மேன்ஷனில் தங்கியிருந்த 13 காஷ்மீர் இளைஞர்கள் கைது

சென்னை: சென்னை யில் புதிதாக கட்டப்பட்டுள்ள சட்டசபைக் கட்டடம் திறக்கப்படவுள்ள நிலையில், சட்டசபைக் கட்டடத்திற்கு அருகில் உள்ள திருவல்லிக்கேணியில் மேன்ஷனில் தங்கியிருந்த 13 ஜம்மு காஷ்மீர் மாநில இளைஞர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய சட்டசபை கட்டப்பட்டு வருகிறது. இதன் திறப்பு விழா வருகிற 13ம் தேதி நடைபெறுகிறது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் வருகின்றனர்.

இதையடுத்து இலங்கைத் தமிழ் அகதிகள் 3 நாட்களுக்கு வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சட்டசபை வளாகத்திற்கு அருகில் உள்ள திருவல்லிக்கேணியில் உள்ள மேன்ஷன்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர். இந்தப் பகுதி மேன்ஷன்களின் சொர்க்கபுரியாகும். ஏகப்பட்ட மேன்ஷன்கள் இங்கு உள்ளன.

வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வேலைக்கு வரும் இளைஞர்கள் இங்குதான் தங்கியிருந்து வேலைக்குப் போய் வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த மேன்ஷன்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேன்ஷன்கள் தவிர இப்பகுதியில் உள்ள லாட்ஜுகளிலும், போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்று ஒரு மேன்ஷனில் சோதனை நடத்திய போது ஜம்மு- காஷ்மீரைச் சேர்ந்த ஷா நவாப்கான் (22), பிலால் அகமது (20), ரியாஸ் அகமது (24), அர்ஷத்லோனா (25). ஷபீர்பாத் (23), மகராஜ்தார் (25), முகமது அல்பாப்தார் (24), நபிபாத் (24), ஹபீர் அகமது (24), பிலால் அகமது (24), முஸ்தபா அகமது (22), தஸ்தூர் உசேன் (24), குலாம் முகமது (24) ஆகியோர் தங்கியிருந்தனர். அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த 13 பேரும் கடந்த நான்கு நாட்களாக இங்கு தங்கியுள்ளனர். சுடிதார், போர்வை விற்கும் தொழில் செய்வதாகவும், கடந்த 6 மாதமாக சென்னையில் தங்கி இருந்து விற்பனை செய்வதாகவும் அவர்கள் கூறினர்.

ஆனால் அவர்கள் மீது போலீஸாருக்கு சந்தேகம் இருப்பதால், அனைவரின் கைரேகைகளை பதிவு செய்து டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சமீபத்தில் ராயபுரம் பகுதியில் 2 பிச்சைக்காரர்கள் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. மேலும் அவர்கள் இருவரிடமும், ரூ.36ஆயிரம் பணமும் இருந்தது.

இந்த நிலையில் தற்போது மேன்ஷனில் 13 பேர் தங்கியிருந்த விதம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவி்க்கப்பட்டுள்ளது.

ரிமோட் தெரு விளக்கு- முதல்முறையாக டெல்லியில் அறிமுகம்

இந்தியாவில் முதல் முறையாக டெல்லி நகர வீதிகளில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் தெரு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக டெல்லியில் சுமார் 101 கி.மீ தொலைவுக்கு 52 சாலைகளில் 2 ஆயிரத்து 235 விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

லோதி சாலை, பீஷ்ம பிதா மார்க், ஜவஹர்லால் நேரு மார்க் உள்ளிட்ட சாலைகளில் இந்த விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. டெல்லி மாநகராட்சி ஆணையர் கே.எஸ்.மேஹ்ரா இன்று திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மொபைல் போன் சேவைக்கு பயன்படுத்தப்படும் ஜிபிஆர்எஸ் மற்றும் ஜிஎஸ்எம் தொழில்நுட்பத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பிலிப்ஸ் எலெக்ட்ரானிக்ஸ், பிபி பிராஜக்ட் லிட், ஸ்வேகா பவர் டெக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன.

இத்திட்டத்தின் மூலம், தெருவிளக்குகளை குறிப்பிட்ட அலுவலகத்தில் இருந்த படியே இயக்க இயலுவதோடு, எரிசக்தி சேமிப்பும், கார்பன் மாசு கட்டுப்படுவதும் சுலபமாகும் என மின் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியைத் தொடும் முயற்சியில் தமிழர்

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியைத் தொடும் முயற்சியில் ஒரு தமிழர் இறங்கவுள்ளார்.

அவரது பெயர் சந்தோஷ் குமார். வயது 27. இவரது தந்தை ரியாத்தில் வேலை பார்த்து வந்தார். பின்னர் துபாய்க்கு இடம் மாறினார். இந்த மாதத்தில் தனது எவரெஸ்ட் சாதனைப் பயணத்தைத் தொடங்குகிறார் சந்தோஷ் குமார்.

65 நாட்களில் சிகரத்தின் உச்சியை அடைய திட்டமிட்டுள்ளார். சிறார்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு எதிராக இந்த பயணத்தை அர்ப்பணிப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் சிறார் பாலியல் கொடுமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உதவ நிதி சேகரிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் முயற்சிக்கு 60 ஆயிரம் டாலர் வரை செலவாகும் என்று கூறுகிறார் சந்தோஷ் குமார். இதற்காக நிதியுதவியையும் அவர் எதிர்பார்த்துள்ளார்.

இதுதொடர்பான விவரங்களை அறிய கீழ்க்கண்ட இணையதளங்களை நாடலாம்..

முஸ்லிம் லீக் கட்சி விழா

தந்தை பெரியாரின் அன்புக்கும், பேரறிஞர் அண்ணாவின் பாசத்திற்கும், எனது மட்டற்ற மதிப்புக்கும் உரிய பெருந்தகையாளர் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் சுதந்திர இந்தியாவில் 1948 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 10 ஆம் நாள் தொடங்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் நிறுவன நாள் விழா, 10.3.2010 அன்று நெல்லை மாநகரில் நிகழ்வ தறிந்து மகிழ்கிறேன்.

இந்திய அரசியல் நிர்ணய சபை இந்தியாவின் பொது மொழியாக இந்திதான் இருக்க வேண்டும் என்றபோது, அந்த அவையின் உறுப்பினராக இருந்த காயிதே மில்லத் அதனைக் கடுமையாக எதிர்த்ததுடன், இந்தி கூடாது என்றால் இந்தியாவின் ஆட்சி மொழியாக எந்த மொழியை ஏற்பது என்று அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் கேட்டபோது, வளம் செறிந்ததும், தொன்மை நிறைந்ததுமான என தருமைத்தாய் மொழி யாம் தமிழ் மொழியையே ஆட்சி மொழியாக்கலாம்டு என ஆணித்தரமாக முழங்கினார்.

தமிழ் மத்திய ஆட்சி மொழியாக ஏற்கப்பட வேண்டும் எனத் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வரும் தமிழக அரசின் சார்பில், ஞுஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடுடு நடைபெறவிருக்கும் வேளையில் நினைவுகூர்ந்து அன்னாரைப் போற்றுவது டன் அவர் நிறுவிய முஸ்லிம் லீக் இயக்கத்தின் நிறுவன நாள் விழா எழுச்சியுடன் நிகழ எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை உரித் தாக்குகிறேன் என்று முதல்வர் கருணாநிதி தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம்

மலேசியாவில் நித்யானந்தாவின் போதனைகளைப் பரப்பும் நோக்கத்தில் இரண்டு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த ஆசிரமம் மூடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருந்த விடியோ வெளியானதைத் தொடர்ந்து நித்யானந்தாவுக்கு தமிழகம் உள்பட உலகம் முழுவதும் உள்ள தமிழகர்களிடம் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன. இதையடுத்து தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள அவரது ஆசிரமம் மூடப்பட்டது. ஆசிரமத்தில் இருந்து ஏராளமான விஜபிக்கள் வெளியேறினர்.

இந்நிலையில் நித்யானந்தா மீதான பாலியல் புகாரைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களால் ஆசிரமத்துக்கு தினமும் ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்ததாக மலேசியாவிலுள்ள நித்யானந்தா ஆசிரமத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

இதையடுத்து மலேசிய இந்து சங்கத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து ஆசிரம நடவடிக்கைகளை சிறிதுகாலத்துக்கு நிறுத்திவைக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டதாக அச்செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

நித்யானந்தாவின் போதனைகளைப் பரப்பும் நோக்கத்தில் மலேசியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்த ஆசிரமம் துவங்கப்பட்டதாக தெரிவித்த அச்செய்தித்தொடர்பாளர், மலேசியாவில் நித்யானந்தாவுக்கு எவ்வளவு பக்தர்கள் உள்ளனர் என்பது குறித்தோ, எத்தனை ஆசிரமங்கள் உள்ளன என்பது பற்றியோ சரியான புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை என்று கூறினார்.

நித்யானந்தாவுக்கு நெருக்கமான பெண் சீடரிடம் விசாரணை

நித்யானந்தாவுக்கு நெருக்கமான பெண் சீடர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருந்த விடியோ வெளியானதைத் தொடர்ந்து நித்யானந்தாவுக்கு தமிழகம் உள்பட உலகம் முழுவதும் உள்ள தமிழகர்களிடம் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன. இதையடுத்து தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள அவரது ஆசிரமம் மூடப்பட்டது. ஆசிரமத்தில் இருந்து ஏராளமான விஜபிக்கள் வெளியேறினர்.

இந்நிலையில் கொடைக்கானலில் சொகுசு விடுதி ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த விடுதி நித்யானந்தாவுக்கு சொந்தமானது என்று போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கொடைக்கானலைச் சேர்ந்த பெண் சீடர் ஒருவர், நித்யானந்தாவுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் தனது கணவரை பிரிந்துள்ளதாகவும், கொடைக்கானலில் கட்டப்பட்டு வரும் சொகுசு விடுதிப் பற்றி போலீசார் அந்த பெண் சீடரிடம் விசாரணை நடத்துவதாகவும் கூறப்படுகிறது.

நம்பி ஏமாந்துட்டேனே...!' - நித்யானந்தா பற்றி நடிகை தாரா

நித்யானந்த சாமியார் ஒரு மோசடி ப் பேர்வழி. அவரை நம்பி ஏமாந்த லட்சக்கணக்கான பக்தர்களில் நானும் ஒருத்தி என்று புலம்பியுள்ளார் நடிகை தாரா.

கன்னடத்தில் முன்னணி நடிகை கம் அரசியல்வாதி இந்த தாரா. தமிழில் இங்கேயும் ஒரு கங்கை, நாயகன் என சில படங்களில் நடித்தவர்.

நித்யானந்தரின் மிகத் தீவிரமான பக்தை இந்த தாரா. நித்யானந்தமே பக்தர்களுக்கு 'நித்திய ஆனந்தம்' என்றும், கடவுள் அவதாரம் என்றெல்லாம் வெளிப்படையாக ஆதரவு அளித்தவர் தாரா. நித்யானந்தத்துக்காக பல ரியல் எஸ்டேட் டீல்களில் இவர் மத்தியஸ்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. கன்னடத் திரையுலகில் நித்யானந்தன் புகழ் பரப்புவதில் முன்னணியில் இருந்தார்.

தனது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் தவறாமல் நித்யானந்தனின் பெங்களூர் பிடாதி ஆசிரமத்துக்குப் போய் நாள் முழுக்க அங்கே சேவைகள் செய்வது தாராவின் வழக்கம்.

இந்த நிலையில் நித்யானந்தன் - ரஞ்சிதா பலான டிவிடி சன் செய்திகளில் ஒளிபரப்பாகி, நாடு முழுவதும் கொதிப்பைக் கிளப்ப, அதிர்ந்து போய்விட்டாராம் தாரா.

விடிய விடிய விஸ்கி, ப்ளீஸ்!

விடிய விடிய குடித்து விட்டு படு கும்மாளமாக நடிகைகள் சேர்ந்து போட்ட குத்தாட்டமும், கோலாகல பார்ட்டியும் வெளிச்சத்திற்கு வந்து சந்தி சிரிக்க வைத்துள்ளது.

ஆண்களுக்குப் போட்டியாக ரீமாவும், ஸ்ரேயாவும் இந்த பார்ட்டியில் படு ஓவராக குடித்து, பயங்கரமாக குதியாட்டம் போட்டனராம். வார இதழ் ஒன்று இந்தப் பார்ட்டியில் பாட்டிலும், பசங்களுமாக நடிகைகள் போட்ட ஆட்டத்தை படத்துடன் வெளியிட்டு பரபரப்பைக் கூட்டியுள்ளது.

தங்களின் ஆண் நண்பருடன் அரை குறை ஆடையும் கைகளில் சரக்குமாக நெருக்கியடித்துக் கொண்டு ஆட்டம் போட்டதை செய்தியாக வெளியிட்டிருந்தன சில மாலை பத்திரிகைகள். அவை போதிய கவனம் பெறாத நிலையில்தான், குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் இதனை மீண்டும் பெரிய அளவில் வெளியிட்டது.

இந்தப் படங்களில் அரை குறை ஆடைகள், வாய் நிறைய மப்புச் சிரிப்பு, கண்களில் ததும்பி வழியும் போதை, குத்தாட்டம் என்று படு ராவாக இருக்கிறார்கள் ரீமாவும், ஷ்ரியாவும்.

மொத்தம் ஆறு ஆண்களாம், எட்டு பெண்களாம். 14 பேரும் சேர்ந்து விடிய விடிய கூத்தடித்துள்ளனராம்.

மும்பையிலோ வேறு எங்குமோ இந்த கோலாகல கலாச்சார திருவிழா நடைபெறவில்லை. சிங்காரச் சென்னையில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பண்ணை இல்லத்தில்தான் இந்த குத்தாட்ட சமபந்தி நடந்துள்ளது.

சினிமாக்களில் பக்தியும், பவித்ரமுமாக வரும் நடிகைகள் எல்லாம் குடிபோதையில் போடும் இந்த ரகசிய ஆட்டங்கள் வருத்தமும், வேதனையும் அளிப்பதாக திரையுலகினரில் சிலரே கூறுவதாக இந்த செய்தியை வெளியிட்டுள்ள குமுதம் ரிப்போர்ட்டர் தெரிவித்துள்ளது.

துபாயில் கனமழைச ஒரேநாளில் 170 விபத்துகள் பதிவு

அமீரக பகுயில் கடந்த சில நாட்களாக கடும் மழை வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் கன மழை காரணமாக 170 விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக துபாய் போலீசார் தெரிவித்தனர்.

துபாயில் 22.2 மி.மீட்டரும், அபுதாபி நகரில் 43.4 மி.மீ. ஷார்ஜாவில் 35.6 மி.மீ.மழை பெய்தது. டான்டா என்ற சிறிய நகரத்தில் தான் மிக அதிக பட்சமாக 63 மி.மீ.மழை பெய்தது.
மசாபி நகரில் 61.2 மி.மீ.மழை பெய்தது.

மழை காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. பல்வேறு சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

போக்குவரத்து பாதிப்பு, கார் விபத்துகள், வெள்ளப் பெருக்கு என கடுமையான பாதிப்பை அமீரக நகரங்கள் எதிர்கொண்டன.

நடிகையுடன் உல்லாசமாக இருக்கும் நித்தியானந்தா சுவாமிகள்: பரபரப்பு - போராட்டம்

பிரபல சாமியார் நித்தியானந்தா, தமிழ் நடிகை ஒருவருடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதையடுத்து தமிழகம் மற்றும் பெங்களூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமக் கிளைகளை பக்தர்களும், பொதுமக்களும் அடித்து நொறுக்கினர். நித்யானந்தாவுக்கு எதிராக இந்து மக்கள் கட்சியும் போராட்டத்தில் குதித்துள்ளது.


கதவைத் திற காற்று வரும் என்ற தலைப்பில் நித்தியானந்தா சுவாமிகளின் போதனைகள் குறுகிய காலத்தில் பிரபலமானவை. வெறும் 32 வயதே ஆகும் நித்தியானந்தாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர்.


தமிழகத்தின் திருவண்ணாமலையில் பிறந்த ராஜசேகரன் என்ற இயற்பெயர் கொண்ட நித்தியானந்தாவுக்கு கர்நாடகத்திலும், தமிழகத்திலும் ஆசிரமங்கள் உள்ளன.


குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் இவருக்கு ஏராளமான பக்தர்கள் உண்டு. பெங்களூரில் மைசூர் சாலையில் உள்ள பிடுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் நித்யானந்த தியான பீடம் என்ற பிரபலமான ஆசிரமத்தை நடத்தி வருகிறார். இது தான் தலைமையகமும் கூட.


உலகம் முழுவதும் 33 நாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளை துவக்கி ஆன்மிக பணிகள் ஆற்றி வருவதாக மக்கள் மத்தியில் அறியப்பட்டவர். பல தரப்பினர் மத்தியிலும் பிரபலமான இவர் ஆங்கிலம் மற்றும் தமிழில் வசீகரமாக பேசுவதிலும், எழுதுவதிலும் வல்லவர்.


இந் நிலையில், நித்தியானந்தா, ஒரு நடிகையுடன் இருப்பது போன்ற வீடியோவை பிரபல தமிழ்த் தொலைக்காட்சி நேற்று ஒளிபரப்பியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


அந்த நடிகையின் முகத்தை மட்டும் அந்தத் தொலைக்காட்சி மறைத்து விட்டது. மாறாக அவரது பெயர் 'ஆர்' என்ற ஆங்கில எழுத்தில் ஆரம்பமாகும் என்று மட்டும் குறிப்பிட்டது.


அந்த நடிகையும், நித்தியானந்தாவும் சின்னச் சின்ன சில்மிஷங்களில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன.


இந்த வீடியோ எப்போது எப்படி எங்கே எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட நடிகைதான் இதை ரகசியமாக படமாக்கியிருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது.


அந்த நடிகைதான் இந்த வீடியோவை சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிக்கு அனுப்பியிருக்கலாம் எனவும் ஊகிக்கப்படுகிறது.


இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பரபரப்பு கூடியது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சாமியாரின் ஆசிரமத்திற்கு விரைந்து வந்த இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி ஆசிரமத்தைத் தாக்கினர். அங்கிருந்து நித்தியானந்தாவின் படங்களை கிழித்துத் தீயிட்டுக் கொளுத்தினர்.


திருவண்ணாமலை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சிவபாபு தலைமையில் அக்கட்சியினர் திடீரென ஆசிரமம் முன் வந்து நித்யானந்தருக்கு எதிராகக் குரல் எழுப்பினர்.


இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் சிவபாபு உள்ளிட்ட 10 பேரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர். ஆசிரமத்திற்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


இந்த செய்தியை அறிந்த உடன், ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் பெங்களூரில் உள்ள ஆசிரமம் முன் குவிந்துவிட்டனர்.


ஆசிரமத்தை இழுத்து மூட வேண்டும் என்றும் போலிச் சாமியாரை கைது செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரும் கலவரம் மூளும் அபாயம் இருப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


கடலூர் பகுதியில் நித்யானந்தருக்கு எதிராக பெரும் கலவரம் வெடித்துள்ளது. அவரது போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. அவற்றின் மீது சாணியை அடித்தனர்.


புதுச்சேரியில் உள்ள இந்த சாமியாரின் யோகா மையம், ஆசிரமம் போன்றவை மக்களால் சூறையாடப்பட்டது. பொருட்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன.


போலீசார் குவிக்கப்பட்டும் மக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சாமியாரின் படங்கள் பொருட்களுக்கு தீவைத்தனர்.


சர்ச்சைக்குள்ளாகியுள்ள நித்தியானந்தாவுடன் உள்ள நடிகையின் பெயரை சம்பந்தப்பட்ட சேனலும், அதன் குழுமத்தைச் சேர்ந்த நாளிதழும் கூறாமல் விட்டு விட்டதால் அவரது அரைகுறை முகத்தை வைத்து அவர் யார் என்பதை அறிய தமிழகம் முழுவதும் மக்கள் அலை பாய்ந்தவண்ணம் உள்ளனர்.


'உலகின் ஆன்மீக ஒளி நானே' என்று கூறி வந்த நித்யானந்தா, அமெரிக்க இந்துப் பல்கலைக் கழகத்துக்கு தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்மோகனுக்கு செளதி பல்கலை டாக்டர் பட்டம் வழங்கியது

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கிங் சாத் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிக் கெளரவித்தது.

ரியாத்தில் உள்ள கிங் சாத் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமருக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மன்மோகன் சிங் பேசுகையில், கல்வித்துறையில் இரு நாடுகளும் மேலும் நெருக்கமான முறையில் செயல்பட வேண்டும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சாரம் மற்றும் கல்விப் பரிமாற்ற உறவுகள் ஆயிரம் ஆண்டு பழமையானவை.

இது சமீப காலமாக தேய்ந்து போய் விட்டது. இதை மறு சீரமைத்து மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றார்.

முட்டை வீசி ஹோலி கொண்டாடிய தம்மு

ஹோலி பண்டிகையை இன்று கோலாகலமாகக் கொண்டாடினர் தமிழில் முன்னணி நடிகைகளாக உள்ள தமன்னா, ஸ்ரேயா, நீத்து சந்திரா மற்றும் ஜெனிலியா போன்ற வட இந்திய நடிகைகள். கலர் பொடிகளுக்கு பதில் முட்டையை வீசி ஹோலி கொண்டாடினார் தமன்னா.

ஸ்ரேயா கொச்சியில் போக்கிரி ராஜா என்ற மலையாள படப்பிடிப்பில் இருந்தார். அங்கு படப்பிடிப்பு இடைவேளையில் ஹோலி கொண்டாடினார். தயாராக கொண்டு வந்திருந்த கலர் பொடியை துணை நடிகைகள் மீது அள்ளி வீசினார். கலர் தண்ணீரையும் பீய்ச்சி அடித்தார்.

"ஹோலி பண்டிகை கொண்டாடுவதில் எனக்கு ரொம்ப இஷ்டம். தோழிகள் மேல் கலர் தண்ணீரை பீய்ச்சி அடிப்பதில் அலாதி பிரியம் உண்டு.

சிறு வயதில் கலர்பொடி பட்டால் தோலில் வியாதி வரும் என்று என் தாயார் பயமுறுத்தி வீட்டுக்குள் வைத்திருப்பார். அதை மீறி வெளியே ஓடி விடுவேன். தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் மேல் எல்லாம் கலர் பொடி, கலர் தண்ணீரை அடிப்பேன். பலரிடம் இதற்காக திட்டும் வாங்கி இருக்கிறேன்.

இந்த வருடம் வீட்டில் ஹோலி கொண்டாட முடியாமல் போனது வருத்தமாகத்தான் உள்ளது", என்றார்

யார் இந்த 'தில்லு துர'?

இது இப்பொழுது எல்லோராலும் பேசப்படும் ஒரு விஷயம். இது என்ன படமா? அல்லது இது தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியா? என்ற கேள்விக்கு பதில்
இது ஒரு சமூக விழிப்புணர்வு செய்தி விளம்பரம்.

நம்பிக்கை மையம் சார்பில் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டது.

நம்முடைய ஒவ்வொரு விதமான சந்தேகங்களை தீர்க்க ஒவ்வொரு இடம் இருப்பது போல், எச்..வி எய்ட்ஸ் பற்றிய சந்தேகங்களை தீர்க்க இருக்கும் இடமே நம்பிக்கை மையம். இந்த விளம்பரம் மூன்று பாகங்களாக உள்ளது,

இதில் முதல் பாகத்தில், தில்லுதுர என்ற கதாபாத்திரத்தை பற்றியும், இரண்டாம் பாகத்தில் அவனுக்கு ஏற்படும் குழுப்பத்தையும் சந்தேகத்தையும், மூன்றாவது இறுதி பாகத்தில் அதற்கான விடையாக நம்பிக்கை மையத்தையும் காட்டியுள்ளனர்.

இதில் பிரதானமாக இரண்டு விஷயங்கள் கூறப்பட்டுள்ளது. ஒன்று... ஆலோசனை பெற நினைப்பது தப்பில்லை ஆனால் தப்பில்லாமல் ஆலோசனை பெற நம்பிக்கை மையம் செல்லலாமே என்றும் இரண்டாவதாக நம்பிக்கையுடன் நம்பிக்கை மையம் சென்றால் சரியான தெளிவு பிறக்கும் என்பதையும் சொல்லியுள்ளனர்.

தில்லுதுர என்ற கதாபாத்திரம் மற்றும் கான்செப்ட்டை என் அன்ட் டி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் உருவாக்க, ஜே ஜெர்ரி இயக்கி அந்த காதாபாத்திரத்தை உயிரோட்டமுள்ள கதாபாத்திரமாக மாற்றியுள்ளனர்.

இந்த காதாபாத்திரத்தில் நடிகரும், நடன இயக்குனருமான ராம்ஜி சமூக நோக்கோடு நேர்த்தியாக நடித்துள்ளார்.

முன்பு புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா என்ற பரபரப்பான விளம்பரம் மூலம் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தில்லு துர என்ற பெயரில் வெளியான இந்த விளம்பரம் மக்களிடையே பெரும் வரவேற்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி விட்டது என்பது குறிப்பிடத்தக்க