மே 10-ல் பிளஸ்-2 தேர்வு முடிவுகள்

பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடந்தது. 6 லட்சத்து 89 ஆயிரத்து 687 மாணவ -மாணவிகள் தேர்வு எழுதினர். மாணவர்கள் 3 லட்சத்து 22 ஆயிரத்து 381 பேரும், மாணவிகள் 3 லட்சத்து 67 ஆயிரத்து 306 பேரும் தேர்வு எழுதியுள்ளனர்.

விடைத்தாள் திருத்தும் பணி முடிந்துவிட்டன. மதிப்பெண்கள் பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. கிண்டியில் உள்ள டேட்டா சென்டரில் கம்ப்யூட்டரில் மதிப்பெண்கள் பதிவு செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

என்ஜினீயரிங், மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு வசதியாக பிளஸ்-2 தேர்வு முடிவுகளை கடந்த ஆண்டுகளை விட இந்த வருடம் முன் கூட்டியே வெளியிட தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. மருத்துவ, என்ஜினீயரிங் கவுன்சிலிங் வழக்கத்தை விட முன்கூட்டியே நடத்த திட்டமிட்டு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

உயர் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த காலங்களை விட முன் கூட்டியே நடைபெறுகிறது. இதை கருத்தில் கொண்டு பிளஸ்-2 தேர்வு முடிவை மே 10-ந் தேதி வெளியிடலாம் என்று அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

0 comments: