற்காக பஸ்ஸை ஒதுங்கியபோது, ரோட்டோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கீழவாடியக்காடு சேகர், கர்ப்பநாதர்குளம் அய்யாசாமி, பாலசுந்தரம், ஆயக்காரன்புலம் ராஜலட்சுமி, கடஞ்சவிளாகம் சுந்தராம்பாள், வண்டுவாஞ்சேரி ராஜேந்திரன் ஆகிய ஆறு பேர் பலத்த காயத்துடன், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், 36 பேர் லேசான காயத்துடன் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

முத்துப்பேட்டை போலீஸ் எஸ்.ஐ., அருள்பிரியா விசாரித்து, தலைமறைவான பஸ் டிரைவர் காதர் மைதீன், கண்டெக்டர் ஜெய்குமார் ஆகியோரை தேடிவருகிறார். விபத்தில் காயம் அடைந்தவர்களை நாகை எம்.பி., விஜயன், திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ., உலகநாதன், பாரதிய ஜனதா மாநில இளைஞரணி தலைவர் முருகானந்தம், தி.மு.க., நகர செயலாளர் பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்கராசு உட்பட பலர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

0 comments: