உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு முன் கோவை மாநகர் அழகுபடுத்தப்படும் என்று மேயர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகரை அழகுபடுத்த 35 இடங்களில் பூங்கா அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ. 8 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 52வது வார்டு ஏ.கே. எஸ். நகரில் பூங்கா மற்றும் நடைபாதை அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை இன்று நடந்தது.
கோவை மேயர் வெங்கடாசலம், கமிஷனர் அன்சுல் மிஸ்ரா உள்பட பலர் இந்த பூமி பூஜையில் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர்
வெங்கடாசலம்,
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு முன் கோவை மாநகரை அழகுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பழைய பூங்காக்கள் அழகுபடுத்தி வர்ணம் பூசப்படும் என்றார்.
கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறியதாவது,
கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு முன் பூங்கா, நடைபாதைகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெறும். ரோடுகளின் சந்திப்புகள் அழகு படுத்தப்படும். சுகாதார வசதி, சாலை மேம்பாட்டு வசதி செய்யப்படும். தெரு விளக்குகள் முழுமையாக பராமரிக்கப்படும். விளக்குகள் இல்லாத இடத்தில் புதிதாக விளக்குகள் அமைக்கப்படும். அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து முடிக்கப்படும் என்றார்.
0 comments:
Post a Comment