நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த ஆதார செய்திகள் தலைமறைவாக இருந்தார் நித்யானந்தா. மேலும் தொடர் குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் வந்ததையடுத்து மடத்தின் பொறுப்பில் இருந்தும் நித்யானந்தா விலகினார். மத உணர்வை புண்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
தமிழகத்தில் நித்யானந்தா மீது கொடுக்கப்பட்ட புகார்கள் அனைத்தையும், கர்நாடக காவல்துறையிடம் தமிழக காவல்துறை ஒப்படைத்தது. இதையடுத்து பல்வேறு ஆசிரமங்கள் மற்றும் ஊர்களில் நித்யானந்த இருக்கிறாரா என்பதை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், நித்தியானந்த இமாச்சலபிரசேத்தில் தலைமறைவாக இருந்து வருவது பற்றி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக அங்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். நித்தியானந்தாவை கைது செய்ய, இமாச்சலபிரதேச போலீசாரின் உதவியையும் நாடினர். இதையடுத்து தான், நித்தியானந்தாவை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர். நித்யானந்தா ஜாமீனில் வெளிவரமுடியாதபடி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை கர்நாடகாவிற்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். இதையடுத்து, தேவைப்பட்டால், அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் கர்நாடகா போலீஸ் முடிவு செய்துள்ளது
0 comments:
Post a Comment