Showing posts with label சிங்கம். Show all posts
Showing posts with label சிங்கம். Show all posts

3 வயது சிறுமியின் கையை கடித்த சிங்கம்


சத்தீஷ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் உள்ள மிருகக்காட்சி சாலைக்கு ஆசிம் மாலிக் என்பவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். அவரது உறவுக்கார சிறுமி சபனாவும் (வயது 3) அவர்களுடன் சென்றாள்.


சிங்கங்கள் அடைக்கப்பட்டிருந்த பகுதியில் அவர்கள் சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தபோது, ஆர்வக்கோளாறில் சபனா, ஒரு சிங்கத்தின் கூண்டுக்குள் கையை நுழைத்தாள்.

கோபத்தில் இருந்த சிங்கம், அவளை நோக்கி பாய்ந்து கையை பிடித்து கடித்தது. இதில் சிறுமியின் கை துண்டாகி விட்டது. வலியால் துடித்த அவளை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாள். அவளது சிகிச்சை செலவுகளுக்கு உதவுவதாக மிருகக்காட்சி சாலை நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.