Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

ஸ்ருதிஹாஸன்-நடிகர் சித்தார்த் காதல்?

நடிகர் சித்தார்த்தும் கமல்ஹாஸனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாஸனும் காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்றும் பரபரப்பாக துவங்கியுள்ளன.

நடிகர் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இவர் லக் படம் மூலம் நடிகையாக பாலிவுட்டில் அறிமுகமானார். தமிழில் கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன் படத்தில் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் அவதாரம் எடுத்தார். இப்போது தெலுங்கிலும், தமிழிலும் நாயகியாக நடிக்கிறார்.

தெலுங்கில் அவர் நடிக்கும் படத்தில் 'பாய்ஸ்' சித்தார்த் தான் கதாநாயகன். அந்த படத்தில் ஸ்ருதியின் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாம். நாயகியாக வெற்றிக் கொடி நாட்டியாக வேண்டிய கட்டாயமிருப்பதால் ஸ்ருதியின் பாத்திரம் பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்டுள்ளதாம்.

இதற்கிடையில், படத்தின் நாயகன் சித்தார்த்தையே, தனது நிஜ நாயகனாகவும் ஆக்கிக் கொள்ள முடிவு செய்துவிட்டாராம் ஸ்ருதி.

சித்தார்த்தும், ஸ்ருதிஹாசனும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கு மீடியாவில் இந்த செய்தி இப்போது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.. ஏற்கெனவே திருமணமாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கமல்ஹாஸனுக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரிக்கையில், இதுபற்றி விரைவில் ஸ்ருதியே பேசுவார் என்று மட்டும் கூறினர்.

ரம்பாவுக்கு டும் டும் டும் ....!

கனடாவைச் சேர்ந்த தொழிலதிபரை ரம்பா மணக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் ரம்பாவுக்கு தமிழில் ‘விடியும்வரை காத்திரு’ படம் மட்டுமே இருக்கிறது.

இதை அவரது அண்ணி பல்லவி தயாரிக்கிறார். இன்னும் படம் ரிலீசாகவில்லை.இந்நிலையில், கனடாவைச் சேர்ந்த மேஜிக் வுட் என்ற நிறுவனத்துக்கு ரம்பா அம்பாசடராக நியமிக்கப்பட்டார். இந்நிறுவனம் அவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய பி.எம்.டபிள்யூ காரை பரிசாக வழங்கியது.


இந்நிலையில், மேஜிக் வுட் நிறுவனத்தின் உரிமையாளர் இந்திரனுக்கும், ரம்பாவுக்கும் டிசம்பர் 27ம் தேதி திருப்பதியில் திருமணம் நடக்க உள்ளதாக தெலுங்கு பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருக்கிறது. இதுபற்றி ரம்பா தரப்பில் கேட்டபோது, ‘’ரம்பா திருமணம் பற்றி பல்வேறு செய்திகள் வந்துள்ளது.