கிராமத் திருவிழாவில் ரசிகர்கள் துரத்தல்... சங்கவி ஓட்டம்

கிராம திருவிழாவில் நடிகை சங்கவி ஆட்டம் போடாததால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் பெரும் கலாட்டாவில் இறங்கினர். இதனால் திருவிழாவை விட்டு ஓட்டம் பிடித்தார் சங்கவி.

பேராவூரணி நிலகண்ட பிள்ளையார் கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழா கடந்த 19-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இந்த விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நடிகை சங்கவியின் நடனத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். எனவே ஏராளமான ரசிகர்கள், கிராம மக்கள் குவிந்துவிட்டனர்.
ஆனால் இவர்களைக் கட்டுப்படுத்தப் போதிய போலீஸ் இல்லை. எனவே விழாவின் துவக்கத்திலிருந்தே பெண்களிடம் சில இளைஞர்கள் சில்மிஷம் செய்துள்ளனர். இதனால் கூச்சலும் குழப்பமுமாக இருந்தது.

இந்த நிலையில் சங்கவி நடனமாடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரோ, நடனமாடாமல், ஒப்புக்கு கைகளை மட்டும் ஆட்டி பேசிவிட்டு மேடையை விட்டிறங்கிச் சென்றார். இதனால் கடுப்பான ரசிகர்கள் பெரும் கலாட்டாவில் இறங்கினர்.

ஒரு சில போலீசார் இதைக் கட்டுப்படுத்த முயன்ற போது கூட்டமாக சேர்ந்து கொண்டு போலீசாரை தாக்கியது ரசிகர் கூட்டம் . பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் விரைந்து சென்று போலீசாரை காப்பாற்ற வேண்டி வந்தது.

சங்கவியின் வாகனத்தை வழிமறிக்கவும் ஒரு கும்பல் முற்பட தப்பி்த்தால் போதும் என்று ஓட்டம் பிடித்தார் அவர்.

அதன் பிறகு மெல்ல மெல்ல கலாட்டா அடங்கியது.

0 comments: