உலகின் செல்வாக்கு மிக்க முஸ்லிம்களின் பட்டியலில் கலாம்.

உலகின் மிக செல்வாக்கு மிக்க முஸ்லிம்கள் பட்டியலில் இந்தியர்களான முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நடிகர் ஷாருக்கான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகம் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் உள்ள முஸ்லிம்கள் குறித்த சர்வதேச அளவில் ஆய்வு நடத்தி செல்வாக்கு மிக்க 500 பேரின் பட்டியலைத் தயாரித்துள்ளது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த அப்துல் கலாம், ரஹ்மான் ஆகியோர் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


அதேபோல, சூஃபி இஸ்லாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் அலிகார் பல்கலைக்கழகப் பேராசிரியர் சையத் அமீன் மியான் காத்ரியும் இந்தப் பட்டியலில் 44 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.


தீவிரவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்து வரும் ஜமாத் உலம-இ ஹிந் அமைப்பின் தலைவரும் எம்.பி.யுமான மௌலானா மெஹ்மூத் மதானியும் இந்தப் பட்டியலில் 36 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.


தாவூதி போரா பிரிவுத் தலைவரான அஸ்கர் அலி என்ஜினியர், பிரபல இஸ்லாமிய அறிஞரான வகீதுன் கான், ஷகீர் அப்துல் கரீம் நாயக், மிகப் பிரபலமான நியூஸ் வீக் இதழின் ஆசிரியரான பரீத் ஷகாரியா ஆகியோரும் இதில் இடம் பிடித்துள்ளனர்.


இவர்கள் தவிர அல்ஹைடா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன், தீவிரவாதப் போக்கை கடைப்பிடிக்கும் மௌலானா மசூத் அசார், ஹபீஸ் முகமது ஆகியோரும் இந்தச் செல்வாக்கு மிக்க முஸ்லிம்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

0 comments: