ஹைதியில் பள்ளிக்கூடம் கட்டும் ஷகீரா

பூகம்பத்தால் உருக்குலைந்து போயுள்ள ஹைதியில் பள்ளிக்கூடம் கட்ட முடிவ செய்துள்ளார் கொலம்பியாவைச் சேர்ந்த பாப் பாடகி ஷகீரா.

கரீபியத் தீவான ஹைதியில், ஜனவரி 12ம் தேதி சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஹைதி தீவே உருக்குலைந்து போயுள்ளது.

இதையடுத்த ஹாலிவுட் நட்சத்திரங்கள் பிரபலங்கள் ஹைதி தீவுக்காக நிதி திரட்டும் வேலையில் இறங்கியுள்ளனர். பல்வேறு உதவிகளையும் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கொலம்பியாவைச் சேர்ந்த பாப் பாடகி ஷகீராவும் ஹைதி மக்களுக்கு உதவ முன்வந்துள்ளார்.

ஹைதிக்கு தனி விமானத்தில் வந்த ஷகீரா, தலைநகர் போர்ட் ஆ பிரின்ஸில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்திற்கு விசிட் அடித்தார். அங்கு நூற்றுக்கணக்கான சிறார்களை சந்தித்துப் பேசினார். அவர்களுக்காக நடனம் ஆடி பாடல் பாடி மகிழ்வித்தார். பின்னர் அருகில் 50 ஆயிரம் பேர் தங்கியுள்ள ஒரு முகாமுக்குச் சென்று அங்கிருப்போரை சந்தித்த ஆறுதல் கூறினார்.

அங்கு அமெரிக்க நடிகர் சீன் பென்னும் வந்திருந்தார்.

பின்னர் ஷகீரா கூறுகையில், பேர்பூட் பள்ளியை மறு சீரமைத்துக் கட்டிக் கொடுக்க நான் முடிவு செய்துள்ளேன். எனது அறக்கட்டளை மூலம் இதைச் செய்து தரப் போகிறேன் என்றார்.

ஷகீரா நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் ஏற்கனவே கொலம்பியாவில் ஒரு பள்ளிக்கூடம் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அங்கு 6000க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: