இந்தோனேசிய தீவுகளை விலைபேசிய நித்யானந்தா

நித்யானந்தாவுக்கு தென்இந்தியாவில் உள்ள தியான பீட கிளைகள் மற்றும் சுமார் 40 நாடுகளில் உள்ள ஆசிரமங்களிலும் தினமும் பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்த பணம் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த பணம் எங்குள்ளது என்று ஆய்வு நடக்கிறது.

தினமும் கோடிக்கணக்கில் பணம் கொட்டியதால் சிறிய தீவு ஒன்றை விலைக்கு வாங்க வேண்டும் என்று நித்யானந்தா ஆசைப்பட்டிருக்கிறார். அந்த தனி தீவில் தியான உலகத்தை உருவாக்க அவர் விரும்பினார். கடந்த 2008ம் ஆண்டு இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுளார் என்று தகவல்கள் வந்துள்ளன.


கனடா மற்றும் இந்தோனேசியா நாட்டு கடல் பகுதிக்கு அருகில் பல சிறிய தீவுகள் உள்ளன. அதில் அழகான ஒரு தீவு நித்யானந்தாவுக்காக பார்க்கப்பட்டுள்ளது.

நித்யானந்தாவின் சர்வதேச செயலாளர் சச்சிதானந்தா ஜெர்மனியில் உள்ள துருக்கி நாட்டு புரோக்கர் ஒருவர் மூலம் தீவை வாங்க பேச்சு வார்த்தை நடத்தினார். இதற்காக அமெரிக்க டாலரில் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் என்ன காரணத்தினாலோ அந்த தீவு நித்யானந்தாவுக்கு கிடைக்கவில்லை என்றாலும் சில மாதங்களுக்கு முன்பு எப்படி யாவது தியான உலகத்தை படைக்க வேண்டும் என்ற லட்சியத்தில் மீண்டும் பெரிய தீவு ஒன்றை வாங்க நித்யானந்தாவின் சீடர்கள் பேச்சு நடத்தியுள்ளார்கள்.

மும்பை தாக்குதல்:மே 3ல் தீர்ப்பு

பாகிஸ்தானிலிருந்து கடல் வழியாக வந்த கசாப், அவனது கூட்டாளி அபு இஸ்மாயில் மற்றும்மேலும் எட்டு தீவிரவாதிகள் மும்பையின் தாஜ் ஓட்டல், நாரிமன் இல்லம், ஓபராய் ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தினர்.

2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடத்தப்பட்ட இந்த கொடூர பயங்கரவாத தாக்குதல் வழக்கில் மே மாதம் 3ந் தேதி தீர்ப்பளிக்கப்படவுள்ளது. தீர்ப்புக்கு பிறகு சம்பவ இடங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட 24 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தை போலீசார் எரித்து அழிக்கவுள்ளனர்.

தாக்குதலின்போது, மூன்று இடங்களிலிருந்து வெடிக்காத 24 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு சாட்சியாக வைக்கப்பட்டது. தற்போது இவற்றை எரித்து அழிக்க போலீசாருக்கு நீதிமன்றம் கடந்த மாதம் அனுமதி வழங்கியது. ஆயினும் எந்த இடத்தில் அவை அழிக்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை.

இதனிடையே அக்கொடூர சம்பவத்தை நினைவுகூர்ந்த ஜமுனாவகேலா என்ற 50 வயது பெண்மணி, ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்த பிறகு தன்னுடைய 32 வயது மகனை தீவிரவாதி அஜ்மல் கசாப் சுட்டுக் கொன்றதை குறிப்பிட்டு அவனை இனியும் தாமதமின்றி தூக்கில் போட வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், கசாப்புக்கு எவ்வித கருணையும் காட்டப்படக்கூடாது என்று தெரிவித்தார். மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதி அஜ்மல் கசாப் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஐ.தேர்வுக்கு பயிற்சி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. ஆர்வமுடையோர் tmmk@tmmk.in என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்

நன்றி : தமுமுக

தஞ்சை தமிழ்ப் பல்கலை.யில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சை தமிழ்ப் பல்கலை கழகத்தில் கிராமப்புற பகுதி மாணவர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் இன்று (29ம்தேதி) நடக்கிறது என பல்கலைக்கழக பதிவாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பல்கலைக்கழக மான்யக்குழு நிதியுதவியுடன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இன்று 29 மற்றும் நாளை 30ம்தேதிகளில் கிராமப்புற பகுதி மாணவர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இன்று 29ம்தேதி ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டத்துடன் பி.எட். மற்றும் எம்.எட். படித்தவர்கள் பங்கேற்கலாம்.


30ம்தேதி கணிதம், வரலாறு, தாவரவியல், புவியியல் மற்றும் விலங்கியல் ஆகியவற்றில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டத்துடன் பி.எட், மற்றும் எம்.எட் படித்தவர்களும், டிடிஇடி படித்தவர்களும் இப்போது கல்வியியல் படித்துக் கொண்டிருப்பவர்களும் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்கள் அறிய 9842633753, 9952540048, 9486291561, 9245107548 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைகள் தெரிவிக்கஇலவச தொலைபேசி

நாகை மாவட்டத்தில் நூறுநாள் வேலை உறுதித்திட்டத்தின் கீழ் நடக்கும் பணி தகவல் மற்றும் புகார்களை இலவச போனில் தெரிவிக்கலாம்.இதுகுறித்து கலெக்டர் முனியநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நாகை மாவட்டத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகிறது. இதில் வேலை வாய்ப்பு பெறும் பயனாளிகள் திட்டம் குறித்த தகவல்கள் பெறுதல் மற்றும் புகார்களை மாவட்ட நிர்வாகத்திற்கு கட்டணமில்லாத இலவச போன்: 1299 எண்ணில் தெரிவிக்கலாம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் பற்றிய புகார்கள் மீது கலெக்டர் அலுவலகம் மூலம் உடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:
கொரட்டூர் பகுதி: ரயில்வே ஸ்டேஷன் ரோடு, பாரதி நகர், பிள்ளையார் கோவில் தெரு, மாணிக்கம் பிள்ளை தெரு, சாஸ்திரி ஸ்கொயர், காமராஜர் நகர், மலையத்தம்மன் கோவில் தெரு, நேரு நகர், பெருமாள் கோவில் தெரு, போத்தியம்மன் கோவில் தெரு.மாத்தூர் பகுதி: மாத்தூர், பெரிய மாத்தூர், எம்.எம்.டி.ஏ., அஜீஸ் நகர், மஞ்சம்பாக்கம், மாசிலாமணி நகர், அகர்கன் கல்லூரி, வடிபெரும்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்கள்.


செம்பியம் பகுதி: எம்.எச்.ரோடு மற்றும் கே.கே.ஆர்., அவென்யூ, வெற்றி நகர், திரு.வி.க., நகர், ஆண்டாள் அவென்யூ, சாந்தி, தணிகாசலம் நகர், குமரன் நகர்.
கிழக்கு தாம்பரம் பகுதி: கிழக்கு தாம்பரம், ஆதி நகர்.எஸ்.கே. நகர் பகுதி: ஜி.டி.கோர்ட், மூக்கர் நல்ல முத்த தெரு, செகண்ட் லைன் பீச், மூர் தெரு, ராஜாஜி சாலை, மண்ணடி தெரு, தம்பு செட்டி தெரு, மூக்கர் நல்ல முத்து தெரு அங்கப்பன் தெரு, லிங்கு செட்டி தெரு, செண்ட் லைன் பீச், போஸ்ட் ஆபிஸ் தெரு, ஆதியப்பன் தெரு, ரெட்டி ராம் தெரு, சார்ட்டன் முத்தையா தெரு, ராமானுஜ ஐயர் தெரு, ஐயர் முதலி தெரு, சந்தரப்பா தெரு.பள்ளியப்பன் தெரு, பள்ளியப்பன் சந்து, பெருமாள் முதலி தெரு, மின்ட் தெரு, வினாயக முதலி தெரு, யானை வெனி, வானியர் தெரு, சிங்கன நாயக்கன் தெரு, பெரியண்ணா மேஸ்திரி தெரு, ஆர்மெனியன் தெரு, செம்புதாஸ் தெரு, சத்யா நகர், தீவுத்திடல், கடல் படை அதிகாரிகள் குடியிருப்பு, கடலோரகாவல் படை குடியிருப்பு, மார்ஷலிங் யார்டு, ரிசர்வ் வங்கி, நேவி நகர், ராணுவ குடியிருப்பு.


செயின்ட் தாமஸ் பகுதி: பட்லேன், பட்ரோடு, மிலிட்டரி குடியிருப்பு, மக்ஜின் ரோடு, செயின்ட் தாமஸ் மவுண்ட் மருத்துவமனை, ராமர் கோவில் தெரு, மீனம்பாக்கம், மவுண்ட் பூந்தமல்லி ரோடு, நந்தம்பாக்கம் மெயின் ரோடு, வுட் கிராக் கவுண்டரி, பர்மா காலனி, நசரத்புரம், ஸ்ரீபுரம் காலனி, ஆலந்தூர், போலீஸ் ஆபிசர் காலனி.

ரசிகர்களுக்கு நடிகர் அஜீத் வேண்டுகோள்

நடிகர் அஜீத் தனது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்பெயின் நாட்டிலிருந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது,

என் மீது அன்பும், அபிமானமும் கொண்ட ரசிகர்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது பார்முலா 2 சாம்பியன் போட்டியில் பங்கேற்பதற்காக நான் ஸ்பெயின் வந்துள்ளேன். எனவே மே 1ந் தேதி என்னுடைய பிறந்த நாளின்போது நான் சென்னையில் இருக்க வாய்ப்பில்லை.

ஆகையால் ரசிகர்கள் பிறந்த நாளின்போது என்னுடைய இல்லத்துக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் ஆடம்பரமான முறையில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டால் மகிழ்ச்சியடைவேன் என்று அஜீத் கூறியுள்ளார்.

மே -20ல் ௰த் தேர்வு முடிவுகள்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20-ந்தேதி வெளியாக வாய்ப்பு உள்ளது என்று கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்துவிட்டது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8 லட்சத்து 56 ஆயிரத்து 966 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர்.இதில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 523 பேர் மாணவர்களும், 4 லட்சத்து 34 ஆயிரத்து 443 பேர் மாணவிகளும், அடங்குவார்கள்.

மே 10-ல் பிளஸ்-2 தேர்வு முடிவுகள்

பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடந்தது. 6 லட்சத்து 89 ஆயிரத்து 687 மாணவ -மாணவிகள் தேர்வு எழுதினர். மாணவர்கள் 3 லட்சத்து 22 ஆயிரத்து 381 பேரும், மாணவிகள் 3 லட்சத்து 67 ஆயிரத்து 306 பேரும் தேர்வு எழுதியுள்ளனர்.

விடைத்தாள் திருத்தும் பணி முடிந்துவிட்டன. மதிப்பெண்கள் பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. கிண்டியில் உள்ள டேட்டா சென்டரில் கம்ப்யூட்டரில் மதிப்பெண்கள் பதிவு செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

என்ஜினீயரிங், மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு வசதியாக பிளஸ்-2 தேர்வு முடிவுகளை கடந்த ஆண்டுகளை விட இந்த வருடம் முன் கூட்டியே வெளியிட தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. மருத்துவ, என்ஜினீயரிங் கவுன்சிலிங் வழக்கத்தை விட முன்கூட்டியே நடத்த திட்டமிட்டு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

உயர் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த காலங்களை விட முன் கூட்டியே நடைபெறுகிறது. இதை கருத்தில் கொண்டு பிளஸ்-2 தேர்வு முடிவை மே 10-ந் தேதி வெளியிடலாம் என்று அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

ரஞ்சிதா - நித்யானந்தா செல்போன் உரையாடல்

நித்யானந்தா கைது செய்யப்பட்டு தற்போது போலீஸ் காவலில் இருக்கிறார். போலீசார் அவரிடம் கடந்த 5 நாட்களாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே நித்யானந்தா சம்பந்தப்பட்ட ஆபாச காட்சிகள் வெளியாக முக்கிய காரணமாக இருந்த அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பனை பெங்களூருக்கு வரவழைத்து போலீசார் வாக்குமூலத்தை பெற்று இருக்கிறார்கள்.

அடுத்ததாக நித்யானந்தாவுடன் ஆபாச காட்சியில் இருந்த நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த கர்நாடக சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. ஆபாச காட்சிகள் வெளியான பிறகு நடிகை ரஞ்சிதாவின் சென்னை வீடு பூட்டப்பட்ட நிலையில் இருக்கிறது.

இதையடுத்து கர்நாடக போலீசார் அவரை தேடிப்பிடித்து விசாரணை நடத்த உள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தினால் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று போலீசார் எதிர்பார்க்கிறார்கள்.

ரஞ்சிதாவுக்கு ஆசிரமத்தில் அதிக செல்வாக்கு இருந்துள்ளது. நித்யானந்தா அறைக்கு எப்போது வேண்டுமானாலும் அவர் சென்று வர விசேஷ அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

பண விவகாரங்கள் மற்றும் ஆசிரமத்தில் மர்மமாக நடந்த அத்தனை விஷயங்களும் ரஞ்சிதாவுக்கு முழுமையாக தெரியுமாம். நித்யானந்தாவுக்கு எதிராக எதுவும் சொல்ல வேண்டாம் என்று ஆசிரமத்தில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டதாகவும் அதற்காக பேரம் பேசப்பட்டு இருக்கலாம் என்றும் கர்நாடக போலீசார் சந்தேகிக்கின்றனர். அதனால்தான் அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.


ரஞ்சிதாவை பிடித்து விசாரித்தால் நித்யானந்தா பற்றி மேலும் பல திடுக் கிடும் உண்மைகள் வெளிவரும் என்று போலீசார் நம்புகின்றனர். நித்யானந்தா உண்மைகளை மறுத்தால் அவரைப் பற்றிய மர்மங்களை ரஞ்சிதா மூலம் வெளிக்கொண்டு வருவோம் என்றும், இமாசலப்பிரதேசத்தில் நித்யானந்தா தங்கி இருந்த போது ரஞ்சிதாவுடன் 175 தடவை செல்போனில் பேசியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஞ்சிதா பதுங்கி உள்ள இடத்தை நெருங்கி விட்டதாகவும், ஓரிரு தினங்களில் பிடித்து விடுவோம் என்றும் கர்நாடக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திடீர் திட்டம்

மனித உரிமை அமைப்புகளின் நெருக்கடியை அடுத்து, பெண்களின் திருமண வயதை 16 ஆக நிர்ணயிப்பது குறித்து, சவுதி அரேபிய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.சவுதி அரேபியாவில், கடந்தாண்டு 11 வயது சிறுமிக்கு, 80 வயதான முதியவர் ஒருவரை, அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்த ஒரு சில மாதங்களிலேயே அந்த சிறுமி, தனது கணவரை விட்டு பிரிந்து, தன் வீட்டுக்கு வந்து விட்டார். முதியவரிடமிருந்து, விவகாரத்தும் பெறப்பட்டு விட்டது.


இந்த சம்பவத்தை அடுத்து, பெண்களின் திருமண வயதை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை, சவுதி அரேபியாவில் வலுத்து வருகிறது. கடந்த 2005ல் சவுதி மன்னர் அப்துல்லாவால் அமைக்கப்பட்ட மனித உரிமை ஆணையமும், இதே கருத்தை தெரிவித்தது.இதைத் தொடர்ந்து, பெண்களின் திருமண வயதை 16 ஆக அதிகரித்து, அதை சட்டமாக்க, சவுதி அரேபியா அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக, மூன்று கமிட்டிகளை அரசு அமைத்துள்ளது.


இந்த கமிட்டியில் இடம் பெற்றுள்ளவர்கள், குழந்தை நல மருத்துவர், மத அறிஞர்கள், உளவியல் நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி, அதன் அடிப்படையில், இதற்கான முடிவை விரைவில் அறிவிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.சவுதி அரேபியாவிலுள்ள ஒரு தரப்பினர்,'பல ஆண்டுகளுக்கு முன், குழந்தை திருமணங்கள் அதிகமாக நடந்துள்ளன. தற்போது இதற்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை' என்கின்றனர்.சவுதி அரேபியாவை சேர்ந்த ஷேக் அப்துல்லா அல்-மனே கூறுகையில், 'பழங்காலத்திலிருந்த சூழ்நிலை வேறு, தற்போதுள்ள சூழ்நிலை வேறு' என்றார்.

நாகூர் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கிராக்கி : ஒரே நாளில் 16 நாள் டிக்கெட்டுகள் முன்பதிவு

கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை எழும்பூரிலிருந்து நாகூருக்கு, 16 நாட்களுக்கான இரண்டாம் வகுப்பு மற்றும் 'ஏசி' மூன்றாம் வகுப்பு டிக்கெட்டுகள் அனைத்தும் நேற்று ஒரே நாளில் முன்பதிவு செய்யப்பட்டது. இந்த ரயிலுக்கு பயணிகளிடம் உள்ள அமோக வரவேற்பால், மேலும் இரண்டு பெட்டிகள் இணைத்து இயக்கப்பட ரயில்வே அதிகாரிகள் ஆலோசித்துள்ளனர்.


சென்னை எழும்பூரிலிருந்து விழுப்புரம் - மயிலாடுதுறை - தஞ்சை வழியாக நாகூருக்கு, கடந்த 23ம் தேதியிலிருந்து கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலுக்கு நாளுக்கு நாள் மக்கள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்த ரயில், சென்னை எழும்பூரிலிருந்து நாகூருக்கு இரண்டாம் வகுப்பு (தூங்கும் வசதி)'ஏசி' மூன்றாம் வகுப்பு மற்றும் 'ஏசி' இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகள் நேற்று முன்தினம் இரவு நிலவரப்படி, மே 8ம் தேதி வரை மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த ரயிலில் சென்னை எழும்பூரிலிருந்து நாகூருக்கு பயணம் செய்ய இரண்டாம் வகுப்பு (தூங்கும் வசதி) மற்றும் 'ஏசி' மூன்றாம் வகுப்பு டிக்கெட்டுகள் அனைத்தும் வரும் 24ம் தேதி வரை (16 நாட்களுக்கு) நேற்று ஒரே நாளில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் மே 17ம் தேதி வரை 'ஏசி' இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.


இந்த ரயிலில் நாகூரிலிருந்து சென்னை எழும்பூருக்கு வரும் மே 12 மற்றும் 13ம் தேதிகளைத் தவிர வரும் மே 27ம் தேதி வரை இரண்டாம் வகுப்பு (தூங்கும் வசதி) டிக்கெட்டுகளும், வரும் மே 12, 13 மற்றும் 14ம் தேதிகளைத் தவிர வரும் மே 17ம் தேதி வரை 'ஏசி' மூன்றாம் வகுப்பு டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 'ஏசி' இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகள் வரும் மே 6ம் தேதியைத் தவிர வரும் மே 10ம் தேதி வரை அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.


இந்த ரயிலில் சென்னை எழும்பூரிலிருந்து தஞ்சைக்கு வரும் மே 24ம் தேதி வரை இரண்டாம் வகுப்பு (தூங்கும் வசதி) டிக்கெட்டுகளும், மே 18ம் தேதி வரை 'ஏசி' மூன்றாம் வகுப்பு டிக்கெட்டுகளும், வரும் மே 17ம் தேதி வரை 'ஏசி' இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயிலுக்கு மக்களிடம் கிடைத்துள்ள அமோக வரவேற்பையொட்டி கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைத்து இயக்கவும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டத்தில் 'பந்த்':பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உரம் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பொது வேலை நிறுத்தம் நடந்தது. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உரம் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளின் பொருளாதார கொள்கையை எதிர்த்தும் நேற்று நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடந்தது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட ஆயிரத்து 189 பேரும், ரயில் மறியலில் ஈடுபட்ட 275 பேரும் கைது செய்யப்பட்டனர்.


திருவாரூரில் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.காமராஜ், நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி, மா.கம்யூ. மாவட்ட செயலாளர் நாகராஜன், இந்திய கம்யூ. சார்பில் மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் வை.செல்வராஜ் ஆகியோர் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 126 பெண்கள் உட்பட 262 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் ரயில் மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் திருவாரூரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.


ஒருசில மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன. குறிப்பிட்ட வழித்தடங்களில் குறைந்த அளவிலான பஸ்கள் இயக்கப்பட்டன. அரசு அலுவலகங்கள், வங்கிகள் இயங்கின. இதேபோல் மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம், நன்னிலம் உட்பட அனைத்துபகுதிகளிலும் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மன்னார்குடி அருகே சவளக்காரன், கோட்டூர், பெருகவாழ்ந்தான், தட்டாங்கோவில், திருமக்கோட்டை, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் சாலைமறியல் நடந்தது. மேலும் திருத்துறைப்பூண்டி பகுதியில் ரயில் மறியல் மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட், நெடும்பலம், கட்டிமேடு, பாமணி, வேளூர், மணலி, ஆலத்தம்பாடி உட்பட பல இடங்களில் சாலைமறியல் நடந்தது.


நீடாமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் பஸ் மறியலில் ஈடுபட்ட சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த பொது வேலை நிறுத்தத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கொரடாச்சேரி, முகந்தனூர், அம்மையப்பனில் சாலைமறியல் செய்த 220 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கொரடாச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் மறியலில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர். நாகை: நாகை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூ., கட்சிகள் சார்பில் ரயில் மறியலில் ஈடுபட்ட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.


நாகை ரயில்வே ஸ்டேஷனில் மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் முருகையன், இந்திய கம்யூ., மாவட்ட நிர்வாகக்குழு செல்வம் ஆகியோர் தலைமையில் ரயில் மறியலில் ஈடுபட்ட 175 பேரை இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷனில் சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் நாகைமாலி, இந்திய கம்யூ., வட்ட செயலாளர் இடும்பையன் ஆகியோர் தலைமையில் ரயில் ஈடுபட்ட 125 பேரை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டத்தில் அரசு பஸ்கள், அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கின. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில் பகுதிகளில் அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் வழக்கம்போல் இயங்கின. மணல்மேடு, இளந்தோப்பு, பட்டவர்த்தி, கடலங்குடி, சீர்காழி, பொறையார், திருமருகல், கொள்ளிடம் உட்பட பகுதிகளில் கடைகள் மூடப்பட்டிருந்தன. மேலும் வேதாரண்யத்தில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.


காரைக்கால்: காரைக்கால் நகரில் 95 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோக்களும் இயங்கவில்லை. அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. காரைக்காலில் உள்ள 2 திரையரங்குகளில் காலை மற்றும் மதியக் காட்சிகள் ஓடவில்லை.மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கின. திருநள்ளாறு, நெடுங்காடு, கோட்டுச்சேரி, திருப்பட்டினம் உட்பட கொம்யூன் பகுதிகளிலும் 95 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. முக்கியமான இடங்களில் ஒரு சில மருந்துக்கடைகள் மட்டுமே திறந்திருந்தன. தமிழகம், புதுச்சேரி அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. காரைக்கால் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே சாலை மறியல் நடத்த முயன்ற 213 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுதலை செய்தனர். காரைக்கால் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே புளியங்கொட்டை சாலையில் சென்னை சென்ற தமிழக அரசு பஸ் மீது கல்வீசப்பட்டதில் முன்புற கண்ணாடி சேதமடைந்தது.

ஜுலை 4 ஒடுக்கபட்டோர் உரிமை மாநாடு சிறக்க அள்ளித்தாருங்கள்!

உங்களுடைய பூரண உடல் நலத்திற்கும் உயரிய ஈமானுக்கும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.


ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாட்டுப் பணிகள் எல்லாம் வல்ல இறைவனின் மாபெரும் கிருபையால் சிறப்பாக நடந்து வருகின்றன. கடந்த கால அனுபவங்களை படிப்பினையாகக் கொண்டு இம்மாநாட்டில் தவறுகள் முற்றிலும் ஏற்படாதவாறு இன்ஷா அல்லாஹ் கண்காணித்துக் கொள்ளவேண்டும் என முடிவெடுக்கப்பட்டு பணிகள் துரிதமுடன் நடந்து வருகின்றன. மாநாட்டில் 15 லட்சம் மக்கள் பங்குபெறுவதற்குள்ள அனைத்து முயற்சிகளும் இறைவன் அருளால் நடந்து வருகின்றன.


கும்பகோணம், வல்லம் மாநாடுகளுக்குத் தாங்கள் எடுத்துக கொண்ட முயற்சிகளைவிட இன்னும் வீரியமாக நம் சகோதரர்கள் மத்தியில் எடுத்துச் சென்று, இம்மாநாட்டின் அவசியத்தை விளக்கி, நம் சகோதரர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவரும் கலந்;து கொள்வதற்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


இம்மாநாடு தமிழகத்துடன் நின்றுவிடாமல், இந்திய அளவில் ஆளும் வர்க்கத்தையும், சமூக ஆர்வளர்கள், வல்லுணர்கள், வெளிநாடு மற்றும் தாயகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களின் கவனத்தையும் முழுமையாக ஈர்த்து, இந்த சமுதாயம் இனிமேலும் உறங்கத் தயாரில்லை, தகுந்த இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கின்றது என்று பறைசாற்றும் விதமாக இன்ஷா அல்லாஹ் மிகச் சிறப்பாக நடைபெற இருக்கின்றது. இம்மாநாட்டை நாம் எதிர்பார்ப்பது போல் மிகச்சிறப்பாக நடத்துவதற்கு பெரும் பொருளாதாரம் அவசியமாக உள்ளது.


நாம் எடுத்துக்கொண்டுள்ள பெறும் முயற்சிக்கு நீங்கள் அளிக்கக் கூடிய பொருளாதார உதவிதான் மாநாட்டின் வலிமையை பறை சாற்றும். நாம் எந்த ஒரு வெளிநாட்டு அரசுகளிடம் இருந்தோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்தோ எந்தவித உதவியையும் பெறுவதில்லை என்ற கொள்கையை நியதியாகக் கொண்டுள்ளது நாம் அறிந்ததே. ஆக இதன் உறுப்பினர்களும், ஆர்வலர்களும், அபிமானிகளும் கொடுக்கக் கூடிய பொருளாதார உதவியைக் கொண்டுதான் நமது ஜமாஅத் செயல்பட்டு வருகின்றது.

ஆகையால் கருணை உள்ளம் கொண்ட சகோதரர்கள் தங்களது பங்களிப்பை அடியிற்குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு உங்கள் பொருளாதார உதவியை அளித்து இம்மாநாடு இறைவன் அருளால் சிறப்பாக நடைபெற உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்

நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். அல்குர்ஆன் 5-2

அனுப்பவேண்டிய முகவரி:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கணக்கு எண்; : 788274827. இந்தியன் வங்கி, மண்ணடி கிளை, சென்னை – 01

உங்கள் டி. டி மற்றும் மணியாடர்களை அனுப்ப வேண்டிய முகவரி:
மாநில தலைவர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மாநில தலைமையகம்
30, அரண்மனைக்காரன் தெரு, மண்ணடி, சென்னை – 01
வஸ்ஸலாம்

குறிப்பு : நீங்கள் அனுப்பக் கூடிய உதவியை ஜூலை 4, மாநாடு என்று குறிப்பிடவும்

இப்படிக்கு
பொதுச் செயலாளர்
(9952035222)

நன்றி : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

கோடைகால நீச்சல் பயிற்சி: தஞ்சையில் மே1ல் துவக்கம்

தஞ்சை சத்யா ஸ்டேடியத்தில் உள்ள குந்தவை நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக் கொள்ளுதல் என்ற திட்டத்தில் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி வகுப்புகள் மே ஒன்று முதல் 14ம் தேதி வரை நடக்கிறது.இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள குறைந்த பட்சம் எட்டு வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். 16 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 400 ரூபாயும், 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 500 ரூபாயும் கட்டணமாக செலுத்தி நீச்சல் கற்றுக் கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கெஅõள்ளும் பள்ளி மாணவ, மாணவியர்கள் தங்க பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை நேரில் அல்லது ஃபோன் எண் 04362 235633, 9940341496 மற்றும் மாவட்ட நீச்சல் பயிற்றுனர் 9444113813 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு விபரங்களை அறியலாம், என மாவட்ட விளையாட்டு அலுவலர் செல்வகுமார் தெரிவித்தார்.

'ஹஜ்' பயணிகளுக்கு உணவு வழங்க வேண்டும்: இந்திய தவ்ஹித் செயலாளர் பேச்சு

ஹஜ் பயணம் செல்லும் முஸ்லிம்களுக்கு உணவுகள் வழங்க, மத்திய அரசு முன்வர வேண்டும்,'' என, இந்திய தவ்ஹித் மாநில செயலாளர் செங்கிஸ்கான் பேசினார்.


ராமநாதபுரத்தில் தவ்ஹித் ஜமாத் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் முஷமிஹார் தலைமையில் நடந் தது. மாநில செயலாளர் ஜெங்கிஸ்கான் பேசியதாவது: 'ஹஜ்' புனித பயணம் மேற்கொள்ளும் முஸ் லிம்களுக்கு, உணவுகள் வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் படி முஸ்லிம்களுக்கு 15 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். 13 ஆண்டுகளாக விசாரணை கைதிகள் என்ற பெயரில் சிறையிலுள்ள, அப்பாவி முஸ் லிம்களை விடுவிக்கவேண்டும்.


ராமநாதபுரம்-கீழக்கரை ரோட்டில் உள்ள ரயில்வே கிராசங்கில் மேல்மட்ட பாலம் அமைக்க வேண்டும், என்றார். மாவட்ட செயலாளர் ஹசன்அலி, பொரு ளாளர் ஹாஜா, துணை தலைவர் சிராஜூதீன், துணை செயலாளர் ரஹித் அகமது ஆகியோர் பங்கேற்றனர்.

எஸ்.ஐ. தேர்வு: இலவச பயிற்சி

தமிழ்நாடு காவல்துறையில் ஆண், பெண் சார்பு ஆய்வாளர் பதவிகளுக் கான தேர்வுக்கு, சைதை சா.துரைசாமியின் மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்., கல்வியகம் சார்பில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் நடத்தும், தமிழ்நாடு காவல் துறையின் ஆண்-பெண் சார்பு ஆய்வாளர் கள் பதவிக்கான, நேரடி நியமன தேர்வு மூலம் மொத்தம் 1095 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.


மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்., கல்வியகம் சார்பில், எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இத்தேர்வில் பங்குபெறும் தகுதியுள்ள மாணவர்கள், தொலைபேசி எண்: 044 - 2435 8373, 98401 06162 மற்றும் எண்: 28, முதல் பிரதான சாலை, சி.ஐ.டி நகர், சென்னை - 600 035 என்ற முகவரியிலும் விண்ணப்பிக்கலாம் என்று மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்., கல்வியகம் மாநில தேர்வுகள் ஒருங்கிணைப்பாளர் சாம் ராஜேஸ் வரன் அறிவித்துள்ளார்.

புகையிலை பொருள் உபயோகம்: ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இறப்பு

புகையிலைப் பொருட்கள் உபயோகத்தால் ஆண்டுக்கு 10 லட்சம் இந்தியர்கள் இறப்பதாக புகை(யிலை)யில்லா சென்னை திட்டத் துவக்க விழாவில் தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்களிடையே புகையிலைப் பொருட்கள் உபயோகிப்பால் ஏற்படும் தீங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் உபயோகத்தை குறைப்பதற்கான, 'புகை(யிலை)யில்லா சென்னை' திட்ட துவக்க விழா நேற்று நடந்தது. விழாவில், அமைச்சர் பன்னீர்செல்வம் சிறப்பு தபால் உறையை வெளியிட்டார். பொது சுகாதார இயக்குனர் இளங்கோவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு விருதுகளை வழங்கினார். சுகாதார பணியாளர் கையேட் டினை வெளியிட்டார். சட்ட நடவடிக்கை வாகனத்தை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: உலகளவில் ஆண்டுக்கு 50 லட்சம் பேரும், இந்தியாவில் 10 லட்சம் பேரும், தமிழகத்தில் ஒரு லட்சம் பேரும், புகையிலைப் பொருட்கள் உபயோகிப்பதால் இறக்கின்றனர். ஒரு நாளைக்கு 2,500 பேர் புகையிலைப் பொருட் கள் உபயோகிப்பால் இறக்கின்றனர். தினமும் 5,500 பேர் புகையிலைப் பொருட்கள் உபயோகிப்பதற்கு பழகுகின்றனர். புகைப்பவர்களால், அந்த பழக் கம் இல்லாத 1,000 பேர் ஆண்டுதோறும் இறக்கின்றனர்.


பள்ளி மாணவர்கள் புகையிலை பழக்கத்திற்கு எளிதில் ஆட்படுகின்றனர். பார்க்கும் போதே வாங்க வேண்டும் என்ற ஆசையை தூண்டும் விதமாக, புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. பெட்டிக் கடைகளில் இத்தகைய விற்பனை குறைக்கப் பட்டுள்ளது. அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த சட்டத்தால், பொது இடத்தில் புகைப்பவர்கள் பயந்து கொண்டே புகைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. போலி மருந்து, கலப்பட உணவுப் பொருட்களுக்கு எதிராக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையால், எப்படி அது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற் பட்டுள்ளதோ அதுபோன்ற விழிப்புணர்வு, புகை பிடிக்கும் பழக்கத்திற்கு எதிராகவும் ஏற்பட் டுள்ளது.


இதனால், புகைப்பவர்கள் பயந்து கொண்டே, மறைவான இடங்களுக்கு சென்று புகை பிடிக்கின்றனர். புகையிலை இல்லா சென்னை திட்டத்தை, சிங்கார சென்னை திட்டத்தின் ஒரு பகுதியாக கருதி, வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார். நிகழ்ச்சியில் மேயர் சுப்ரமணியம், கவர்னரின் முதன்மைச் செயலர் ரமேஷ்ராம் மிஸ்ரா, சுகாதாரத்துறை செயலர் சுப்புராஜ், சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர் ராமானுஜம், காசநோய் மற்றும் நுரையீரல் நோய்களுக்கு எதிரான, பன்னாட்டு கூட்டமைப்பின் தென்கிழக்கு ஆசியா அலுவலக இயக்குனர் நெவின் வில்சன் உள்ளிட்டோர் பங்கேற் றனர்

எதிர்க்கட்சிகளுக்கு மக்களிடம் ஆதரவு இல்லை

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை உயர்வை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் நேற்று நடத்திய 'பந்த்'க்கு மக்களிடம் ஆதரவு இல்லை. கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களை தவிர, மற்ற மாநிலங்களில் சகஜநிலை நிலவியது. தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் நடத்திய 'பந்த்' கிழிந்து போனது.


பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை, மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் உயர்த்தியது. இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதை மத்திய அரசு ஏற்கவில்லை. இதையடுத்து, இடதுசாரி கட்சிகள் தலைமையில், அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட 13 கட்சிகள், பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, நேற்று நாடு தழுவிய 'பந்த்'க்கு அழைப்பு விடுத்திருந்தன. நேற்று காலை 6 மணிக்கு 'பந்த்' துவங்கியது. இடதுசாரி கட்சிகள் ஆளும் மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா மாநிலங்களில் பந்த் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டது. இந்த மாநிலங்களில் பஸ், ரயில் மற்றும் விமான போக்குவரத்து முடங்கியது.கடைகள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மூடிக் கிடந்தன.


கோல்கட்டா, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் வீதிகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. இந்த மாநிலங்களில் ஆட்டோ, டாக்சி போன்றவையும் இயங்கவில்லை.'பந்த்' காரணமாக மேற்கு வங்கத்தில் மட்டும் 500 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக, இந்திய வர்த்தக கூட்டமைப்பின் துணைத் தலைவர் ஜெயந்த் ராய் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, மாவோயிஸ்ட்களும் நேற்று 'பந்த்' நடத்தினர். மிட்னாபூர் மாவட்டத்தில் ரயில் தண்டவாளங்களை இவர்கள் குண்டு வைத்து தகர்த்தனர்.


ஓரளவு பாதிப்பு :


உ.பி., ஒரிசா, பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் 'பந்த்'திற்கு ஓரளவு வரவேற்பு இருந்தது. இருந்தாலும், முழு பாதிப்பு ஏற்படவில்லை. உ.பி.,யில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ், தனது ஆதரவாளர்களுடன் கைது செய்யப்பட்டார். உ.பி.,யில் நடந்த போராட்டத்தின்போது, மூன்று பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.பீகாரில் 'பந்த்'திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட லோக்ஜன சக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் உட்பட 4,000 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திராவிலும், தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம் நடத்தியதால், ஒரு சில கடைகள் மூடப்பட்டு இருந்தன.


தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, இமாச்சல், ராஜஸ்தான், டில்லி, ம.பி., காஷ்மீர் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் 'பந்த்' திற்கு மக்களிடையே சுத்தமாக ஆதரவு இல்லை. ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து வழக்கம்போல் இயங்கியது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறந்திருந்தன. பெரிய அளவில் வன்முறை சம்பவங்களும் நடக்கவில்லை. விமான சேவையும் பாதிக்கப்படவில்லை. ஆட்டோ, டாக்சிகள் வழக்கம் போல் இயங்கின. ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகள் நேற்று அழைப்பு விடுத்திருந்த 'பந்த்' பெரும்பாலான மாநிலங்களில் கிழிந்து போனது.


தலைவர்கள் 'மிஸ்சிங்!' :


விலைவாசி உயர்வைக் கண்டித்து அ.தி.மு.க., - கம்யூ., உள்ளிட்ட கட்சிகள், 'பந்த்' அறிவித்திருந்தன. மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூ., கட்சியினர் தமிழகம் முழுவதும் பல இடங்களில் ரயில், பஸ் மறியல் போராட்டங்களை நடத்தினர். ஆனால், எப்போதும் போராட்டங்களில் தலைமையேற்று நடத்தும் கட்சியின் மாநிலச் செயலர்கள், இந்த முறை பங்கேற்கவில்லை. இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டுமே பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


'பந்த்'தில் பங்கேற்காத தொழிற்சங்கத்தினர் :


தமிழகத்தில், 'பந்த்'திற்கு அழைப்பு விடுத்த முக்கியக் கட்சி அ.தி.மு.க., தான். ஆனால், சென்னையில் அக்கட்சியின் அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மட்டுமே வேலைக்குச் செல்லாமல் புறக்கணித்தனர். அத்தொழிற்சங்கத்தின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களும் வழக்கம்போல் வேலைக்குச் சென்றிருந்தனர். பொதுமக்களிடம் கெட்ட பெயர் ஏற்படக் கூடாது என்பதற்காக இந்த நடைமுறையை பின்பற்றியதாக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறினர்.

சர்வதேச போதை கடத்தல்: இந்தியர்களுக்கு பிரிட்டனில் சிறை

போதை கடத்தலுக்கு உடந்தையாக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு பேர் பிரிட்டனில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.பிரிட்டன் சிறையின் முன்னாள் நிர்வாகியாக இருந்தவர் ஜோகிந்தரநாத் ராஜ்கூமர் (57). இவரது மகன் சுனில் ராஜ்கூமர் (25). சர்வதேச போதை கடத்தலில் கைதேர்ந்தவன் அந்தோணி ஸ்பென்சர். ஹாலந்திலிருந்து பிரிட்டனுக்கு போதை கடத்துவதில் ஸ்பென்சருடன் ஜோகிந்தர், ராஜ் உள்ளிட்ட ஏழு பேர் உடந்தையாக இருந்து செயல்பட்டுள்ளனர்.


சிமென்ட் கலவை இயந்திரம் என்ற பெயரில் அத்துடன் உயர் ரக போதை பொருட்களையும் இவர்கள் பிரிட்டனுக்கு கடத்தி வந்துள்ளனர்.ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள போதைக் கிடங்கை ராஜ் பராமரித்து வந்தார். இங்குள்ள தோட்டத்தில் குழி தோண்டி 140 கிலோ எடையுள்ள உயர் ரக அபின் போதை மருந்தை இவர்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றம் தொடர்பாக, கடந்த ஆண்டு நெதர்லாந்திலிருந்து ஸ்பென்சர், பிரிட்டனிடம் ஒப்படைக்கப்பட்டான்.


இந்த வழக்கை, பிர்மிங்காம் கோர்ட் விசாரித்து, ஏழு பேருக்கும் சிறை தண்டனை அளித்துள்ளது. இதில், ஜோகிந்தரநாத்துக்கு 3.9 ஆண்டு சிறையும், ராஜ்கூமருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது.

துபை மண்டலம் நடத்தும் 5வது மாபெரும் இரத்ததான முகாம்

மே-5 உயர்நீதிமன்றம் நோக்கி முஸ்லிம்கள் பேரணி

இன்று பஸ்கள் வழக்கம் போல் இயங்கும்: போலீஸ் கமிஷனர்

இன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில், பஸ்கள் வழக்கம் போல் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடைகளை மூட வலியுறுத்துவோர் கைது செய்யப்படுவார்கள்,'' என்று கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


விலைவாசி உயர்வைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளின் சார்பில் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபு நிருபர்களிடம் கூறியதாவது:நாளை (இன்று) நடைபெறும் வேலை நிறுத்தத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது. அதற்கேற்ப சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


நகரின் எந்த பகுதியிலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க ஏராளமான ரோந்து வாகனங்கள் இயக்கப்படும். இரண்டு ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பால் வண்டி, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், அரசு, தனியார் பஸ்கள் வழக்கம் போல் இயங்க தக்க பாதுகாப்பு வழங்கப்படும். பஸ்களை ஓட விடாமல் தடுப்பவர்கள், கடைகளை அடைக்க வலியுறுத்துபவர்கள் என, நகரின் மொத்த இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் கைது செய்யப்படுவார்கள்.இவ்வாறு, அவர் கூறினார்.

இன்று நடக்கும் 'பந்த்' மக்களுக்கு எதிரானது: தங்கபாலு

'எதிர்க்கட்சிகளால் நாளை (ஏப்.27) நடத்தப்படும் 'பந்த்' மக்களுக்கு எதிரானது, '' என தமிழக காங்., தலைவர் தங்கபாலு கோவையில் நிருபர்களிடம் கூறினார்.தமிழ்நாடு காங்., சேவாதள தொண்டர்களுக்கான மாநில பயிற்சி முகாம், போத்தனூரில் நேற்று துவங்கியது.


முகாமில் நிருபர்களிடம் தங்கபாலு கூறியதாவது: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாளை (இன்று) சில கட்சிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. இரு அரசுகளின் செயல்பாடும் குறை கூற இயலாதவாறு உள்ளது. அரசுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில், சம்பந்தமே இல்லாத சில கட்சிகளை சேர்த்துக்கொண்டு இந்த போராட்டத்தினை அறிவித்துள்ளனர். மக்கள் பிரச்னைக்காக சட்டசபையிலும், லோக்சபாவிலும் ஜனநாயக ரீதியாக விவாதிக்க தயாராக இல்லாதவர்கள் இந்த 'பந்த்'க்கு அழைப்பு விடுத்துள்ளனர். இது மக்களுக்கு எதிரான ஒன்றாகும்.


பிரபாகரன் தாயார் தமிழகத்தில் சிகிச்சை பெற எந்த அமைப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கவில்லை. தமிழக அரசுக்கும் கடிதம் அனுப்பவில்லை. அவர் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தை பயன்படுத்தி, சிலர் குறுக்கு வழியில் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.கார்த்தி சிதம்பரம், மாநகர் மாவட்ட சேவாதள தலைமை அமைப்பாளர் தங்கம் பழனிசாமி, அகில இந்திய அமைப்பாளர் மத்நாயக், கங்காதரராவ், டென்னிஸ் செல்வராஜ், செல்லப்பா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் இன்று 'பந்த்' போராட்டத்தை சமாளிக்கஒரு லட்சம் போலீஸ்

Front page news and headlines today

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து, எதிர்க்கட்சிகள் அறிவித்த நாடு தழுவிய ஒரு நாள், 'பந்த்' இன்று நடக்கிறது. தமிழக போராட்டத்திற்கு தலைமையேற்றுள்ள அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், 'பந்த்'தை வெற்றி பெற வைக்க மும்முரமாகக் களமிறங்கியுள்ளன. அதே நேரத்தில், எதிர்க்கட்சிகளின் முயற்சியை முறியடிக்கும் வகையில் தேவையான முன்னேற்பாடுகளையும், ஒரு லட்சம் போலீசாருடன் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. பஸ், ரயில்கள் வழக்கம் போல் ஓடும் என அரசு அறிவித்துள்ளது.


பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இரண்டாவது முறையாக காங்., கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை விஷம் போல் ஏறி வருவதாகவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக அனைத்து பொருட்களின் விலையும் ஏறி வருவதாகவும், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன.அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், சமீபத்தில் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. ஆனால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு திரும்பப் பெறப்படவில்லை.இந்நிலையில், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து, நாடு தழுவிய அளவில் இன்று ஒருநாள் பொது வேலை நிறுத்தம் நடத்துவதற்கு மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.


தமிழகத்தில், அ.தி.மு.க., தலைமையில் நடக்கும் வேலை நிறுத்தத்தில், இந்திய கம்யூனிஸ்ட் - மார்க்சிஸ்ட் - ம.தி.மு.க., மற்றும் ஆதரவு தொழிற் சங்கங்கள் முழு அளவில் பங்கேற்கின்றன. தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் தவிர, பா.ம.க., மற்றும் தே.மு.தி.க., கட்சிகள், 'பந்த்'துக்கு ஆதரவு இல்லையென தெரிவித்துள்ளன.


பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், பொருட்களின் விலை உயர்வை குறைக்கக் கோரியும் நடக்கும் போராட்டம் என்பதால், பொது மக்கள் ஆதரவு தர வேண்டுமென, ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். அ.தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் முழு அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவர் என்பதால், பஸ் போக்குவரத்து முடங்கும் என கூறப்படுகிறது. தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள், இன்று வழக்கம் போல் பணிக்கு வர உள்ளனர்.


அரசு அதிரடி ஏற்பாடு:


எதிர்க்கட்சிகளின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முறியடிக்க, தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பஸ், ரயில் போக்குவரத்து, குடிநீர், பால், தொலைபேசி, மருத்துவமனை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்காமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, அரசு எடுத்துள்ளது.


பல்வேறு துறை உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய தலைமைச் செயலர் ஸ்ரீபதி,


''மக்களுக்கோ, பொதுச் சொத்துகளுக்கோ பங்கம் விளைவிக்கும் வகையில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிப்போர், பணிக்குச் செல்பவர்களை தடுப்போர் மற்றும், 'பந்த்'தை சாதகமாகப் பயன்படுத்தி சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என எச்சரித்துள்ளார்.


சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன்,


''பஸ், ரயில் வழக்கம் போல் ஓடும். இதற்கு இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து, சம்பந்தப்பட்ட சரக டி.ஐ.ஜி.,க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க, ஒரு லட்சம் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்,'' என்றார்.


தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மயிலை பெரியசாமி,


'பந்த்'தில் வர்த்தகர்கள் பங்கேற்க மாட்டார்கள்; கடைகள் வழக்கம் போல் திறந்திருக்கும்' என கூறியுள்ளார். மேலும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழக அனைத்து வணிகர் சங்கம், தமிழக வணிகர்கள் முன்னேற்ற சங்கம் ஆகியவையும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளன.

திருமாவளவனுக்கு டாக்டர் பட்டம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு வரும் 18.07.2009 அன்று டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஆற்றி வரும் சமூகப் பணியைப் பாராட்டி உலக அளவில் செயல்பட்டுவரும் இறையியல் கல்லூரியான குருகுலம் அகாடமி, டாக்டர் (முனைவர்) பட்டம் வழங்குகிறது.


சமூகப் பணி மற்றும் இறைதொண்டு ஆகியவற்றில் சிறப்பான முறையில் பணியாற்றிய சிந்தனையாளர்கள் மற்றும் களப் போராளிகளுக்கு இக்கல்லூரி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாக்டர் பட்டம் வழங்கி வருகிறது.


2009ஆம் ஆண்டுக்கான டாக்டர் பட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு இக்கல்லூரி வழங்குகிறது.


மிகவும் கீழ்நிலையில் கேட்பாராற்று ஒடுக்குண்டு கிடந்த தலித் மக்களைத் தலைநிமிர வைத்த தொல்.திருமாவளவன் பணியை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக இந்த டாக்டர் பட்டத்தை இக்கல்லூரி வழங்குகிறது என்று கூறியுள்ளார்.

குணங்குடி அனிபா வழக்கில் தாமதமாகும் தீர்ப்பை கண்டித்து தமுமுக கண்டன பேரணி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர்
எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் பொருளாளருமான குணங்குடி ஆர்.எம். அனிபா அவர்கள் மீது பல்வேறு பொய் வழக்குகள் புனையப்பட்டு அவர் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடி வருகிறார். அவர் மீது போடப்பட்ட பல வழக்குகளில் அவர் விடுதலைப் பெற்றிருந்தாலும் ஒரேயொரு வழக்கு மட்டும் இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிலும் இவருக்கு எதிராக காவல்துறையினர் நிறுத்திய இரண்டு சாட்சிகளும் பிறழ் சாட்சியங்கள் அளித்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை முழுவதுமாக நிறைவடைந்து பல மாதங்களாகிய பிறகும் எவ்வித காரணமுமின்றி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல் காலதாமதம் செய்து வருகின்றது. பின்னர் ஒரு வழியாக தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் தீர்ப்பு அளிக்கப்படாமல் மீண்டும் சாட்சிகள் விசாரணை என்ற கேலிக் கூத்து நடை பெற்றுள்ளது. தொடர்ந்து தீர்ப்பு தேதி அளிக்காமல் நீதிபதியை மாற்றும் வேலையும் நடந்து வருகிறது. இவ்வழக்கில் இதுவரை 7 நிதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற செயல்பாடுகள் இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டு யாரும் விடுதலையாகி விடக்கூடாது என்பதில் சிறப்புக் கவனம் செலுத்தப் படுகிறதோ என்ற கருத்து மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.


குணங்குடி அனிபாவிற்கு பிணையும் மறுக்கப்பட்டு வருகின்றது. நீண்ட சிறைவாசத்தின் காரணமாகவும், முதுமையின் காரணமாகவும் குணங்குடி அனிபா அவர்கள் பல்வேறு நோய்களுக்கு இலக்காகி மிகவும் பலவீனமான நிலையில் உள்ளார்.


தாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்படும் நீதியாகவும் கொடூரமான மனிதஉரிமை மீறலாகவும் உள்ளது. இந்த அநீதியை கண்டித்தும், உடனடியாக குணங்குடி அனிபா தொடர்புடைய வழக்குகளில் தீர்ப்பு வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வரும் மே 5ம் தேதி சென்னை உயர்நீதி மன்றம் நோக்கி கண்டன பேரணி நடைபெறவுள்ளது. இந்த கண்டன பேரணியில் மனித உரிமை ஆர்வலர்கள் ஆயிரக்கணக்கில் பங்குக் கொள்வார்கள்.

நன்றி : தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

ஏப்ர‌ல் 29ல் ஜெத்தா த‌மிழ்ச் ச‌ங்கம் வ‌ழ‌ங்கும் சென்னை செ‌ங்க‌ட‌ல் ச‌ங்க‌ம‌ம் 2010

ச‌வுதி அரேபியாவின் செங்க‌ட‌ல் ந‌க‌ராம் ஜெத்தாவில் ஜெத்தா த‌மிழ் ச‌ங்க‌த்தின் சார்பில் சென்னை செங்க‌ட‌ல் ச‌ங்க‌ம‌ம் 2010 எனும் சிற‌ப்பு நிக‌ழ்ச்சி 29.04.2010 வியாழ‌ன் மாலை ஆறு ம‌ணிக்கு டிரியோ ராஞ்ச் ஈகுஸ்டிரிய‌ன் கிள‌ப்பில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இந்நிக‌ழ்வில் சென்னை காயிதேமில்ல‌த் க‌ல்லூரியின் முன்னாள் த‌மிழ்த்துறை த‌லைவ‌ரும், இனிய‌ திசைக‌ள் மாத‌ இத‌ழின் ஆசிரிய‌ருமான முனைவ‌ர் சேமுமு. முஹ‌ம்ம‌த‌லி, திருச்சி எம்.ஐ.இ.டி. கலைக் க‌ல்லூரி முத‌ல்வ‌ர் முனைவ‌ர் பீ.மு.ம‌ன்சூர், முன்ன‌ணி ந‌டிக‌ர் ஷாம் உள்ளிட்டோர் சிற‌ப்பு விருந்தின‌ர்க‌ளாக‌ ப‌ங்கேற்கும் மாபெரும் த‌மிழ் க‌லை இல‌க்கிய‌ விழா ம‌ற்றும் சிறுவ‌ர், சிறுமிய‌ர் ப‌ங்கேற்கும் ப‌ல்சுவை நிக‌ழ்ச்சிக‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ இட‌ம் பெறுகின்ற‌ன‌.

தொட‌ர்புக்கு : jeddahtamilsangam@gmail.கம

ன்றி : MUDUVAI HIDAYATH

ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக்குக்கு தடை

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட் களுக்கு விரைவில் தடை விதிக்கப்படும்' என மேயர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில், வருமுன் காப்போம்' திட்டத்தின் கீழ் 30 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.


திருவல்லிக்கேணியில் நடந்த மருத்துவ முகாமை துவக்கி வைத்து மேயர் சுப்ரமணியம் பேசியதாவது: சென்னை மாநகராட்சி சார்பில், இதுவரை 135 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு இரண்டரை லட்சம் பேர் பங்கு பெற்றுள்ளனர். முப்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள மருந்து பொருட்கள் வழங் கப்பட்டுள்ளது. மாநகராட்சி சுகாதார மையங்களில், அதி நவீன முறையில் கருப்பை வாய் புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சைகள் நல்ல முறையில் செய்யப்படுகிறது. இதற்காக, மத்திய அரசு சமீபத்தில் மாநகராட்சி கமிஷனருக்கு விருது வழங்கியுள்ளது.


இன்று நடக்கும் முகாம்களில் கோடை காலத்தில் வரும் நோய் களுக்கும், காச நோய்க்கும் முக்கியத்துவம் அளித்து சிகிச்சை அளிக்கப்படும். பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்படும் சுகாதாரமற்ற குடிநீர், குளிர்பானங்களால் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படுகிறது. இருபது மைக்ரான் அளவுள்ள, ஒரு முறை மட்டுமே உபயோகிக்கப் படும் பிளாஸ்டிக் பைகளை தடை செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.


வரும் 29ம் தேதி நடைபெறும் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். இத்துடன் ஒரு முறை மட்டுமே உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்படும் குடிநீர், குளிர்பான பாக் கெட்டுகளும் தடை செய்யப்படும். இவ்வாறு மேயர் பேசி னார்.
கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி

சவுதி அரேபியாவை சேர்ந்த 12 வயது சிறுமிக்கும் 80 வயது கிழவருக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை முடிப்பதற்காக மணமகள் வீட்டாருக்கு 85 ஆயிரம் ரியால் சீதனமாக கொடுக்கப்பட்டது.

இந்த திருமணம் தன் விருப்பத்துக்கு எதிராகவும் தன் தாயாரின் விருப்பத்துக்கு எதிராகவும் நடத்தப்படடது எனறு கூறி 12 வயது சிறுமி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. சவுதி அரேபியாவின் சட்ட உதவியுடன் இந்த வழக்கு தொடரப்பட்டது.

என் தந்தை தன் ஒன்று விட்ட அண்ணனான 80 வயது கிழவருக்கு பணத்துக்காக திருமணம் செய்து கொடுத்து விட்டார் என்று குற்றஞ்சாட்டி இருந்தார். இந்த வழக்கு சவுதி அரேபியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 80 வயது பெரியவரை விவாகரத்து செய்ய அந்த சிறுமிக்கு கோர்ட்டு அனுமதி அளித்தது.

இந்த வழக்கின் அடிப்படையில் பெண்களுக்கான குறைந்த பட்ச வயதை 16 ஆக உயர்த்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்லுமா?

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று இரவு 8.30 மணிக்கு மும்பையில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


சென்னை அணி 2-வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடுகிறது. 2008-ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்சிடம் தோற்று கோப்பையை இழந்தது. இதனால் இந்த முறை ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது.

இதேபோல் முதல் முறையாக இறுதிப் போட்டியில் நுழைந்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. இதனால் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 அரை இறுதியும், 3-வது இடத்துக்கான போட்டியும் ஒரு சைடு ஆட்டமாக இருந்தது. இதனால் இன்றைய இறுதிப்போட்டியாவது பரபரப்புடன் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தெண்டுல்கர் விளையாடுவதற்கான வாய்ப்பு இல்லை. இதனால் ஜாகீர்கான் கேப்டனாக பணியாற்றுவார் என்று தெரிகிறது.

அந்த அணியில் போலர்ட் துருப்பு சீட்டாக உள்ளார். சிறந்த அதிரடி பேட்ஸ்மேனான அவர் பவுலிங்கிலும் முத்திரை பதிக்க கூடியவர். அம்பத்தி ராயுடு, திவாரி, டுமினி போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், மலிங்கா, ஹர்பஜன்சிங், ஜாகீர்கான் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.

தெண்டுல்கர் இல்லாத வாய்ப்பை சென்னை அணி சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம். பேட்டிங்கில் ரெய்னா, முரளி விஜய், கேப்டன் டோனி ஆகியோரும், பந்து வீச்சில் போலிஞ்சர், அஸ்வின் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

ஐ.பி.எல். போட்டியில் இரு அணிகளும் 6 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றன.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிப்பதில் சிக்கல்

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிப்பதில் சட்ட ரீதியாக சாத்தியக்கூறு குறைவாக உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தல் செலவுக் கணக்குத் தொடர்பாக நாடு முழுவதும் 16 கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 29ஆம் தேதிக்குள் அந்தக் கட்சிகள் செலவுக் கணக்கை தாக்கல் செய்ய கெடு விதிக்கப்பட்டுள்ளது.


வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிப்பதில் உள்ள குறைபாடுகளை களைவது தொடர்பாக மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.


வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கு சட்டத்தில் சில மாற்றங்கள் தேவை. தற்போதைய நடைமுறையில் சில பிரச்சினைகள் உள்ளன. அவர்கள் பல்வேறு நாடுகளில் வசிப்பதால் இந்த சிக்கல் உள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு கடந்த ôதம் கடிதம் அனுப்பியுள்ளோம்.

நித்யானந்தாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை!

நித்யானந்தா ஒத்துழைப்புக் கொடுக்க மறுத்து வருவதால், உண்மை கண்டறியும் சோதனை மூலம் விசாரணை நடத்த கர்நாடக போலீசார் முடிவு செய்துள்ளனர்.

நித்யானந்தாவிடம் 3வது நாளாக இன்று காலை 11 மணிக்கு கர்நாடக போலீசார் விசாரணையை தொடங்கினர். நித்யானந்தாவின் முன்னாள் சீடர்கள் லெனின் கருப்பன், அமெரிக்காவைச் சேர்ந்த டக்ளஸ் மெக்கல்லர் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


நித்யானந்தாவுக்கு உதவியாளராக இருந்த கோபிகா தற்போது எங்கே இருக்கிறார். ரஞ்சிதா தலைமறைவாக இருக்கும் இடம் எங்கே போன்ற கேள்விகள் நித்யானந்தாவிடம் கேட்கப்பட இருக்கிறது.


இருப்பினும் நித்யானந்தா முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும், தியான நிலையில் இருப்பதாக நாடகம் ஆடுவதாகவும் கர்நாடக போலீசார் தெரிவித்துள்ளனர். மிகவும் அழுத்தக்காகராக இருப்பதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.


நித்யானந்தாவுக்கான போலீஸ் காவல் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது. ஆனால் நித்யானந்தா ஒத்துழைப்புக் கொடுக்க மறுத்து வருவதால், உண்மை கண்டறியும் சோதனை மூலம் விசாரணை நடத்துவதற்காக திங்கள் கிழமை அன்று நீதிமன்றத்தில் மனு செய்யவும் கர்நாடக போலீஸ் திட்டமிட்டுள்ளது.


இதனிடையே நித்யானந்தாவுக்கு எதிரான சாட்சிகளை பாதுகாப்பு கருதி, அவர்களுடைய வீட்டுக்கே நேரிடையாக சென்று காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து வாக்குமூலம் பெறப்படுவதாக கூறப்படுகிறது.


நித்யானந்தாவிடம் தற்போது நடத்தப்படும் விசாரணையில் எந்த உண்மையும் வெளிவராததால், உண்மை கண்டறியும் சோதனையில் உண்மைகள் அம்பலமாகும் என தெரிகிறது.

கவர்ச்சியைக் காசாக்கும் இன்னொரு முயற்சி!

அனுஷ்காமுதலில் நடித்த தமிழ்ப் படம் இரண்டு. அதில் முடிந்தவரை உரித்த கோழியாக ஆடவிட்டார்கள் அவரை. ஆனால் அப்போது ஏனோ அவரது கவர்ச்சியை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள்.
சில வருடங்களுக்குப் பிறகு அருந்ததீ படத்தில் மீண்டும் அதே அனுஷ்கா. இந்த முறை அவரது எடுப்பான கவர்ச்சி, நிறைய தயாரிப்பாளர்களுக்கு பணத்தைக் கொட்ட, மளமளவென்று படங்கள் குவிந்தன.

தமிழில் அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த திடீர் மவுசைக் கண்ட தெலுங்கு தயாரிப்பாளர்கள், அனுஷ்கா இதற்கு முன் நடித்த தெலுங்குப் படங்கள் சிலவற்றை சுடச் சுட 'டப்' செய்து வருகிறார்கள்.

அதில் ஒன்றுதான் ராகவா லாரன்ஸ் இசையமைத்து இயக்கிய டான். ஹீரோ நாகார்ஜுனா. சில ஆண்டுகளுக்கு முன்பே தெலுங்கில் ரிலீஸானது. இப்போது அதே பெயரில் தமிழுக்கு வருகிறது. ராகவா லாரன்ஸும் இந்தப் படத்தில் உண்டு. நிகிதா இன்னொரு நாயகியாக நடித்துள்ளார். படத்தின் ஹைலைட்.. வேறென்ன, அனுஷ்காவின் கவர்ச்சிதான்!

ஜூன் முதல் வாரம் தமிழில் ரீஸாகிறது இந்த டப்பிங் டான்!

ராஜஸ்தான் அணிக்கு ஷில்பா ஓனரா அல்லது பினாமியா? வருமான வரித்துறை சந்தேகம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர்களாக உள்ள நடிகை ஷில்பா ஷெட்டியும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் வேறு யாருக்கோ பினாமியாக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஐபிஎல் விவகாரத்தில் வசமாக சிக்கிக் கொண்டுள்ள மோடிக்கு பெரிதும் வக்காலத்து வாங்கி வருபவர் ஷில்பா ஷெட்டி. இப்போது இந்த ஆதரவின் பின்னணியில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷில்பாஷெட்டியும் அவருடைய கணவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் முதலீடு செய்துள்ள பணத்தின் ஒரு பகுதி கேய்மான் தீவில் இருந்து வந்துள்ளது. இந்த பணம் உண்மையிலேயே ஷில்பாஷெட்டியின் பணமா? அல்லது வேறு யாரோ முதலீடு செய்தார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வேறு யாரோ தங்களின் கறுப்புப் பணத்தை ஷில்பாஷெட்டி மூலம் வெள்ளையாக்குகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே அந்த பணம் எப்படி வந்தது என்பது பற்றி வருமான வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

எனவே ஐ.பி.எல்.லில் ஷில்பாஷெட்டி முதலீடு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வருமான வரித்துறையினர் கைப்பற்றி உள்ளனர். இதுகுறித்த நோட்டீஸும் ஷில்பாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுபற்றி ஷில்பா ஷெட்டி கூறுகையில், "வருமான வரித்துறை எங்களிடம் சில ஆவணங்களை பெற்று சென்று இருப்பது உண்மைதான்.
ஆனால் இதுபற்றி பத்திரிகையிடம் எந்த தகவலும் சொல்ல முடியாது.
தேவையான அனைத்து ஆவணங்களையும் அவர்கள் எடுத்து சென்றுள்ளனர். அவர்கள் முழு விசாரணையும் முடிக்கட்டும். அதன் பிறகு மற்ற விஷயங்களை தெரிவிக்கிறேன்" என்றார்.

கிராமத் திருவிழாவில் ரசிகர்கள் துரத்தல்... சங்கவி ஓட்டம்

கிராம திருவிழாவில் நடிகை சங்கவி ஆட்டம் போடாததால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் பெரும் கலாட்டாவில் இறங்கினர். இதனால் திருவிழாவை விட்டு ஓட்டம் பிடித்தார் சங்கவி.

பேராவூரணி நிலகண்ட பிள்ளையார் கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழா கடந்த 19-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இந்த விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நடிகை சங்கவியின் நடனத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். எனவே ஏராளமான ரசிகர்கள், கிராம மக்கள் குவிந்துவிட்டனர்.
ஆனால் இவர்களைக் கட்டுப்படுத்தப் போதிய போலீஸ் இல்லை. எனவே விழாவின் துவக்கத்திலிருந்தே பெண்களிடம் சில இளைஞர்கள் சில்மிஷம் செய்துள்ளனர். இதனால் கூச்சலும் குழப்பமுமாக இருந்தது.

இந்த நிலையில் சங்கவி நடனமாடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரோ, நடனமாடாமல், ஒப்புக்கு கைகளை மட்டும் ஆட்டி பேசிவிட்டு மேடையை விட்டிறங்கிச் சென்றார். இதனால் கடுப்பான ரசிகர்கள் பெரும் கலாட்டாவில் இறங்கினர்.

ஒரு சில போலீசார் இதைக் கட்டுப்படுத்த முயன்ற போது கூட்டமாக சேர்ந்து கொண்டு போலீசாரை தாக்கியது ரசிகர் கூட்டம் . பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் விரைந்து சென்று போலீசாரை காப்பாற்ற வேண்டி வந்தது.

சங்கவியின் வாகனத்தை வழிமறிக்கவும் ஒரு கும்பல் முற்பட தப்பி்த்தால் போதும் என்று ஓட்டம் பிடித்தார் அவர்.

அதன் பிறகு மெல்ல மெல்ல கலாட்டா அடங்கியது.

நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை!

இமாசலபிரதேசத்தில் தங்கியிருந்த நித்யானந்தா கைது செய்யப்பட்டதையடுத்து, போலீசார் இன்று நித்யானந்தாவை பெங்களூர் கொண்டு வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள்.

அவர் மீது இளம்பெண் ஒருவர் பெங்களூர் கோர்ட்டில் கற்பழிப்பு புகார் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் நித்யானந்தாவுக்கு முதலில் ஆண்மை பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். கோர்ட்டு அனுமதியுடன் பெங்களூர் மருத்துவமனையில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடைபெறும். அதன்பிறகு மற்ற புகார்கள் மீதான விசாரணை தொடங்கும்.

நித்யானந்தாவுக்கு பெங்களூரிலும், தமிழ்நாட்டிலும், அமெரிக்காவிலும் கோடிக் கணக்கான சொத்துக்கள் உள்ளன. அவற்றை முடக்கவும் வங்கி கணக்குகளை சீல் வைக்கவும் கர்நாடக சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

நித்யானந்தா மீது இந்திய தண்டனை சட்டம் 420 (மோசடி), 376 (கற்பழிப்பு), 377 (இயற்கைக்கு மாறான உறவு), 295ஏ (மத உணர்வை புண்படுத்துதல்), 506 (1) (மிரட்டல்), 120 (கூட்டுசதி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை ஜாமீனில் வர முடியாத பிரிவுகள் ஆகும்.

எனவே நித்யானந்தா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபின் உடனே சிறையில் அடைக்கப்படுவார் அல்லது போலீஸ் காவலில் வைக்கப்படுவார்.

மிஸ் இந்தியா போட்டியில் மதுரை கிருத்திகா

மிஸ் இந்தியா போட்டியில் மதுரையில் பிறந்து பெங்களூரில் வளர்ந்த 20 வயது இளம் புயல் கிருத்திகா பாபு பங்கேற்றுள்ளார்.
பேன்டலூன் மிஸ் இந்தியாப் போட்டியில் 18 அழகிகள் பங்கேற்றுள்ளனர். இவர்களில் கிருத்திகா பாபுவும் ஒருவர். 20 வயதான இவர் பெங்களூர் மெளன்ட் கார்மல் கல்லூரி மாணவியாவார். பெங்களூரில் வளர்ந்தாலும் இவர் பிறந்தது மதுரையில்.

ஐந்து அடி 10 அங்குலம் உயரம் கொண்ட கிருத்திகா, நடனம், யோகா, தடகளம் என ஆர்வம் கொண்டவர். டேவிட் பெக்காம் என்றால் கிருத்திகாவுக்கு உயிர்.

திகில் படங்களைப் பார்ப்பதில் ஆர்வம் கொண்ட இவருக்கு, ரொம்ன்டிக் காமெடிப் படங்கள் என்றால் ரொம்பப் பிடிக்குமாம்.

திரில்லிங்கான வாழ்க்கையை விரும்பும் கிருத்திகா மிஸ் இந்தியா பட்டம் வெல்வது உறுதி என்ற நம்பிக்கையுடன் உள்ளார்.

செக்ஸ் குறித்த கிருத்திகாவின் கருத்து குறிப்பிடத்தக்கது – உலகின் சிறந்த உடற்பயிற்சிதான் செக்ஸ். உயிரினங்களின் அருமையான கலை வடிவம்தான் செக்ஸ் என்பது கிருத்திகாவின் எண்ணம்.

முன்பு தூத்துக்குடியைச் சேர்ந்த ராணி என்பவர் மிஸ் இந்தியா பட்டம் வென்று தென் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தார். இப்போது மதுரையைச் சேர்ந்த கிருத்திகா பாபு மிஸ் இந்தியா போட்டியில் மோதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சினுக்குத் தடை வருமா?

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அபராதம் - 2வது முறை அபராதம் விதிக்கப்பட்டதால் சச்சினுக்குத் தடை வருமா?

மும்பை: மெதுவாக பந்து வீசியதால், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கருக்கு ரூ. 20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2வது முறையாக சச்சினுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு போட்டியில் ஆட தடை வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் பவுலிங் செய்தது மும்பை அணி. அப்போது மெதுவாகப் பந்து வீசியதாக போட்டி நடுவர் புகார் கூறினார்.

இதையடுத்து சச்சினுக்கு ரூ. 20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு வீரருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

சச்சினுக்கு அபராதம் விதிக்கப்படுவது இது 2 வதுமுறையாகும். ஐபிஎல் விதிமுறைப்படி 3 முறை அபராதம் விதிக்கப்பட்டால், அந்த வீரருக்கு போட்டியில் ஆட தடை விதிக்கப்படும். எனவே சச்சினுக்கு அந்தப் பிரச்சினை வருமோ என்ற கவலையில் மும்பை அணியும், அதன் ரசிகர்களும் உள்ளனர்.

நடிகை ரஞ்சிதாவுக்கு போலீசார் வலை

நடிகை ரஞ்சிதாவும், நித்தியானந்தாவும் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியான விவகாரத்தில், ரஞ்சிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால், யாரும் ரஞ்சிதா மீது புகார் அளிக்கவில்லை.

இந்நிலையில், சென்னையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மனோகரன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட ரஞ்சிதா மீது நடவடிக்கை எடுக்ககோரி போலீஸ் கமிஷனருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே தபால் மூலம் புகார் அளித்தேன். ஆனால், கமிஷனர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ரஞ்சிதா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று போலீசுக்கு உத்தரவிடுமாறு, கூறியிருந்தார்.

இந்நிலையில், தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த நித்தியானந்தா கைது செய்யப்பட்டுள்ளார். இதனைதொடர்ந்து, ரஞ்சிதாவும் கைது செய்யப் படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நித்தியானந்தா கைதானது எப்படி? பரபரப்பு தகவல்

சாமியார் நித்தியானந்தா கைதானது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த ஆதார செய்திகள் நக்கீரனில் வெளியானதில் இருந்து தலைமறைவாக இருந்தார் நித்யானந்தா. மேலும் தொடர் குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் வந்ததையடுத்து மடத்தின் பொறுப்பில் இருந்தும் நித்யானந்தா விலகினார். மத உணர்வை புண்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

தமிழகத்தில் நித்யானந்தா மீது கொடுக்கப்பட்ட புகார்கள் அனைத்தையும், கர்நாடக காவல்துறையிடம் தமிழக காவல்துறை ஒப்படைத்தது. இதையடுத்து கர்நாடக போலீசார் நித்தியானந்த ஆசிரமத்தில் சோதனை செய்தனர். அப்போது முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

நித்தியானந்தா தலைமறைவாகி விட்டதால் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் கைது செய்வதற்காக தேடிவருவதை அறிந்த நித்தியானந்தா, தியான பீட தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இருப்பினும், நித்தியானந்தாவை கைது செய்வதில் பெங்களூரூ போலீசார் முனைப்புடன் செயல்பட்டு வந்தனர். பல்வேறு ஆசிரமங்கள் மற்றும் ஊர்களில் நித்யானந்த இருக்கிறாரா என்பதை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், நித்தியானந்த இமாச்சலபிரசேத்தில் தலைமறைவாக இருந்து வருவது பற்றி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக அங்கு ‌போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். நித்தியானந்தாவை கைது செய்ய, இமாச்சலபிரதேச போலீசாரின் உதவியையும் நாடினர். இதையடுத்து தான், நித்தியானந்தாவை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர்.

நித்தியானந்தாவை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு

கைது செய்யப்பட்டுள்ள நித்யானந்தாவை காவலில் எடுத்து விசாரிக்க கர்நாடக போலீசார் முடிவு செய்துள்ளனர்.

நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த ஆதார செய்திகள் தலைமறைவாக இருந்தார் நித்யானந்தா. மேலும் தொடர் குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் வந்ததையடுத்து மடத்தின் பொறுப்பில் இருந்தும் நித்யானந்தா விலகினார். மத உணர்வை புண்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

தமிழகத்தில் நித்யானந்தா மீது கொடுக்கப்பட்ட புகார்கள் அனைத்தையும், கர்நாடக காவல்துறையிடம் தமிழக காவல்துறை ஒப்படைத்தது. இதையடுத்து பல்வேறு ஆசிரமங்கள் மற்றும் ஊர்களில் நித்யானந்த இருக்கிறாரா என்பதை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், நித்தியானந்த இமாச்சலபிரசேத்தில் தலைமறைவாக இருந்து வருவது பற்றி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக அங்கு ‌போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். நித்தியானந்தாவை கைது செய்ய, இமாச்சலபிரதேச போலீசாரின் உதவியையும் நாடினர். இதையடுத்து தான், நித்தியானந்தாவை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர். நித்யானந்தா ஜாமீனில் வெளிவரமுடியாதபடி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை கர்நாடகாவிற்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். இதையடுத்து, தேவைப்பட்டால், அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் கர்நாடகா போலீஸ் முடிவு செய்துள்ளது

புனே, அகமதாபாத் ஐபிஎல் அணிகளை வாங்க அடானி, வீடியோகான் நிறுவனங்கள் கொடுத்த ஏல ஆவணங்கள் மாயம்

புனே மற்றும் அகமதாபாத் ஐபிஎல் அணிகளை வாங்குவதற்காக அடானி மற்றும் வீடியோகான் நிறுவனங்கள் சமர்ப்பித்த ஏலத் தொகை அடங்கிய டாக்குமென்டுகள் காணவில்லை என்பதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஏலத்தில் அடானி மற்றும் வீடியோகான் நிறுவனங்கள் தோல்வி அடைந்தன. இந்தத் தோல்விதான், தரூர், மோடி இடையிலான மோதலுக்கு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.

ஐபிஎல் முறைகேடுகள் குறித்த சர்ச்சை வெடித்ததும், மும்பையில் உள்ள ஐபிஎல் தலைமை அலுவலகத்திலும், மோடியின் அலுவலகங்களிலும் வருமான வரித்தறையினர் சோதனை நடத்தினர். பல ஆவணங்களைக் கைப்பற்றினர்.

ஆனால் இதுவரை அடானி மற்றும் வீடியோகான் நிறுவனங்கள் ஏலம் கேட்டு தொகையுடன் சமர்ப்பித்த ஆவணங்கள் மட்டும் கிடைக்கவில்லை என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.

குஜராத்தைச் சேர்ந்த அடானி குழுமம் அகமதாபாத் அணியை வாங்க 5 பில்லியன் டாலர் ஏலத் தொகையுடன் விண்ணப்பித்திருந்தது. இந்தக் குழுமத்தின் தலைவர் கெளதம் அடானி ஆவார்.

இதேபோல, வேணுகோபால் தூத் தலைமையிலான வீடியோகான் நிறுவனம் புனே அணியை வாங்க 4 பில்லியன் டாலர் ஏலம் கேட்டிருந்தது.

இரு நிறுவனங்களும் ஏலத்தில் தோல்வி அடைந்தன. புனே அணியை சஹாரா குழுமம் வாங்கி விட்டது. அகமதாபாத் அணியை கேட்ட ரெண்டஸ்வஸ் நிறுவனம் பின்னர் கொச்சியைத் தேர்வு செய்தது. அதன் பிறகு நடந்தது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில்தான் அடானி மற்றும் வீடியோகான் நிறுவனங்கள் கொடுத்த ஏல ஆவணங்களைக் காணவில்லை என்று வருமான வரித்துறை கூறியுள்ளது. அது கிடைத்தால் பல முக்கியத் தகவல்கள் விசாரணைக்குக் கிடைக்கும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

புனே, அகமதாபாத் அணிகளுக்கான ஏலத்தின் முதல் சுற்றில் பல கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. அவை, அடானி மற்றும் வீடியோகான் நிறுவனங்களுக்குச் சாதகமானதாக இருந்த்தாக சர்ச்சை எழுந்தது. நிபந்தனைகளில் ஒன்று 100 மில்லியன் டாலர் வங்கி உத்தரவாதம் என்பதாகும்.

இதையடுத்து கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங் மனோகர் தலையிட்டு இந்த நிபந்தனைகளை ரத்து செய்து விட்டு புதிதாக ஏலம் நடத்த உத்தரவிட்டார். அந்த 2வது கட்ட ஏலத்தின்போது அடானி, வீடியோகான் நிறுவனங்களுக்கு சாதகமாக எதுவும் அமையவில்லை. இதனால் அதிக தொகைக்கு விண்ணப்பித்த ரெண்டஸ்வஸும், சஹாராவும் புனே, கொச்சி அணிகளை வென்றன என்பது குறிப்பிடத்தக்கது

டைட்டானிக் கப்பல் கடிதம்: 38 1/2 லட்சத்திற்கு ஏலம்

உலகிலேயே மிகப்பெரிய அதிநவீன சொகுசு கப்பல் டைட்டானிக். 1517 பேருடன் பயணம் செய்த இக்கப்பல் கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி கடலில் மூழ்கியது.

இந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் மரணம் அடைந்தனர்.

இக்கப்பலில் பயணம் செய்தவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கடித தொடர்பு வைத்திருந்தனர். அவ்வாறு எழுதப்பட்ட ஒரு கடிதம் லண்டனில் 38 லட்சத்து 50 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

இந்த கடிதத்தை கப்பலில் முதல் வகுப்பில் பயணம் செய்த அடோல்ப் சபீல்டு என்பவர் தனது மனைவிக்கு அன்புடன் எழுதியிருந்தார். டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த அனுபவம் குறித்து அதில் எழுதப்பட்டிருந்தது.

கப்பல் மூழ்குவதற்கு 5 நாட்களுக்கு முன்பு இக்கடிதம் எழுதப்பட்டது. லண்டனில் உள்ள ஒரு அருங்காட்சியகம் இக்கடிதத்தை ஏலத்தில் எடுத்தது. ஏலத்தில் எடுத்த அருங்காட்சியகத்தின் பெயர் வெளியிடப்படவில்லை.

புதுப்பேட்டையில் மோட்டார் உதிரிபாக கடைகள் சிங்கபெருமாள் கோவிலுக்கு மாற்றம்

சட்டசபையில் இன்று பொதுப்பணித்துறை சார்பாக பாசனம் மற்றும் கட்டிடங்கள் தொடர்பான கொள்கை விளக்க குறிப்பை முதலமைச்சர் கருணாநிதி தாக்கல் செய்தார்.


அதில், ’’தமிழ்நாட்டின் நீர்வள ஆதாரம் மொத்தம் 853 டி.எம்.சி. அண்டை மாநிலங்களில் இருந்து 261 டி.எம்.சி. தண்ணீர் வருகிறது. தமிழ்நாட்டில 78 பெரிய அணைகளும், 7 சிறிய அணைகளும் உள்ளன. இவற்றின் மொத்த கொள்ளளவு 233.20 டி.எம்.சி.

மாநிலத்தின் மொத்த பாசன பரப்பளவு சுமார் 33.93 லட்சம் ஹெக்டேர். வேளாண்மை துறை மூலம் நெல் மற்றும் உணவு பயிர் உற்பத்தியை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் கூவம் ஆற்றை சீரமைக்க, சென்னை நதிநீர் சீரமைப்பு அறக் கட்டளைக்கும், சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவனத்துக்கும் இடையே கடந்த மார்ச் 18-ந்தேதி முதல்-அமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

கூவம் ஆற்றை சீரமைக்கும் பணியின் முதல் கட்டமாக சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை பகுதிகளில் உள்ள கூவம் கரையை ஆக்கிரமித்துள்ள ஆட்டோ மற்றும் மோட்டார் உதிரிபாகங்களின் சிறு தொழிற்சாலைகளை சிங்கப்பெருமாள் கோவில் அருகில் உள்ள ஆம்பூருக்கு மாற்ற அரசு முடிவெடுத்துள்ளது.

அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கூவம் ஆறு மற்றும் கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கெடுக்கும் பணி 2 மாதத்திற்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமித்துள்ளோருக்கு மாற்று இட வசதி வழங்கப்படும்.

இதன் முதல் கட்டமாக புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் பகுதியில் இருந்த சுமார் 1150 ஆக்கிரமிப்புகள் கடந்த அக்டோபர் மாதம் அகற்றப்பட்டு மாற்று இடம் தரப்பட்டுள்ளது. இந்த பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு வராமல் தடுக்க அழகிய பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன.

மாநிலத்திற்குள் பாயும் நதிகளை இணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இதுதொடர்பாக உச்சநீதி மன்றத்தில் நடந்த வழக்கில் அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவை ஏற்படுத்துவதற்கு 30.4.2010 வரை கால அவகாசம் அளித்து கோர்ட்டு ஆணை பிறப்பித்துள்ளது.

மாநிலத்தின் நலன் கருதி அரசு தொடர்ந்து தன் வாதங்களை அரசியல் சாசன சட்ட அமர்வு முன்பு வைக்கும். இதுபோல பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட ஒப்பந்த மறு ஆய்வு, நெய்யாறு-இடகரை பாசன திட்டம், பம்பா அச்சன் கோவில்- வைப்பாறு இணைப்பு, பாண்டியாறு- புன்னம்புழா திட்டம் ஆகியவற்றையும் நிறைவேற்ற தமிழக அரசு கேரள அரசுடன் தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநிலத்தில் கணேசபுரம் என்ற இடத்தில் நீர்தேக்கம் கட்டப்படுவதை தடுக்கவும் தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

2009-2010 நிதியாண்டில் மார்ச் வரை தமிழ்நாட்டில் 130 மணல் குவாரிகள் மூலம் 142.49 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2003-ம் ஆண்டு முதல் இதுவரை ரூ.840.37 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

தமிழ்நாடு புதிய சட்டமன்ற வளாகம் 425.57 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இதன் மேற்கூரையாக 100 அடி உயர கோபுரம் (டூம்) அமைக்கப்படுகிறது. தேர் வடிவமைப்பு கொண்ட இதன் எடை 800 டன். 12 மீட்டர் விட்டம் கொண்ட இதில் அமைக்கப்படும் சிறப்பு கண்ணாடி மூலம் சட்டசபை கூடத்துக்குள் இயற்கை ஒளி பரவும். இதன்மூலம் மின் ஆற்றலின் செயல்பாடு 20 சதவீதம் குறையும்.

இந்த கட்டிடத்துக்கு தங்க தர சான்று கிடைத் துள்ளது. தலைமை செயலக துறைகளுக்கான 7 கட்டிடங் கள் ரூ.279.56 கோடி செலவில் கட்டப்படுகிறது. கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடம் ரூ.171.78 கோடி செலவில் நவீன முறையில் கட்டப்படுகிறது.

இதை ஒரே நேரத்தில் 1250 பேர் பயன்படுத்தலாம். 1280 பேர் அமரக்கூடிய அரங்கம் ஒன்றும் அமைக்கப்படுகிறது. சென்னையில் பல் மருத்துவ மனைக்கு ரூ.13.66 கோடியில் புதிய கூடுதல் கட்டிடம், சென்னை எழும்பூர் மகப்பேறு குழந்தைகள் மருத்துவ மனையில் ரூ.56.32 கோடி செலவில் அடுக்குமாடி கட்டிடம், சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் ரூ.16.65 கோடி செலவில் குழந்தை நல சிறப்பு கட்டிடம்,

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.41.20 கோடி செலவில் அடுக்குமாடி கட்டிடம், சென்னை நந்தனம் வேளாண்மை பொறியியல் துறை வளாகத்தில் ரூ.15 கோடி செலவில் அடுக்குமாடி கட்டிடம், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு ரூ.70.20 கோடி செலவில் புதிய கட்டிடம் இதுபோன்று பல்வேறு மாவட்டங்களிலும் ரூ.1324.12 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ரூ.797.14 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது’’கூறப்பட்டுள்ளது.

மேகாலயா முதல்வர் ராஜினாமா

மேகாலயா மாநிலத்தில் 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சியில் அமர்ந்தது. அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் ஐக்கிய ஜனநாயக கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியது.

இந்த கட்சி காங்கிரசுடன் கூட்டணி சேர முன்வந்தது. இதையடுத்து காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அமர்ந்தது. காங்கிரஸ் தலைவர் லபாங் முதல்வர் ஆனார். ஆனால் லபாங் மீது காங்கிரஸ் உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்தனர். மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 எம்.எல்.ஏ.க்களில் 28 பேர் காங்கிரசில் உள்ளனர்.

இவர்களில் 20 பேர் லபாங்குக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் தற்போது துணை முதல்வராக இருக்கும் முகுல் சங்மாவை முதல்வராக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த பிரச்சினையை அடுத்து முதல்வர் லபாங் இன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். புதிய முதல்-மந்திரி தேர்வு இன்று நடக்கிறது.
முகுல் சங்மா முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

ஆசிரியர்கள் இடமாறுதல் விண்ணப்பங்களை வரும் 29ஆம் தேதிக்குள் அனுப்ப அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் விண்ணப்பங்களை வரும் 29ஆம் தேதிக்குள் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது,

அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், வரும் 2010-11 கல்வியாண்டில் இடமாறுதல் பெற விரும்பினால் விண்ணப்பங்களை இப்போது அளிக்க வேண்டும்.

இடமாறுதல் கேட்டு ஆசிரியர்கள் அளிக்கும் விண்ணங்களை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், இம்மாதம் 29ஆம் தேதிக்குள் பெற வேண்டும்.

இடமாறுதல் கவுன்சிலிங் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டதும், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இதற்கான விண்ணப்பம் அனுப்பி வைக்கப்படும். பள்ளி தலைமையாசிரியர்கள், சம்மந்தப்பட்ட ஆசிரியர்களிடம் விண்ணப்பத்தை வழங்கி ஒப்புதல் பெறவேண்டும். பின்னர் இவற்றை சரிபார்த்து வரும் 30ஆம் தேதிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம், தலைமை ஆசிரியர்கள் வழங்க வேண்டும்.

மேலும், வெளிமாவட்ட இடமாறுதல் கோரும் விண்ணப்பத்தினையும், ஒரு ஆசிரியர் ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு மாறுதல் கேட்டு விண்ணப்பித்திருந்தாலும் அவற்றையும் அனுப்பலாம். கவுன்சிலிங் நடைபெறும் நாள், நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் விண்ணப்பங்களை தொகுத்து மே 4ஆம் தேதிக்குள் பள்ளி கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும் என்று பெருமாள்சாமி தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு 1,500 குடியிருப்புகள்

அரசு ஊழியர்களுக்கு ரூ. 175 கோடி செலவில் 1,500 குடியிருப்புகள் கட்டப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று முதல்வர் கருணாநிதி வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:

புதிய சட்டசபை கட்ட ஏதுவாக கலைவாணர் அரங்கத்தை அகற்ற வேண்டியதாயிற்று. கலைவாணர் அரங்கம் பல்வேறு வகையில் பயன்பட்டது. மீண்டும் அனைவருக்கும் பயன்படும் வகையில் கலைவாணர் அரங்கம் நவீன கூட்டரங்கமாக கட்டப்படும். அதில் சுமார் 1,500 பேர் அமரலாம்.

இந்த புதிய கலைவாணர் அரங்கம் ரூ. 50 கோடி செலவில் கட்டப்படும்.

தாடண்டர் நகரில் அரசு ஊழியர்களுக்கு ரூ. 175 கோடி செலவில் 1,500 குடியிருப்புகள் கட்டப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

கொரடாச்சேரி பேரூ. இடைத்தேர்தல் : திமுக, அதிமுகவினர் தீவிர பிரசாரம்

கொரடாச்சேரி பேரூராட்சி இடைத்தேர்தலில் திமுக , அதிமுகவினர் தீவிர பிரசாரம் செய்தனர்.
கொரடாச்சேரி பேரூராட்சி இடைத்தேர்தல் நாளை (19ம் தேதி) நடக்கிறது. இதை ஒட்டி நேற்று (17ம் தேதி) மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. இதில் திமுக, அதிமுகவினர் தீவிர பிரசாரம் செய்தனர். திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் கட்சியினர் தீவிர ஓட்டு சேகரித்தனர்.

ஒன்றிய செயலாளர் பாலச்சந்தர் மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வட்டத்தலைவர் சுந்தரமூர்த்தி மற்றும் பலர் வீடு வீடாக சென்ற ஓட்டு சேகரித்தனர். இதேபோல் அமைச்சர் மதிவாணன், எம்.பி. விஜயன் ஆகியோரும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர்.
இதேபோல் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.காமராஜ் தலைமையில் முன்னாள் எம்.பி. செல்வராஜ், மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் ராமகுணசேகரன், இந்திய கம்யூ. மாவட்ட செயலாளர் வீரசேனன், மா.கம்யூ மாவட்ட செயலாளர் நாகராஜன், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் வை.செல்வராஜ் மற்றும் கட்சியினர் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர். பிரசாரம் நிறைவடைந்த நிலையில் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 21ம் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகிறது.

ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அலுவலர் நந்தகுமார், உதவி தேர்தல் அலுவலர்கள் ராஜன்பாபு, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி., பிரவின் குமார் அபினபு தலைமையில் திருவாரூர் டி.எஸ்.பி. சீனிவாசன், கொரடாச்சேரி இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் செய்து வருகின்றனர்.

ரோட்டோரம் பஸ் கவிழ்ந்து விபத்து : 42 பேர் காயம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு லிங்கன் என்ற தனியார் பஸ் சென்றது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தில்லைவிளாகம் லிங்கத்தடி அருகே வந்தது. ரோட்டை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. எதிரே வந்த பைக்குக்கு வழிவிடுவதற்காக பஸ்ஸை ஒதுங்கியபோது, ரோட்டோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கீழவாடியக்காடு சேகர், கர்ப்பநாதர்குளம் அய்யாசாமி, பாலசுந்தரம், ஆயக்காரன்புலம் ராஜலட்சுமி, கடஞ்சவிளாகம் சுந்தராம்பாள், வண்டுவாஞ்சேரி ராஜேந்திரன் ஆகிய ஆறு பேர் பலத்த காயத்துடன், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், 36 பேர் லேசான காயத்துடன் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

முத்துப்பேட்டை போலீஸ் எஸ்.ஐ., அருள்பிரியா விசாரித்து, தலைமறைவான பஸ் டிரைவர் காதர் மைதீன், கண்டெக்டர் ஜெய்குமார் ஆகியோரை தேடிவருகிறார். விபத்தில் காயம் அடைந்தவர்களை நாகை எம்.பி., விஜயன், திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ., உலகநாதன், பாரதிய ஜனதா மாநில இளைஞரணி தலைவர் முருகானந்தம், தி.மு.க., நகர செயலாளர் பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்கராசு உட்பட பலர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

பாபநாசம் சுகாதார விழாவில் 4 ஆயிரம் பேருக்கு பரிசோதனை

பாபநாசம் தூயசவேரியார் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த சுகாதார திருவிழா மருத்துவ முகாமில் 4 ஆயிரம் பேர் பரிசோதனை செய்து கொண்டனர்.
லோக்சபா உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் நடந்த இந்த மருத்துவ முகாமில் கலெக்டர் சண்முகம் கலந்து கொண்டு பாபநாசம் பகுதியைச் சேர்ந்த 127 பேருக்கு ரூபாய் 22 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 4 இடங்களில் சுகாதாரத் திருவிழா மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 20 ஆயிரத்து 433 பேர் பங்கேற்று சிகிச்சை பெற்று பயன் அடைந்துள்ளனர். பாபநாசத்தில் நடந்த முகாமில் 4 ஆயிரம் பேருக்கு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளைச் சேர்ந்த 200 டாக்டர்கள், 400 சுகாதாரப் பணியாளர்கள்
பங்கேற்று பரிசோதனை செய்தனர். மாற்று திறனாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

கண் பரிசோதனையும் செய்யப்படுகிறது. முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் உயர் அறுவை சிகிச்சைக்காக விண்ணப்பித்து உள்ள 2 ஆயிரத்து 740 பேரில் இதுவரை 2 ஆயிரத்து 436 பேருக்கு ரூபாய் 7 கோடியே 26 லட்சம் மதிப்பில் உயர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் சண்முகம் கூறினார்.
பாபநாசம் பேரூராட்சி தலைவர் சேக்தாவூது, ஒன்றியக்குழு தலைவர் சேதுராமன், துணைத் தலைவர் தாமரைச்செல்வன், அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் சுலைமான் பாட்சா, துணைத் தலைவர் சுரேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. ராம்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.

பின்னர் சரபோஜிராஜபுரம் தொடக்க கூட்டுறவு வங்கி வளாகத்தில் உள்ள நியாய விலைக்கடை மற்றும் வழுத்தூர் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கலெக்டர் சண்முகம் திடீர் ஆய்வு நடத்தினார்.

தொண்டியில் மேடான பகுதிக்கு குடிநீர் சப்ளை: கலெக்டர் உறுதி

தொண்டியில் மேடான பகுதிகளுக்கு குடிநீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஹரிஹரன் உறுதி அளித்தார்.
தொண்டியில் நேற்று முன்தினம் கலெக்டர் ஹரிஹரன் குடிநீர் சம்பந்தமாக ஆய்வு செய்தார். தொண்டியில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியில் காவிரி நீர் ஏற்றுவது குறித்தும் கிராமங்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது குறித்தும் ஆய்வு செய்தார்.

அப்போது பேரூராட்சி தலைவர் பாலுச்சாமி கலெக்டரிடம் ,''தொண்டியில் மகாசக்திபுரம், பயணியர் விடுதி போன்ற இடங்கள் மேடான பகுதியாக உள்ளது. இப்பகுதிக்கு தண்ணீர் சீராக செல்வதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதிபடுகிறார்கள். இப்பகுதிக்கு தனியாக பைப் லைன் பதித்து தண்ணீர் விட நடவடிக்கை எடுக்கவேண்டும் ,''என்றார். ''இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கபடும்,'' என, கலெக்டர் உறுதியளித்தார்.

சென்னை சுற்றுலா

சின்னமலை:
சென்னையை ஒட்டி உள்ள இடங்கள்: சென்னையை ஒட்டி அற்புதமான கோயில்கள், நினைவுச் சின்னங்கள், நீண்ட அழகான மணற்பரப்பு கொண்ட கடற்கரை பகுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள்

புலிக்காடு:
1609ம் ஆண்டு வாக்கில் டச்சு நாட்டவர் குடியேறிய பகுதி. சென்னையிலிருந்து 54 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த பகுதியில் “மைந்துள்ள ஏரி சுற்றுலாவாசிகளைப் பெரிதும் கவர்ந்து இழுக்கிறது. இங்கு பல்வேறு நீர் விளையாட்டுகளுக்கும் வாய்ப்பு

வேடந்தாங்கல்:
Hotel image
சென்னையிலிருந்து 85 கில�� மீட்டர் தூரத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. குறிப்பாக நவம்பர் முதல் பிப்ரவரி வ�யான காலத்தில் அதிக அளவில் பறவைகள் வருகின்றன. இது இந்தியாவின் மிகப் பெரிய பறவைகள் சரணாலயமாக

முதலைப்பண்ணை:
Hotel image
சென்னையிலிருந்து 44 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது முததலப் பண்ணை; இது ஒரு ஆராய்ச்சி மையமாகவும் திகழ்கிறது. இங்கு இந்தியா மற்றும் ஆப்ரிக்காவைச் சேர்ந்த பல்வேறு இன் முதலைகள் இயற்கையான சூழ்நி�யில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை பொதுமக்கள் பார்வையிட வசதி

முட்டுக்காடு:
Hotel image
சென்னையிலிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முட்டுக்காடு சிறந்த சிற்றுலா தலமாக திகழ்கிறது, விண்டசர்பிங் உட்பட பல நீர் விளையாட்டுகளுக்கு சிறந்த இடமாகவும்





கோவளம்:
சென்னையிலிருந்து 48 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது கோவளம் கடற்கரை. இங்கு கோட்டைகள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் அழகான கடற்கரை உள்ளன. சென்னையின் பரபரப்பிலிருந்து ஒய்வெடுக்க சிறந்த இடம் இது. இங்குள்ள கோட்டை கடற்கரை ஓட்டலாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு விண்டசர்பிங் மற்றும் நீச்சல் வசதிகள்

மாமல்லபுரம்:
Hotel image
சென்னையிலிருந்து 55 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாமல்லபுரம், பல்லவர் காலத்தில் 2வது தலைநகராக விளங்கியது. இங்குள்ள கடற்கரை கோயில், அர்ஜுனா தவம் சிற்பம் மற்றும் பல குடைவரை கோயில்கள், மண்டபங்கள் ஆகியவை அனைவரையும்




கடைவீதி:
சென்னையில் பொருட்களை வாங்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.சென்னையில் சேலைகள், பழமையான மற்றும் நவீன கலைப்பொருட்கள், கைவினைப் பொருட்கள், நகைகள் போன்றவை ஏராளமாக கிடைக்கும். திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த பத்தமடை பாய், பனைமர ஓலை மற்றும் நாரால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள், தஞ்சாவூரைச் சேர்ந்த உலோகப் பொருட்கள், மாமல்லபுரம் கற்சிற்பங்கள், காஞ்சிபுரம் பட்டு போன்றவை சென்னையில் கிடைக்கும். காதர் நவாஸ் கான் சாலையில் உள்ள ஆரோவில் மையத்தில் கையால் தயாரிக்கப்பட்ட காலணிகள், ஆடைகள், செராமிக் பொருட்கள் போன்றவை விற்கப்படுகின்றன. தரமான குறைந்த விலை பொருட்களுக்கு அரசு எம்போரியத்திற்கும்

கலாஷேத்திரா:
1936ம் ஆண்டு ருக்மிணி தேவி அருண்டேல் துவக்கிய இந்த கலாஷேத்திரா, பாரம்பரிய நடனமான பரதநாட்டியம், இசை, கலைகள் மற்றும் கைவினைத்தொழில்களின் சிறந்த பயிற்சி மையமாக திகழ்கிறது. 100 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இதில் குருகுல முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் உலகெங்கிலுமிருந்து மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இது கலைகளின் கோயில் என்று

தியாசோபிகல் சொசைட்டி:
அடையாறு நதியின் கரையில் அமைந்துள்ள இதை 1875ம் ஆண்டு எச்.பி.பிளவாட்ஸ்கி மற்றும் கர்னல் எச்.எஸ்.ஆல்கோட் ஏற்படுத்தினர். இங்கிருந்த அடையாறு ஆலமரம் மிகப் பெரியதாக விளங்கியது. இதன் வேர்கள் சுமார் 40 ஆயிரம் சதுர அடி தூரத்திற்கு பரவி இருந்தது. இந்த பகுதியில் ஒரு நூலகம், ஆராய்ச்சி மையம், தேவாலயம், மசூதி, புத்தர் கோயில், இந்து கோயில் ஆகியவை

தோட்டக்கலை தோட்டம்:
கத்தீட்ரல் சாலையில் 22 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த தோட்டக்கலை தோட்டத்தில் பல்வேறு அரிய ரக மரங்கள், புதர்வகைகள், மலர்ப் படுகைகள், குறு மரங்கள் ஆகியவை உள்ளன. விதைகள், நாற்றுகள், செடிகள் ஆகியவை இங்கு விற்கப்படுகின்றன. ஆண்டு தோறும் இங்கு நடைபெறும் மலர்க் கண்காட்சி அனைவரையும் கவர்வதாக

தியாகிகள் மணி மண்டபம்:
இந்திய விடுதலைக்காக உயிர் நீத்த தியாகிகள் நினைவாக கிண்டி சர்தார் வல்லபாய் படேல் சாலையில் அமைந்துள்ள இந்த மண்டபத்தில் தியாகிகளின் புகைப்படங்கள் இடம்

ராஜாஜி மண்டபம்:
திப்பு சுல்தானை வெற்றி கொண்டதன் நினைவாக பிரிட்டிஷார் கட்டிய விருந்து மண்டபம். இந்த மண்டபத்தில் அமைந்துள்ள விசாலமான படிக்கட்டுகள் இதற்க மேலும் அழகூட்டுகிறது. படிகளில் ஏறிச் சென்றதும் அமைந்துள்ள விசாலமான மண்டபம் காண்பவர் கருத்தைக் கவர்வதாக

ராஜாஜி நினைவகம்:
இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் தமிழக முதல்வராகவும் இருந்த ராஜாஜி என்று அழைக்கப்படும் சி.ராஜகோபாலச்சாரியாரின் நினைவகம் கிண்டியில்

பெரியார் நினைவகம்:
திராவிட இயக்கத்தின் தந்தையாக கருதப்படுபவரும் சுய மரியாதை இயக்கத்தை உருவாக்கியவருமான பெரியார் ஈ.வே.ரா., வாழ்ந்த வேப்பேரி, ஈ.வி.கே.சம்பத் சாலையில் அமைந்துள்ள இல்லம் பெரியார் நினைவகமாக

பிராந்திய ரயில் அருங்காட்சியகம்:
ரயில் பெட்டித் தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் ரயில்வேயின் வளர்ச்சியை விளக்கும் மாதிரிகள், புகைப்படங்கள், 50 ஆண்டுகள் பழமையான குட்டி ரயில் பெட்டிகள் ஆகியவை

ரிப்பன் பில்டிங்:
சென்னையில் மற்றொரு பெருமையான இந்த கட்டிம் கவர்னர் ரிப்பன் பெயரால் திகழ்கிறது. தற்போது இந்த அழகான கட்டிடத்தில் சென்னை மாநகராட்சி

திரைப்பட நகரம்:
இதில் திரைப்படங்கள் தயாரிப்பதற்கான பிரமாண்டமான செட்கள் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ளன. இதை சென்று பார்க்க கட்டணம்

மொழிப்போர்த் தியாகிகள் மண்டபம்:
இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிர் நீத்தவர்கள் நினைவாக கிண்டி காந்தி நிவைக வளாகத்தில்

அவெல்லா தெரசா தேவாலயம்:
சென்னையில் பிஷப் இல்லமாக முதலில் இது விளங்கியது. பின்னர் பிஷப் இல்லம், மயிலாப்பூருக்கு மாறியது. இந்த தேவாலயத்தில் உள்ள அன்னை மேரி, அன்னை அவெல்லா தெரசம்மாள் என அழைக்கப்படுகிறார். இங்கு ரோமன் கத்தோலிக்க முறையில் பிரார்த்தனை

ஸ்ரீ வடபழநி ஆண்டவர் கோயில்:
Hotel image
வடபழநி பகுதியில் அமைந்துள்ள இந்த முருகன் கோயில் நூறாண்டு பழமையானது. இங்கு 4 அடி உயர முருகன் விக்ரகம் உள்ளது.






பார்த்தசாரதி கோயில்:
Hotel image
திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்துள்ள இந்த வைஷ்ணவ கோயில், பழங்கால தென்னிந்திய கோயில் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இங்கு திருமாலின் பல்வேறு அவதாரங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இங்குள் கோயில் யானை, தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவதையும்



மத்ய கைலாஷ்:
Hotel image
நடுக்கைலாயம் என்று அழைக்கப்படும் இந்த கோயிலில் பரமேஸ்வரர், அம்பிகை, ஆதித்யன், திருமால் ஆகியோருடன் விநாயகரும் இடம் பெற்றுள்ளார். இந்த கோயிலில் ஆஞ்சநேயர் மற்றும் வைரவருக்கு தனி சந்நிதிகள் உள்ளன. நவகிரகங்களும் உள்ளன. அடையாறில் இருந்து தரமணி செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த கோயில், கண்கவர் பளிங்கு கற்களால்

காளிகாம்பாள் கோயில்:
சென்னை தம்புச் செட்டி தெருவில் அமைந்துள்ள காளி

அய்யப்பன் கோயில்:
Hotel image
சென்னையில் உருவான முதல் அய்யப்பன் கோயில் நுங்கம்பாக்கத்தில் மகாலிங்கபுரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் அக்டோபர் முதல் ஜனவரி வரை சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இதேபோல் ராஜா அண்ணாமலைபுரத்திலும் ஒரு அய்யப்பன் கோயில் உள்ளது. கேரளாவில் சபரிமலையில் உள்ள அய்யப்பனே இங்கும் மூல விக்ரகம்; சபரி மலையில் உள்ளது போன்றே இங்கும் 18ம் படி

மருந்தீஸ்வரர் கோயில்:
Hotel image
11ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கோயில் அக்காலத்து கட்டிடநுட்பத்திற்கும் கலாசாரத்திற்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. ராமாயணம் எழுதிய வால்மீகி இந்த கோயிலுக்கு வந்து தரிசித்ததாக






கபாலீஸ்வரர் கோயில்:
Hotel image
மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயில். சிவபெருமா�ன் மயில் வடிவில் பார்வதி தேவி வழிபட்டதால் இந்த பகுதி மயிலாப்பூர் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இங்கு தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான திருஞான சம்பந்தர் பதிகம் பாடி ஒரு சிறுவனை உயிர்ப்பித்ததாகவும் புராணம் கூறுகிறது. மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் அறுபத்து மூவர் திருவிழா

அம்பேத்கார் மணி மண்டபம்:
இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கார் மணி மண்டபம் மந்தைவெளியில் அமைந்துள்ளது.

அஷ்டலட்சுமி கோயில்:
Hotel image
எலியட்ஸ் கடற்கரையில் அமைந்துள்ள இந்த கோயிலில் மகாலட்சுமியின் 8 வடிவங்கள் விக்ரகங்களாக உள்ளன. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இங்கு பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். நவராத்திரி விழா சிறப்பாக




குதிரை பந்தயம் ஒழிப்பு:
Hotel image
சென்னை கிண்டி குதிரைப் பந்தய மைதானத்தில் நடத்தப்பட்டு வந்த குதிரைப் பந்தயம் பணக்காரர்களைமேலும் பணக்காரர்களாகவும் ஏழைகளை மேலும் ஏழைகளாகவும் மாற்றி வந்தது. இதனால் குதிரைப் பந்தயத்தை ஒழிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதன் நினைவாக அண்ணாசாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் குதிரை வீரன் நினைவுச் சின்னம்
பாம்பு பூங்கா:
அடையாற்றில் குழந்தைகள் பூங்கா அருகே அமைந்துள்ள பாம்பு பூங்காவில் மலைப் பாம்பு, ராஜ நாகம் உட்பட பல்வேறு ரக பாம்புகளும் ஆமைகளும் உள்ளன.இங்கு பாம்பிலிரந்து விஷம் எப்படி எடுக்கப்படுகிறது என்பதை செயல் விளக்கம் மூலம் செய்து

கிண்டி தேசிய பூங்கா:
Hotel image
உலகிலேயே நகர்ப் பகுதிக்குள் அமைந்திருக்கும் ஒரே தேசிய பூங்கா கிண்டி தேசிய பூங்காதான். சென்னை நகரின் நுரையீரலாக கருதப்படும் மரங்கள் அடர்ந்த நூறு ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் அமைந்துள்ள இந்த தேசிய பூங்காவில் பல்வேறு மரங்களும் புள்ளி மான் போன்ற அரிய ரக விலங்குகளும், பறவைகளும்


விவேகானந்தர் இல்லம்:
Hotel image
ஐஸ் ஹவுஸ் என்று முன்பு அழைக்கப்பட்ட இடம் 1963 முதல் சுவாமி விவேகானந்தர் நினைவாக விவேகானந்தர் இல்லம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. 1842 முதல் 1874 வரை ஐஸ் கட்டிகளைச் சேமித்து வ�க்கும் இடமாக இது விளங்கியது. தற்போது இதில் விவேகானந்தர் தொடர்பான அரிய படங்கள் இடம்


போர் நினைவுச் சின்னம்:
2ம் உலகப்போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாக 1952ல் அமைக்கப்பட்டது. இங்கு நினைவுத் தூண் ஒன்றும் தியாகச் சிலுவையும் உள்ளது. 885 காமன்வெல்த் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், ஒரு போலந்து விமானப்படை வீரர் நினைவாக இது உருவாக்கப்பட்டுள்ளது. முதல் உலகப் போரில் ( 1914- 1918) உயிர் நீத்தவர்களின் நினைவுச் சின்னமும்

இயேசு ராஜா தேவாலயம்:
லயோலா கல்லூரி வளாகத்தில் இயேசு ராஜா தேவாலயம் உள்ளது. 1933ல் பிரஞ்சு மதகுருமார்களால் கட்டப்பட்ட இந்த தேவாலயம் கண்கவர் கட்டிட அமைப்பு

சாந்தோம் பாசிலிகா:
Hotel image
இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான் செயின்ட் தாமஸ் கல்லறை அமைந்துள்ள இடத்தில் சாந்தோம் பாசிலிகா உள்ளது. மெரினா கடற்கரையின் தெற்கு மூலையில் அமைந்துள்ள இதில் இந்த பகுதிக்கான கத்தோலிக்கர்களின் தலைமை மதகுருவான சென்னை ஆர்ச் பிஷப்பின் தேவாலயம்



டைடல் பார்க்:
Hotel image
வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பத் துறையின் தாயகமாக விளங்குகிறது. இங்கு பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மென்பொருள் நிறுவனங்கள் அமைந்துள்ளன. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உறைவிடமான இங்கு பல்வேறு நவீன வசதிகளுடன் பொழுதுபோக்கு அம்சங்களாக பில்லியர்ட்ஸ், டேபிள் டென்னிஸ், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளுக்கான வசதிகளும் இங்கு

வள்ளுவர் கோட்டம்:
Hotel image
திருவள்ளுவரின் நினைவாக திருவாரூர் தேர் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள நினைவகம். இதில் திருவள்ளுவரின் முழு உருவச்சிலை அமைந்துள்ளது. இதன் சுவர்களில் 1,330 குறட்பாக்களும்






எம்.ஜி.ஆர்., நினைவு இல்லம்:
Hotel image
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., வாழ்ந்த ஆற்காடு சாலையில் உள்ள இல்லம் எம்.ஜி.ஆர்., நினைவு இல்லமாக தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு







கொடிமரம்:
செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள கொடிமரம் பிரிட்டிஷார் காலத்தில் அமைக்கப்பட்டது. இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்டு, காலத்தை வென்று இன்றும் ஒரு அதிசயமாக இது விளங்குகிறது. நாள்தோறும் இதில் தேசியக் கொடி ஏற்றப்படுவது முக்கிய அம்சமாகும். இது இந்தியாவிலேயே உயரமான கொடிக் கம்பமாக

காந்தி நினைவகம்:
அகிம்சா மூர்த்தியான மகாத்மா காந்தியின் நினைவகம் கிண்டியில்

பாரதியார் நினைவகம்:
தேசியக் கவி பாரதியார் வாழந்த திருவல்லிக்கேணி இல்லம் பாரதியார் நினைவகமாக

பகத்வத்சலம் நினைவகம்:
முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தின் நினைவகம் கிண்டியில்

அண்ணா சதுக்கம்:
Hotel image
மெரினா கடற்கரையின் வட பகுதியில் தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் சமாதி அசைந்துள்ளது. இதன் அருகே மற்றொரு முன்னாள் முதல்வரான எம்.ஜி.ஆரின் சமாதியும்






ஐகோர்ட்:
Hotel image
சென்னை நகரின் மற்றொரு பிரதான கட்டிடமாக கருதப்படும் சென்னை ஐகோர்ட் கட்டிடம் 1892ல் கட்டப்பட்டது. இந்தியாவில் உள்ள கோர்ட் கட்டிடங்களில் இது இரண்டாவது பெரிய கட்டிடமாகும். சென்னை சட்டக் கல்லூரியும் இதன் வளாகத்தில்




கோட்டை அருங்காட்சியகம்:
Hotel image
தலைமை செயலகத்திற்கு அருகே அமைந்துள்ள கோட்டை அருங்காட்சியகம் முதலில் கோட்டை ராணுவ அதிகாரிகளின் உணவருந்தும் இடமாக இருந்தது. பின்னர் அது பாங்காக உருவெடுத்தது. தற்போதைய ஸ்டேட் பாங்கின் முன்னோடி இதுதான். 1796ல் இது கலங்கரை விளக்கமாவும் செயல்பட்டது. 1948 முதல் கோட்டை அருங்காட்சியகமாக இயங்கி வரும் இதில் சென்னை நகரை உருவாக்கியவர்களின் மூல கையெழுத்து பிரதிகள், பழங்கால காசுகள், வெள்ளிப் பொருட்கள், சீருடைகள் ஆகியவை உள்ளன.

செயின்ட் ஜார்ஜ் கோட்டை:
Hotel image
சென்னையின் பிரதான வரலாற்றுச் சின்னமாக கருதப்படும் இந்த கோட்டை இங்கிலாந்தின் மத குருவான செயின்ட் ஜார்ஜ் பெயரில் அமைந்துள்ளது. இந்த கோட்டை பகுதியில் தற்போது தமிழக சட்டசபை, தலைமைச் செயலகம், தொல்பொருள் துறை அலுவலகங்கள், ராணுவ முகாம்கள்



சென்னை பல்கலைக்கழகம்:
1857ம் ஆண்டில் உருவானது சென்னை பல்கலைக்கழகம். லண்டன் பல்கலைக்கழக மாதிரியில் உருவாக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் தற்போதும் இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக

வெள்ளையனே வெளியேறு இயக்கம்:
வெள்ளையனே வெளியேறு இயக்க பொன் விழாவை ஒட்டி அடையாறு காந்தி மண்டபம் அருகே நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

அமீர் மகால்:
ஆற்காடு நாவபு அரச குடும்பத்திற்குச் சொந்தமான மாளிகை இது. 14 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த மாளிகை 1789ல் கட்டப்பட்டது. திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலையில் “மைந்துள்ள இதை பொதுமக்கள் முன் அனுமதி பெற்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து நாட்களிலும்

இந்திய குடியரசு பொன்விழா தூண்:
Hotel image
இந்திய குடியரசின் பொன்விழா நிர்வாக மெரினா கடற்கரைச் சாலையில் கலங்கரை விளக்கம் அருகே இந்த தூண் அமைக்கப்பட்டுள்ளது.
காந்தியின் கனவு: மகாத்மா காந்தியின் அகிம்சா நடைமுறை உருவான இடம். திலக் பவன் என்று தற்போது அழைக்கப்படும் இந்த இடத்தில் மகாத்மா தங்கி இருந்தபோது தான், பிரிட்டிஷ் அரசின் ரவுலட் சட்டத்தை எதிர்த்து அகிம்சா முறையில் போராட முடிவெடுத்தார். இதை ஒட்டி சோழா ஷெரட்டான் ஓட்டல் முன்பாக நினைவுத் தூண்

கலங்கரை விளக்கம்:
Hotel image
மெரினா கடற்கரையின் தென்பகுதியில் கலங்கரை விளக்கம்








நேப்பியர் பாலம்:
Hotel image
தலைமை செயலகத்திலிருந்து மெரினா கடற்கரை செல்லும் சாலையில் கூவம் நதி மீது அமைந்துள்ள நேப்பியர் பாலம் 1869ல் கட்டப்பட்டது. பிரிட்டிஷ் பொறியியல் தொழில் நுட்பத்திற்கு எடுத்துக்காட்டாக இது




எலியட்ஸ் கடற்கரை:
Hotel image
தென்சென்னையில் அமைந்துள்ள அழகான சிற்றுலா தலம். இந்த அழகான கடற்கரைக்கு இங்கு அமைந்துள்ள அஷ்டலட்சுமி கோயில் மேலும் பெருமை சேர்க்கிறது. 8 முகங்களுடன் கூடிய லட்சுமி விக்ரகங்கள் தனித்தன் கருவறையில் அமைந்துள்ளன. இந்த கடற்கரைப் பகுதியில் ஆரோக்கிய மாதா மடோனாவின் தேவாலயமும் உள்ளது.


அரசு அருங்காட்சியகம்:
Hotel image
பாந்தியன் சாலையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் தற்கால கலைப் பொருட்கள் முதல் வரலாற்று காலத்துக்கு முற்பட்ட கலைப் பொருட்கள் வரை இடம் பெற்றுள்ளன. இங்கு பிரதான தென் இந்திய ராஜ பரம்பரைகளின் நினைவுச் சின்னங்கள் பெருவாரியாக உள்ளன. இங்குள்ள பல்வேறு கால வெண்கல மற்றும் இதர உலோக சிற்பங்கள், விலங்கியல் மற்றும் புவியியல் பகுதிகள் பார்வையாளர்களின் கருத்தைக் கவர்வதாக உள்ளன.

அமராவதி பகதியில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலைகள், அவரது வாழ்க்கையைச் சித்தரிப்பதாக உள்ளன. இங்குள்ள தேசிய கலைப் பொருள் பகுதியில் 10 முதல் 13ம் நூற்றாண்டு வரையான காலத்தைச் சேர்ந்த வெண்கலப் பொருட்கள், 16, 18ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த முகலாய ஓவியங்கள், ராஜஸ்தானி மற்றும் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த தட்சிண கலைப் பொருட்கள், பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த கைவினைப் பொருட்கள் ஆகியவை கண்ணைக் கவர்வதாக அமைந்துள்ளன

தேசிய கலைப்பொருள் பகுதி அமைந்துள்ள கட்டிடம் சிவப்பு கற்களால் கட்டப்பட்டது. இங்குள் பொருட்கள் மட்டுமல்லாமல் இந்த கட்டிடமே ஒரு கலைப்பொருளாக திகழ்கிறது.

கன்னிமாரா பொது நூலகம்:
Hotel image
தேசிய நூலகங்களில் ஒன்று. இங்கு ஏராளமான நூல்களும் இதழ்களும் உள்ளன. கம்பூயட்டரில் இயங்கும் தொடுதிரை வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள இது காலை 9 மணி முதல் இரவு 07- 30 வரை திறந்திருக்கும். தேசிய விடுமுறை நாட்களில் இது செயல்படாது. அனுமதி

பிர்லா கோளரங்கம்:
Hotel image
இந்த நவீன கோளரங்கம் அரை வட்ட வடிவிலான உருண்டையான கட்டிடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள கம்ப்யூட்டர் மய கருவிகள் மூலம் வானில் உள்ள கோள்களையும் நட்சத்திரங்களையும் காண முடியும்.

கோட்டூர்புரம் காந்தி மண்டபம் அருகே பெரியார் அறிவியல் மற்றும் தொழிநுட்ப மையத்தில் அமைந்துள்ள இந் கோளரங்கத்தில் ஆங்கிலம் ( காலை 10-45; பகல் 01-15; 03-45) தமிழ் ( பகல் 12; 02-30) மொழிகளில் விளக்கம் தரப்படுகிறது. இதற்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.20; சிறியவர்களுக்கு

அண்ணா நகர் கோபுரம்:
Hotel image
சென்னையில் உள்ள உயரமான மற்றும் பெரிய பூங்கா கோபுரம். அண்ணாநகர் பூங்காவில் அமைந்துள்ள இந்த கோபுரம் வட்ட வடிவில் சுற்றி சுற்றிச் செல்லும் படிக்கட்டுகளைக் கொண்டுள்ளது. இதன் உச்சியில் இருந்து சென்னையை முழுமையாக கண்டு ரசிக்க முடியும். அண்ணாநகர் ரவுன்டானா அருகே அமைந்துள்ள இதற்கு நுழைவு கட்டணம் ரூ.1; காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வாரத்தில் 7 நாட்களும் இது திறந்திருக்கும்.