ஆய்வில் தகவல் டீ, காபி குடித்தால் டயபடீஸ் வராது

தினமும் 3 கோப்பைகளுக்கு மேல் டீ அல்லது காபி குடிப்பதால் சர்க்கரை நோயிலிருந்து விடுபடலாம் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ஜாமா என்ற மருத்துவ இதழில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலிய ஆய்வு குழு, நீரிழிவு நோய் தாக்கத்தில் டீ, காபிக்கு உள்ள பங்கு குறித்து ஆய்வு நடத்தியது. 18 முறை நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 4.57 லட்சம் பேருக்கு காபியும், 2.25 லட்சம் பேருக்கு காபின் நீக்கப்பட்ட காபியும், 2.86 லட்சம் பேருக்கு டீயும் கொடுக்கப்பட்டது.
அவர்களில் டீ, காபி குடிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் குறைந்து காணப்பட்டது தெரியவந்தது. ஒவ்வொரு கப் கூடுதலாக குடிக்கும் போதும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 7 சதவீதம் குறைகிறது. தினமும் 2 கப் குடிப்பவர்கள் அல்லது காபி குடிக்காதவர்களைவிட, 3 அல்லது 4 கப் குடிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வாய்ப்பு 25 சதவீதம் குறைவு.
காபின் நீக்கப்பட்ட காபி குடித்தாலும் கூட பயன் கிடைக்குமாம். தினமும் 3 அல்லது 4 கப் குடிப்பவர்களுக்கு 33 சதவீதம் இந்த நோய் வருவதற்கு வாய்ப்பு குறைவு.
அதுபோல், டீ குடிக்காதவர்களைவிட, 3 முதல் 4 கப் டீ குடிப்பவர்களுக்கு 20 சதவீதம் நோய் வராது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

0 comments: