ஏர் இந்தியா விமானத்தின் டாய்லெட்டில் ஓசி பயணம்

சவுதி அரேபியாவின் மெதினா விமான நிலையத்திலிருந்து இந்தியா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பாஸ்போர்ட், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த, இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத்தைச் சேர்ந்தவர் ஹபீப் அன்வர் (25).

இவர் சவுதி அரேபியாவின் மெதினா விமான நிலையத்தில் துப்புறவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு மெதினா விமான நிலையத்திலிருந்து ஜெய்பூருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. இதில் ஹஜ் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய 273 பயணிகள் இருந்தனர்.

விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்தில் பயணி ஒருவர் டாய்லெட்டுக்கு சென்றுள்ளார். டாய்லெட்டை திறக்க முடியவில்லை. உள்ளே ஒருவர் நீண்ட நேரமாக மறைந்திருப்பதைக் கண்டார். இதுகுறித்து விமான ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அவரை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததுடன், இதுகுறித்து ஜெய்பூர் விமான நிலையத்துக்கு தெரிவித்தனர். இதையடுத்து, விமானம் தரையிறங்கியதும் ஹபீப்பை கைது செய்தனர். இதை உறுதி செய்த ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர் ஒருவர், ÔÔசுத்தம் செய்வதாகக் கூறி விமானத்தில் ஏறியவர், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதற்காகவே டாய்லெட்டில் மறைந்து ள்ளார்.

மற்றபடி தீவிரவாத செயலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை என்று தெரிவித்தார். ஒப்பந்த நிறுவனம் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொண்டது. எப்படியாவது சொந்த ஊர் போக வேண்டும் என்ற எண்ணத்தில் டாய்லெட்டில் ஒளிந்து கொண்டேன் என புலனாய்வு அதிகாரிகளிடம் ஹபீப் தெரிவித்தார்.

0 comments: