திமுக -வுக்கு பாமக பிரச்சாரம் - அமைச்சர் துரை முருகன் தகவல்!

வந்தவாசி தொகுதி பா.ம.க -வினர், தாங்களே முன்வந்து தி.மு.க -விற்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

வந்தவாசியில் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது வந்தவாசி தொகுதியில் தி.மு.க -வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதனால் திமுக அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.
பா.ம.க- வினருடன் இதுவரை நேரடியாக எங்களுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை. ஆனால், அனைத்து கிராமங்களிலும் பா.ம.க -வினரே வலிய வந்து தி.மு.க- வுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிப்பதாக, கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

ஆனால், மேல் மட்ட அளிவில் திமுக - பாமக கூட்டணி தொடர்பாக, எவ்வித பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை.

இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறினார்.

0 comments: