கர்கரே அணிந்து இருந்தபுல்லட் புரூப் ஜாக்கெட்டைகுப்பை தொட்டியில் வீசினேன்!

மும்பை தாக்குதலில் கொல்லப்பட்ட போது கர்கரே அணிந்திருந்த புல்லட் புரூப் ஜாக்கெட்டை பிளாஸ்டிக் பையில் போட்டு குப்பை தொட்டியில் போட்டதாக மருத்துவமனை ஊழியர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின்போது தீவிரவாத தடுப்பு படை தலைவர் ஹேமந்த் கர்கரேவும் கொல்லப்பட்டார். அவர் அணிந்திருந்த புல்லட் புரூப் ஜாக்கெட், அவர் இறந்த பிறகு காணாமல் போனது. அது பெரிய சர்ச்சையானது.

புல்லட் புரூப் ஜாக்கெட்கள் வாங்கப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாகவும், அது தரமற்றதாக இருந்ததால்தான் குண்டுகள் துளைத்து கர்கரே இறந்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த கர்கரேக்கு ஜே.ஜே. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதால், ஜாக்கெட் அங்குதான் காணாமல் போயிருக்கக் கூடும் என்ற சந்தேகம் நிலவியது.

இந்த நிலையில், நீதிமன்றத்தில் இந்த மருத்துவமனையின் துப்புரவு தொழிலாளி தினேஷ் லால்ஜி கட்டார் (35) நேற்று அளித்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“நவம்பர் 27ம் காலை ஆபரேஷன் தியேட்டரை சுத்தம் செய்ய சென்றேன். அங்கு பயன்படுத்தப்பட்ட மருந்து பொருட்களும், ஊசிகளும் நிறைய கிடந்தன. கூடவே ஒரு ஜாக்கெட்டும் கிடந்தது.

எல்லாவற்றையும் பெரிய பிளாஸ்டிக் பையில் போட்டு விட்டு தியேட்டரை சுத்தம் செய்தேன். பிறகு, அந்த பிளாஸ்டிக் பையை தூக்கிச் சென்று குப்பை கிடங்கில் போட்டேன்” என்று அவர் வாக்குமூலம் அளித்தார்.

0 comments: