பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் டவர், சர்வதேச அளவில் அதிகம் பேரை கவர்ந்த கட்டிடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தாஜ்மகால், அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை ஆகியவை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.ஓட்டல்ஸ் டாட் காம் என்ற இணையதளம், சர்வதேச சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த உலகின் புகழ் பெற்ற கட்டிடங்களை தேர்ந்தெடுப்பதற்காக ஆன்லைனில் ஓட்டெடுப்பு நடத் தியது.
10 ஆயிரம் பேர் இதில் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர். இதில், அதிகபட்சமாக 16 சதவீதம் பேர், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் டவரை சிறந்த கட்டிடமாக தேர்ந்தெடுத்துள்ளனர்.
ரோம் நாட்டின் வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயம் 9 சதவீத ஓட்டுக்களுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. 16ம் நூற்றாண்டில் அன்பின் சின்னமாக ஷாஜகா னால் கட்டப்பட்ட இந்தியாவின் புகழ்பெற்ற தாஜ்மகால் 8 சதவீத ஓட்டுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்தது. அமெரிக்காவில் உள்ள கோல்டன் கேட் பிரிட்ஜ், எம்பயர் ஸ்டேட் பில்டிங் மற்றும் சுதந்திரதேவி சிலை ஆகிய மூன்றும் தலா 7 சதவீத ஓட்டுக்களுடன் 4,5,6ம் இடங்களைப் பிடித் தன.
மேலும் ஆஸ்திரேலியாவின் ஓபெரா ஹவுஸ், பார்சிலோனாவில் உள்ள சக்ரதா பெமிலியா, ஏதென்சில் உள்ள அக்ரோபலிஸ், ரியோடி ஜெனிரோவில் உள்ள கிறிஸ்ட் தி ரெடீமர் ஆகியவை டாப் 10 இடங்களைப் பிடித்த மற்ற கட்டிடங்களாகும்.
0 comments:
Post a Comment