தமிழகத்தைப் பிரிக்கும் பேச்சுக்கே இடம் இல்லை : கருணாநிதி!

தெலுங்கானா மாநிலம் தாமதமான முடிவு என்று கூறியுள்ள தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று கூறியுள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகக் கட்டடப் பணியைப் பார்வையிட்ட முதல்வர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

அப்போது, தெலுங்கானா பிரச்சனை குறித்து செய்தியாளர் ஒருவரின் கேள்விக்குப் பதில் அளித்த முதல்வர், தெலுங்கானா மாநிலம் அமைப்பது தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்றும், இந்த முடிவை அறிவிப்பதில் அவசரம் காட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தமிழகத்தையும் இதுபோன்று பிரிக்க வேண்டும் என்று கோரப்படுவது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த கருணாநிதி, இந்தக் கோரிக்கைக் இடம் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்தார்.

அப்படிப்பட்ட ஒரு கருத்து திமுகவுக்கும் இல்லை, தமிழக மக்களுக்கும் இல்லை என்றும் கருணாநிதி கூறினார்.

0 comments: