Showing posts with label ஆபத்து. Show all posts
Showing posts with label ஆபத்து. Show all posts

சென்னைக்கு வருகிறது ஆபத்து!

சென்னையில் இயற்கை மற்றும் ரீசைக்கிள் எனப்படும் மறுசுழற்சி மின்சக்தி பற்றிய கருத்தரங்கம் நடந்தது. இதில் கலந்து கொண்ட ராபர்ட் சவான் என்ற விஞ்ஞானி இங்கிலாந்து நாட்டின் பிரபல ஆராய்ச்சியாளரும், சுற்றுசூழல் தொடர்பாக ஆய்வு நடத்தி வருபவருமாவார். ஐஸ்மேன் என்ற பட்டபெயரினால் அழைக்கப்படும் இவர் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும்போது பூமி யின் வட துருவம் மற்றும் தென் துருவத்தில் உள்ள பனிமலைகள், பாறைகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறேன். மைனஸ் 73 டிகிரி வெப்ப நிலையிலும் ஆய்வு நடத்தி இருக்கிறேன். இங்கு நடத்தப்பட்ட ஆய்வுகளில் துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதை காணமுடிகிறது. அதில் அண்டார்டிகாவில் பனி உருகும் வேகம் அபாய கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இதனால் உலகெங்கும் கடல் மட்டம் பெருமளவு உயரும் நிலை உருவாகி உள்ளது. அண்டார்டிகாவில் பனி உருகும் வேகம் இதே போன்று தொடர்ந்தால் இன்னும் 80 ஆண்டுகளில் சென்னை நகரம் கடலில் மூழ்கி விடும். நாம் உபயோகப்படுத்தும் பெட்ரோல் வாகனங்களான மோட்டார் சைக்கிள் கார்கள் போன்றவை வெளியேற்றும் புகை, அனல் மின் நிலையம் வெளியிடும் புகையும்தான் இதற்கு காரணம். அவை இயற்கை பாதுகாப்பை அழித்து அண்டார்டிகாவை உருக வைத்து கொண்டிருக்கிறது. இதை நாம் நிறுத்தியாக வேண்டும் என்று ராபர்ட் சவான் கூறியுள்ளார்.

ராபர்ட் சவான் 1984-ம் ஆண்டு தென்துருவத்தில் 70 நாட்கள் 900 மைல் தூரம் நடந்து சென்று ஆய்வு நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பச்சிளம் குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவும் ஆபத்து

மதுரை அரசு மருத்துவமனையில், நிதியுதவி பெற பச்சிளம் குழந்தை களுடன் பல மணி நேரம் பெண்கள் காத்து கிடப்பதால், குழந்தைகளுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் 'ஜனனி சுரஷ்கா யோஜனா' திட்டத்தின்கீழ், இங்கு குழந்தை பெற்றவர்களுக்கு மகப்பேறு உதவித்தொகை வழங்கப்படுகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ், 12,000 ரூபாய் ஆண்டுவருமானம் உள்ள, நகரில் வசிப்போருக்கு 600 ரூபாயும், புறநகரில் வசிப்போருக்கு 700 ரூபாயும் வழங்கப்படுகிறது.


கடந்த பிப்ரவரியில் நிதி ஒதுக்கப்படாததால், 400 பேர் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தினமலர் மதுரை இணைப்பில் மார்ச் 2ல் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து உடனுக்குடன் நிதி வழங்கப்படுகிறது. இப்
பணம் பெற, பச்சிளம் குழந்தைகளுடன் பெண்கள் பல மணி நேரம் டீன் அறை அருகே, 100ம் நம்பர் அறை முன், காலை முதல் மதியம் வரை காத்து கிடக்கின்றனர். இவ்வழியே பெரும்பாலான நோயாளிகளும், பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இதனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு எளிதாக தொற்றுநோய் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதுஎன்று எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்.


பெண்களிடம் கேட்டபோது, 'குழந்தையுடன் வந்தால்தான் பணம் தருகிறார்கள். குழந்தையுடன் வராவிட்டால், 'நீதான் பிள்ளையை பெற்றாயா என்பதற்கு என்ன ஆதாரம்' என்று கேட்கின்றனர். இதனால் வேறுவழியில்லாமல் குழந்தையுடன் வரவேண்டியுள்ளது' என்றனர். மருத்துவமனை நிர்வாகம் கூறியதாவது : குழந்தையுடன் வரவேண்டிய அவசியமும் இல்லை. 'மாலை 3 மணிக்கு வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள்' என்று அறிவிப்பு ஒட்டியிருந்தாலும், காலையிலேயே வந்து காத்து கிடக்கின்றனர். அவர் களை காக்க வைக்கக்கூடாது என்பதற்காக, ஒருமணி நேரத்திற்குள் பணத்தை கொடுத்து அனுப்பி வைக்கிறோம், என்றனர்.

ஆபத்தை ஏற்படுத்தும் சீன பொம்மைகள் !

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொம்மைகளை சுங்க இலாகாவினர் தூத்துக்குடியில் பறிமுதல் செய்தனர்.
சில மாதங்களுக்கு முன் சீனாவில் இருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த சீன பொம்மைகளை சுங்க இலாகாவினர் சென்னையில் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்தியாவின் பிரபல கம்பெனிகளின் ஷாம்புகளை போலவே போலியாக தயாரிக்கப்பட்ட சீனா பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து துறைமுகங்களின் மூலம் இறக்குமதி செய்யப்படும் கன்டெய்னர்களை சுங்க இலாகாவினர் தீவிரமாக கண்காணி்த்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் இறுதியில் சீனாவில் இருந்து இரு கன்டெய்னர்கடள் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றின் விபரங்கள் முழுமையாக குறிப்பிடப்படவில்லை. இதனால் கமிஷனர் ராஜன் தலைமையிலான அதிகாரிகள் அதனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த கன்டெய்னர்களில் இருந்து சீனா பொம்மைகள்,விளையாட்டு பொருட்கள் பார்ட்டிகளில் பயன்படுத்தப்படும் ஸ்பிரேக்கள் போன்றவைகளை பறிமுதல் செய்தனர்.

இதில் அந்த பொம்மைகள் தரம் குறைந்ததாகவும், உற்பத்தியாளர்கலின் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள் குறிப்பிடபடவில்லை. இந்த பொம்மைகளில் காரீயம் என்ற ரசாயனம் கலந்த பெயின்டுகள் பளிச்சிடும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

எனவே இத்தகைய பொம்மைகளை வைத்து குழந்தைகள் விளையாடுவதால் அவை குழந்தைகளுக்கு நுரையில் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும் ஆபத்து இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் அதனை இறக்குமதி செய்த நிறுவனம் சமர்பித்த தர சான்றிதழ்களும் பொருட்களுக்கும் தொடர்பில்லாமல் இருந்தது.

சீனா பொம்மைகளை இறக்குமதி செய்ய சுங்க துறை நிர்ணயித்திருக்கும் தரத்திற்கும் குறைவாக இருந்ததால் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.