போப் ஆண்டவர் மீது பெண் தாக்குதல்
கிறிஸ்துமஸ் தினச் சிறப்பு பிராத்தனையின் போது போப் ஆண்டவர் மீது ஒரு பெண் தாக்குதல் நடத்தினார். இதில் நிலை தடுமாறி விழுந்த போப் ஆண்டவர் 16ஆம் பெனடிக்ட், சுகாகரித்துக் கொண்டு எழுந்து பிராத்தனையில் ஈடுபட்டார்.இன்று கிறிஸ்மஸ் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு வாடிகனில் உள்ள தேவாலயத்தில் சிறப்பு பிராத்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.சிறப்பு பிராத்தனையில் கலந்து கொள்வதற்காக போப் 16ஆம் பெனடிக்ட் தேவாலயத்திற்குள் வந்து கொண்டிருந்த போது, பிரார்த்தனை செய்ய வந்திருந்த பொதுமக்கள் கூட்டத்தில் இருந்து ஒரு பெண் பாய்ந்து வந்து பெனடிக்ட் மீது மோதினார். இதில் நிலை குலைந்து போன பெனடிக்ட் கீழே விழுந்தார். உடனடியாக சுகாகரித்துக் கொண்டு எழுந்து 16ஆம் பெனடிக்ட் பிரார்த்தனை செய்ய சென்றார்.ஆனால் அவருடன் வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாதிரியாருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தடையை மீறி போப் மீது மோதிய பெண்ணிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
Labels:
தாக்குதல்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment