குவாண்டானாமோ பே அமெரிக்க சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சோமாலியா நாட்டை சேர்ந்த ஒருவர் அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சித்திரவதைகள் குறித்து பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அறிவித்துள்ளார்.
சோமாலிய நாட்டைச் சேர்ந்த மொஹமது சுலைமைன் பர்ரே என்ற அந்த இளைஞர் கூறியதாவது: சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் என்னை பாகிஸ்தானில் வைத்து கைது செய்த அமெரிக்கப் புலணாய்வு அதிகாரிகள் அங்கு வைத்து கொடுமைப்படுத்தி விசாரித்தனர். அதன் பிறகு தன்னை ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு சென்று அங்கு கடுமையாக சித்ரவதை செய்தனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவில் உள்ள குவாண்டானாமோ கொடுஞ்சிறைக்கு கொண்டு சென்று அங்கு தன்னை தனிமைச் சிறையில் அடைத்து சித்திரவதை செய்ததாகவும் கூறியுள்ளார். அங்கு இருந்து வெளியே வந்தது கல்லறையில் இருந்து வந்தது போல இருப்பதாகவும் மொஹமது சுலைமைன் தெரிவித்தார்.
இதைப்போன்று அச்சிறையிலிருந்து வெளியான பலர் கூறியுள்ளனர் என்பதும், இவர் மீது எவ்விதக் குற்றச்சாட்டையும் அமெரிக்கா இதுவரை நிரூபிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment