Showing posts with label தடை. Show all posts
Showing posts with label தடை. Show all posts

கிரிக்கெட் வீரர்கள் விளம்பரங்களில் நடிக்க 5 ஆண்டு தடை?

Front page news and headlines today

இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளம்பர படங்களில் நடித்து கோடிகளை குவிக்கின்றனர். இதனால் தான் உலக கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் நாட்டுக்காக விளையாடுவதில் ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர். எனவே, அணியில் அறிமுகமாகி 5 ஆண்டுகள் வரை விளம்பரங்களில் நடிப்பதற்கு வீரர்களுக்கு பி.சி.சி.ஐ., உடனடியாக தடை விதிக்க வேண்டும்.


வெஸ்ட் இண்டீசில் நடந்த மூன்றாவது உலக கோப்பை 'டுவென்டி-20' தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதற்கு வீரர்களின் விளம்பர மோகம் முக்கிய காரணம். இந்திய அணியில் அறிமுகமாகி சில போட்டிகளில் பிரகாசித்து விட்டால், சம்பந்தப்பட்ட வீரர்களை விளம்பர நிறுவனங்கள் மொய்க் கின்றன. பல்வேறு பொருட்களுக்கு விளம்பர 'மாடலாக' தோன்றும் இவர்கள் குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்களாக மாறி விடுகின்றனர். இதற்கு பின் இவர்களுக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் சுத்தமாக போய் விடுகிறது.


அணியில் பெயரளவுக்கு ஒட்டிக் கொண்டு இருக்கின்றனர். தற்போது ஐ.பி.எல்., மூலமாகவும் பெருமளவு சம்பாதிக் கின்றனர். வீரர்கள் நாட்டுக்காக விளை யாடுவதற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில் ஒவ்வொரு வீரரும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இந்தியாவுக்காக சிறப்பாக விளையாட வேண்டும். இதற்கு பின் தான் விளம்பர படங்களில் நடிக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.


யுவராஜுக்கு தேவை 'பிரேக்': அடிக்கடி காயத்தால் அவதிப்படும் யுவராஜ் சிங், தொடர்ந்து போட்டிகளில் சொதப்புகிறார். இவருக்கு நீண்ட 'பிரேக்' அளிப்பது தான் ஒரே தீர்வாக அமையும். இவரை போல படுமட்டமாக ஆடும் ரவிந்திர ஜடேஜா போன்றவர்களுக்கும் வாய்ப்பு மறுக்க வேண்டும்.


'பார்ட்டிக்கு' போகச் சொன்னது யார்? உலக கோப்பை தோல்விக்கு ஐ.பி.எல்., 'பார்ட்டிகள்' தான் காரணம் என்று கேப்டன் தோனி சொன்னார். உண்மையில் ஐ.பி.எல்., 'பார்ட்டிகளில்' கலந்து கொள்ள வேண்டும் என்று எந்த ஒரு வீரரும் நிர்ப்பந்திக்கப்படவில்லை. நடனப் பெண்கள், உயர்ரக மதுபானம் என உல்லாசமாக பொழுதை போக்கவே வீரர்கள் பங்கேற்றனர். சச்சின் போன்ற ஒரு சிலர் மட்டுமே துணிச்சலாக கலந்து கொள்ளவில்லை. இது குறித்து பெங்களூரு வீரர் உத்தப்பா கூறுகையில்,''பார்ட்டிகளில் பங்கேற்பது தனிப்பட்ட வீரர்களின் விருப்பம். நான் 2 பார்ட்டியில் தான் கலந்து கொண்டேன்,''என்றார். வரும் ஐ.பி.எல்., தொடரில் 'பார்ட்டிகளுக்கு' தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்த முறை இந்த காரணத்தை தோனி சொல்லமுடியாது.

இரவு 8 மணிக்கு மேல் சினிமாக்களுக்கு தடை

பாகிஸ்தானில் இரவு 8 மணிக்கு மேல் திரையரங்குகளும், 7 மணிக்கு மேல் மார்க்கெட்டுகளும் இயங்கக்கூடாது என, அரசு தடை விதித்துள்ளது.பாகிஸ்தானில் கடும் மின்பற்றாக்குறை நிலவுவதால், இரவு 8 மணிக்கு மேல் திரையரங்குகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல ஷாப்பிங் மால்கள், சந்தைகள் உள்ளிட்டவை இரவு 7 மணிக்கு மேல் இயங்கக் கூடாது என, அரசு தடை போட்டுள்ளது.பாகிஸ்தானில் மொத்தம் 1,300 தியேட்டர்கள் இருந்தன. தற்போது, 200 தியேட்டர்கள் தான் உள்ளன. சமீபத்தில் தான் இந்திய திரைப்படங்களை வினியோகிக்க உரிமை வழங்கப்பட்டிருந்தது. அந்நாட்டில் கடும் மின்சார பற்றாக்குறை நிலவுவதை யொட்டி இரவு 8 மணிக்கு மேல் திரையரங்கம் இயங்கக் கூடாது, ஜெனரேட்டரை இயக்கியும் திரைப்படங்களை காட்டக்கூடாது என, அரசு தடை விதித்துள்ளது.இதனால், திரையரங்க உரிமையாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


அரசின் இந்த உத்தரவு சினிமா உலகத்துக்கு சாவு மணி அடிப்பதாக உள்ளது என, திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.அரசின் உத்தரவை பின்பற்றப்போவதில்லை என, மார்க்கெட் மற்றும் மால்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் தற்போது கடும் வெயில் காணப்படுகிறது. பொதுமக்கள் வெயிலுக்கு பயந்து மாலையில் தான் வெளியே வருகின்றனர். அந்த சமயத்தில் கடையை மூட சொல்வதை ஏற்க முடியாது என, வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடை அணியத் தடை

பொது இடங்களில் முழுமையாக முகத்தை துணியால் மறைக்கும் வண்ணம் ஆடை அணிவதற்கு பெண்களுக்கு தடை விதிக்கும் சட்டமூலமொன்று பெல்ஜிய பாராளுமன்ற கீழ் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலமானது பூங்காக்கள், வீதிகள் போன்ற இடங்களில் ஆடை அணிந்திருப்பவரின் முகத்தை அடையாளங் காணத் தடையாக அமைந்த எந்தவொரு ஆடையை அணியவும் தடை விதிப்பதை நோக்காகக் கொண்டது. இந்த சட்டமூலத்திற்கு எதிராக பெல்ஜிய பாராளுமன்ற கீழ்சபையில் எவரும் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சட்டமூலம் தற்போது செனட் சபையின் வாக்கெடுப்புக்குச் செல்லவுள்ளது.

இந்நிலையில் மேற்படி சட்டமூலம் தொடர்பில் செனட் சபையில் நீண்ட விவாதம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சட்டமூலத்திற்கு ஆஜராகியிருந்த 134 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்திருந்தனர். இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பின் போது ஆஜராகியிருக்கவில்லை.

செனட் சபையில் பிரதிநிதித்துவம் வகிக்கும் லிபரல்களும் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்த சட்டமூலத்திற்கு எதிராக கேள்வி தொடுக்கப் போவதாக தெரிவித்தனர்.

கடந்த வாரம் பெல்ஜிய அரசாங்கம் பிளவடைந்த நிலையில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் மேற்படி சட்டமூலத்தை செனட் சபையில் நிறைவேற்ற மேலும் அதிக காலம் செல்லலாம் எனக் கூறப்படுகிறது.

எனினும், மேற்படி சட்டமூலத்தை ஜூன் அல்லது ஜூலை மாதமளவில் சட்டமாக நடைமுறைப்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.

இந்த சட்டமூலம் சட்டமாக மாறினால் அதனை மீறுபவர்கள் 15 யூரோவிலிருந்து 25 யூரோ வரையான தண்டப் பணத்தையோ அன்றி 7 மாத சிறைத்தண்டனையையோ எதிர்கொள்ள நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக்குக்கு தடை

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட் களுக்கு விரைவில் தடை விதிக்கப்படும்' என மேயர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில், வருமுன் காப்போம்' திட்டத்தின் கீழ் 30 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.


திருவல்லிக்கேணியில் நடந்த மருத்துவ முகாமை துவக்கி வைத்து மேயர் சுப்ரமணியம் பேசியதாவது: சென்னை மாநகராட்சி சார்பில், இதுவரை 135 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு இரண்டரை லட்சம் பேர் பங்கு பெற்றுள்ளனர். முப்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள மருந்து பொருட்கள் வழங் கப்பட்டுள்ளது. மாநகராட்சி சுகாதார மையங்களில், அதி நவீன முறையில் கருப்பை வாய் புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சைகள் நல்ல முறையில் செய்யப்படுகிறது. இதற்காக, மத்திய அரசு சமீபத்தில் மாநகராட்சி கமிஷனருக்கு விருது வழங்கியுள்ளது.


இன்று நடக்கும் முகாம்களில் கோடை காலத்தில் வரும் நோய் களுக்கும், காச நோய்க்கும் முக்கியத்துவம் அளித்து சிகிச்சை அளிக்கப்படும். பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்படும் சுகாதாரமற்ற குடிநீர், குளிர்பானங்களால் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படுகிறது. இருபது மைக்ரான் அளவுள்ள, ஒரு முறை மட்டுமே உபயோகிக்கப் படும் பிளாஸ்டிக் பைகளை தடை செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.


வரும் 29ம் தேதி நடைபெறும் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். இத்துடன் ஒரு முறை மட்டுமே உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்படும் குடிநீர், குளிர்பான பாக் கெட்டுகளும் தடை செய்யப்படும். இவ்வாறு மேயர் பேசி னார்.
கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

பாபரி மஸ்ஜித் இடிப்பு: குற்றம் சாட்டப்பட்ட 68 நபர்கள் பிரிட்டனுக்குள் நுழைய தடை?

பாபரி மஸ்ஜித் இடிப்பு விவகாரத்தில் லிபரான் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்ட 68 பேர் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரிட்டன் முன்னணி மனித உரிமை அமைப்புகள் நாடெங்கும் கோரிக்கை விடுத்து வருகிறது.
லிபரான் கமிஷனில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அந்த அறுபத்தெட்டு குற்றவாளிகளையும் பிரிட்டனுக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என்றும் கோரிக்கைவிடுத்துள்ளன.
பாபரி மஸ்ஜித் இடிப்புக் குற்றவாளிகள் எதிர்காலத்தில் பிரிட்டனில் நுழைய அனுமதிக்கப்பட்டால் அது அந்த நாட்டின் கவுரவத்திற்கே இழுக்காகும் என பிரிட்டனின் முன்னணி சமூக நல அமைப்புகளில் ஒன்றான கவுன்சில் ஆஃப் இன்டியன் முஸ்லிம்ஸ் அறிவித்துள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க பாபரி மஸ்ஜித் இடிப்புச்சதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் குற்றவாளிகள் என்பதை லிபரான் அறிக்கை சுட்டி காட்டியது.

லிபரான் கூறிய குற்றவாளிகள் மஸ்ஜித் இடிப்பிற்காக மட்டும் குற்றம் சாட்டப்பட்டவர்களல்ல, முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து கலவரங்களையும் நடத்தி ஆயிரக் கணக்கான அப்பாவி முஸ்லீம்களை படுகொலை செய்வதற்கும் மூலகாரணமாக விளங்கிய அவர்களை பிரிட்டிஷ் மண்ணில் வரவேற்க வேண்டாம்.

அவ்வாறு வரவேற்றால் அது மதவாதத்தை வரவேற்பதாக அமையும் என பிரிட்டிஷ் இந்திய முஸ்லிம் கவுன்சின் தலைவர் முஹம்மது முனஃப்ஷீகா தெரிவித்திருக்கிறார்.

கவுன்சில் ஆஃப் இந்தியன் முஸ்லிம்ஸ் அமைப்பின் அறிக்கையினைத் தொடர்ந்து பிரிட்டனில் செயல்பட்டு வரும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் மஸ்ஜித் இடிப்புக் குற்றவாளிகளுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டுள்ளன.

2006-ஆம் ஆண்டே குஜராத் படுகொலைகள் காரணமாக நரேந்திர மோடிக்கு அமெரிக்காவிலும் அதனை தொடர்ந்து பிரிட்டனிலும் அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் மிரிண்டா விற்பனைக்கு தடை

மிரிண்டா உள்ளிட்ட பெப்சிகோ இந்தியா ஹோல்டிங் நிறுவனத்தின் குளிர்பானங்களை சென்னையில் விற்க, சென்னை மாவட்ட நுகர்வோர் கோர்ட் தடைவிதித்துள்ளது.

சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர் சித்ரவேல். மதுராந்தகம் அருகில் உள்ள மாமண்டூரில் இயங்கிவரும் "பெப்சிகோ இந்தியா ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் மற்றும் இந்நிறுவனத்தின் குளிர்பானத்தை விற்றவர்களுக்கு எதிராக, இவர் தாக்கல் செய்த மனு: வடக்கு துறைமுக சாலையில் உள்ள சரவணா கூல் பாரில், கடந்த செப்டம்பர் 1 ம் தேதி, 600 மி.லி., "மிரிண்டா' குளிர்பானத்தை வாங்கினேன்.

பாட்டிலை திறந்தபோது, அதில் பூச்சியும், கருப்புநிற தூசு துகள்களும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். பொதுமக்களின் உடல்நலத்திற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல் பட்டுள்ளனர்.

இச்செயல் சேவை குறைப்பாட்டோடு, பொது சுகாதாரத்திற்கு எதிரான குற்றம்.
மாமண்டூரில் உள்ள, "பெப்சிகோ இந்தியா ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட்' நிறுவன குளிர்பான தயாரிப்புகளை விற்க தடைவிதிக்க வேண்டும்.

சென்னை, மைசூர் மற்றும் காசியாபாத்தில் உள்ள, அரசு உணவு பரிசோதனை மையங்கள் ஆய்வுசெய்து, அறிக்கை தரவேண்டும்.

மாசுகலந்த தயாரிப்பை விற்றதால், ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடாக தர வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இவ்வழக்கில் எதிர்மனுதாரர்கள் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. புகார் மனுவை, சென்னை மாவட்ட (வடக்கு) நுகர்வோர் கோர்ட் நீதிபதி மோகன்தாஸ், உறுப்பினர்கள் கமலகண்ணன், ஷீலா, விசாரித்தனர்.

மனுதாரர் சார்பில் வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார். மாமண்டூரில் இயங்கிவரும், "பெப்சிகோ இந்தியா ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தின் குளிர் பானங்களை சென்னையில் விற்க, சென்னை மாவட்ட (வடக்கு) நுகர்வோர் கோர்ட் இடைக்கால தடைவிதித்தது.

சுகாய் போர் விமானங்கள் பறப்பதற்கு திடீர் தடை

ராஜஸ்தானில் சுகாய் ரக போர் விமானங்கள் விழுந்து நொறுங்கியதை தொடர்ந்து விமானப்படையில் உள்ள 100 சுகாய் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து சுகாய்&30 ரக போர் விமானங்களை இந்திய விமானப்படை வாங்கியது. கடந்த 8 மாதங்களில் 2 சுகாய் போர் விமானங்கள் ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கியது.

கடந்த ஏப்ரல் 30ம் தேதி நடந்த விபத்தில் விமானத்தை இயக்கிய விமானி பலியானார். மற்றொருவர் காயத்துடன் தப்பினார். கடந்த ஞாயிறன்று நடந்த விபத்தில் விமானம் தரையில் விழுவதற்கு முன்பே அதில் இருந்த 2 விமானிகளும் பாராசூட் உதவியுடன் குதித்து உயிர் தப்பினர்.

1996ம் ஆண்டு முதல் சுகாய் ரக போர் விமானங்களை இந்திய விமானப்படை பயன்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு வரை சுகாய் ரக விமானங்கள் விபத்தில் சிக்கியதில்லை. இப்போது 8 மாதத்துக்குள் 2 சுகாய் விமானங்கள் விழுந்து நொறுங்கியது விமானப்படை அதிகாரிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இதையடுத்து, விமானப்படையிடம் உள்ள 100 சுகாய் ரக போர் விமானங்கள் பறக்க நேற்று திடீரென தடை விதிக்கப்பட்டது. எல்லா விமானங் களிலும் சோதனை நடத்த விமானப்படை முடிவு செய்துள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ர‌ஜி‌‌‌னிகா‌ந்‌த் மக‌ள் பட‌த்து‌க்கு உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் இடை‌க்கால தடை

நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் செள‌ந்த‌ர்யா தயாரித்துள்ள 'கோவா' திரைப்படத்தை வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. வரும் 11ஆம் தேதிக்குள் பதில் அளிக்கவும் ரஜினியின் மகளுக்கு தா‌க்‌கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

WDநந்தனம் என்.ஏ.பி.சி. பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வருண் மணியன் என்பவர் நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு எதிராக தன்னுடைய சார்பிலும், தன்னுடைய நிறுவனத்தின் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அபிராமபுரத்தில் உள்ள ஆக்கர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த், 2007ஆம் ஆண்டு என்னை சந்தித்து 'கோவா' படம் தயாரிப்பதற்கு நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, என்னுடைய நிறுவனத்தின் சார்பில் அவருக்கு 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 50 லட்ச ரூபாயும், 2008ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 60 லட்ச ரூபாயும் கடனாக கொடுத்தேன்.இந்த கடனை 24 சதவிகித ஆண்டு வட்டியில் திருப்பி கொடுப்பதாக அவர் எனக்கு பிராமிசரி நோட் எழுதி தந்தார். 'கோவா' படத்தை வெளியிடுவதற்கு முன்பு இந்த கடனை திரும்ப செலுத்தி விடுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இது தவிர, என்னுடைய சொந்த பணத்திலிருந்தும் அவருக்கு 50 லட்ச ரூபாய் தந்தேன். ஆனால் இதுநாள் வரை இந்த கடனை அவர் திரும்ப தரவில்லை.எனவே, கடனை திரும்பக் கேட்டு சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு கடிதம் எழுதினேன். இதற்கு பதில் அளித்த ஆக்கர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் இயக்குனர் லதா ரஜினிகாந்த், இந்த பணத்தை நவம்பர் 30ஆம் தேதிக்குள் திரும்பத் தந்துவிடுவதாக கூறியிருந்தார். ஆனால், அவர்கள் தெரிவித்திருந்தபடி பணத்தை எனக்கு திரும்பத் தரவில்லை.

இந்த நிலையில், அந்த நிறுவனம் தயாரித்த 'கோவா' படம் வெளியிடப் படவிருப்பதாக கூறப்படுகிறது.அந்த படம் வெளியானால் நான் கொடுத்த கடன் தொகையை திரும்ப வாங்க முடியாமல் நான் பெரிதும் பாதிக்கப்படுவேன். எனவே, என்னுடைய கடன் தொகை திரும்ப செலுத்தப்படும் வரை 'கோவா' படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். ரூ.1.60 கோடி அசல் தொகையை 24 சதவிகித ஆண்டு வட்டியில் திரும்ப வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.இந்த மனுவை இ‌ன்று ‌விசா‌ரி‌த்த நீதிபதி ஜி.ராஜசூர்யா, 'கோவா' படத்தை டிசம்பர் 11ஆம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். அத்துடன் இந்த மனுவுக்கு அன்றைய தினத்திற்குள் சௌந்தர்யா ரஜினிகாந்த் பதில் அளிக்க தா‌க்‌கீது அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

சீமான் வெளிநாடுகள் செல்ல தடை வருமா?

மாவீரர் தினமான இன்று (நவம்பர் 27) உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்ச்சியில் தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றவிருக்கிறார்கள்.


அந்த வகையில் கனடாவில் நடைபெறும் மாவீரர் தின நிகழ்ச்சியில் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளரான சிறப்பு பேச்சாளராக நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குனருமான சீமான் அழைக்கப்பட்டிருந்தார்.


அழைப்பை ஏற்று கடந்த 25ஆம் தேதி கனடா ஸ்காப்ரோவில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்ந்ச்சியில் சீமான் மிகவும் உணர்ச்சிபூர்வமாக பேசினார்.


இந்தக் கூட்டத்தில் சீமான் பேச்சு அரங்கம் முழுவதும் திரண்டு இருந்த தமிழர்களை கவர்ந்தது. கூட்டம் நடந்த மறுநாளான 26ஆம் தேதி காலை கனடாவில் உள்ள டொரொண்டாவில் அந்நாட்டு சட்டத்துக்கு புறம்பாக பேசியதாக திரைப்பட இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்ட சீமானை இந்தியாவுக்கு அனுப்ப அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்தது.


இந்நிலையில் அழைப்பின் பேரில், பிரபாகரன் பிறந்தநாள் மற்றும் மாவீரர் தினம் ஆகியவற்றில் பங்குபற்றுவதற்காக கனடா சென்ற சீமான் கனடா போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின், டொரொண்டா விமான நிலையத்திலிருந்து தாமாகவே விரும்பி தமிழ்நாடு திரும்பியுள்ளார். சென்னை விமான நிலைத்தில் சீமானின் ஆதரவாளர்கள் அவரை வரவேற்க தயாராக உள்ளனர்.


கனடா போலீசார் சீமானை தமிழகத்துக்கு திருப்பி அனுப்பியதையடுத்து, இனி சீமான் வெளிநாடுகளுக்கு போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டள்ளதாக தெரிகிறது.


இனி அவர் இந்தியாவில் இருந்து வெளிநாடுகள் செல்லும்போது, இந்திய பாஸ்போர்ட் அதிகாரிகள் சோதனையில் அவர் கனடா போலீசாரால் திருப்பி அனுப்பட்டதை சுட்டிக் காட்டப்பட்டு அவரது பயணம் தடைபடக் கூடும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன