மலேசியாவில் மூடப்பட்ட நித்யானந்தாவின் ஆசிரமம்

மலேசியாவில் நித்யானந்தாவின் போதனைகளைப் பரப்பும் நோக்கத்தில் இரண்டு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த ஆசிரமம் மூடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருந்த விடியோ வெளியானதைத் தொடர்ந்து நித்யானந்தாவுக்கு தமிழகம் உள்பட உலகம் முழுவதும் உள்ள தமிழகர்களிடம் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன. இதையடுத்து தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள அவரது ஆசிரமம் மூடப்பட்டது. ஆசிரமத்தில் இருந்து ஏராளமான விஜபிக்கள் வெளியேறினர்.

இந்நிலையில் நித்யானந்தா மீதான பாலியல் புகாரைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களால் ஆசிரமத்துக்கு தினமும் ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்ததாக மலேசியாவிலுள்ள நித்யானந்தா ஆசிரமத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

இதையடுத்து மலேசிய இந்து சங்கத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து ஆசிரம நடவடிக்கைகளை சிறிதுகாலத்துக்கு நிறுத்திவைக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டதாக அச்செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

நித்யானந்தாவின் போதனைகளைப் பரப்பும் நோக்கத்தில் மலேசியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்த ஆசிரமம் துவங்கப்பட்டதாக தெரிவித்த அச்செய்தித்தொடர்பாளர், மலேசியாவில் நித்யானந்தாவுக்கு எவ்வளவு பக்தர்கள் உள்ளனர் என்பது குறித்தோ, எத்தனை ஆசிரமங்கள் உள்ளன என்பது பற்றியோ சரியான புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை என்று கூறினார்.

0 comments: