விமான நிலையத்திற்கு ஆட்டோவில் சவாரி செய்த மமதா பானர்ஜி

டிராபிக் ஜாமில் சிக்கிக் கொண்ட ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி, விமானத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக காரிலிருந்து இறங்கி நடந்து, ஒரு ஆட்டோவைப் பிடித்து கொல்கத்தா விமான நிலையத்தை அடைந்தார்.நேற்று மாலை டெல்லி செல்வதற்காக காரில் கிளம்பினார் மமதா. வழியில் கிழக்கு மெட்ரோபாலிடன் பைபாஸ் சாலையில் மாலை 4.15 மணிக்கு அவர் வந்தபோது அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மமதாவின் காரால் அங்கிருந்து நகர முடியாத நிலை ஏற்பட்டது.5 மணிக்கு டெல்லி செல்லும் விமானம் கிளம்பும். அதற்குள் விமான நிலையத்தை அடைய வேண்டுமே என்பதற்காக காரிலிருந்து வேகமாக இறங்கிய மமதா விடுவிடுவென நட்நதார்.ஒரு ஆட்டோவைப் பிடிக்குமாறு மமதா கூறவே தொண்டர்கள் வேகமாக சென்று ஒரு ஆட்டோவை அழைத்து வந்தனர். பின்னர் அந்த ஆட்டோவில் ஏறி விமான நிலையத்தை அடைந்தார் மமதா.முஹர்ரம் பேரணி காரணமாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.விமானத்தை தவற விட்டு விடக் கூடாது என்பதற்காக அடித்துப் பிடித்துக் கொண்டு மமதா விமான நிலையம் போனால், விமானம் 55 நிமிடம் தாமதம் என அறிவிக்கப்பட்டது. இதேபோன்ற போக்குவரத்து நெரிசலில் விமானி சிக்கிக் கொண்டதால் விமானம் தாமதமாம்.இதெப்படி இருக்கு...!

0 comments: