ஒரே நாளில் ரூ.127 கோடி வசூல்

அவதார் ஹாலிவுட் திரைப்படம் வசூலில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. வெளியிடப்பட்ட முதல் நாளில் மட்டும் ரூ.127 கோடி வசூலாகி உள்ளது.டைட்டானிக், டெர்மினேட்டர் உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன், அவதார் திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.127 கோடி வசூலாகி உள்ளது. இது கிட்டத்தட்ட 1997ல் வெளியான ¬ட்டானிக் வசூலை நெருங்கி உள்ளது. டைட்டானிக் திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ.134 கோடி வசூலானது.

அமெரிக்காவில் மட்டும் ஒரு மாத வசூல் ரூ.2,860 கோடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. வெளியான முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.6.75 கோடி வசூலாகி உள்ளது.

0 comments: