தெலுங்கானா தமிழகத்தில் மூவர் கைது

ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதற்கு அந்த மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விஜயவாடா ராயலசீமா, ஐதராபாத் மற்றும் பல இடங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து கடையடைப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் பஸ்எரிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருச்சியில் ஆங்காங்கே தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மத்திய அரசை கண்டித்தும் பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. மக்கள் கலை இலக்கியம் சார்பில் பாலக்கரை காஜாமலை ஆகிய பகுதிகளில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

இதுகுறித்து பாலக்கரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கந்தசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

பரபரப்பு போஸ்டர் ஒட்டியதாக செந்தண்ணீர் புரத்தை சேர்ந்த செக்பிடார்(26), விஜயசுந்தர்(23), பொன்னகரை சேர்ந்த செல்லமுத்து(29) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

0 comments: