காட்டி கொடுத்தது பேஸ்புக்’

ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் இரண்டு பெண்களை திருமணம் செய்த சீன மனிதரைÔபேஸ்புக்Õ சமூக இணைய தளம் போலீசில் சிக்க வைத்தது.சீனாவை சேர்ந்தவர் சாங்.

இவர் 2005ல் ஜிஜியாங் பகுதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பிறகு, மெக்சிகோவில் வேலைக்குச் சென்றார். அங்கு சீனத் தலைநகர் பெய்ஜிங்கைச் சேர்ந்த பெண்ணை சந்தித்தார். தனக்கு இன்னும் மணமாகவில்லை என்று கூறி, அந்தப் பெண்ணை திருமணம் செய்தார். அவரை சீனா அழைத்து வந்து பெய்ஜிங்கில் குடித்தனம் வைத்தார்.

மெக்சிகோவில் இருந்து சீனா வரும்போதெல்லாம் பெய்ஜிங், ஜஜியாங் நகரங்களுக்கு சென்று இரண்டு மனைவிகளுடன் தங்குவார்.ஒரு மனைவியிடம் இருந்து இன்னொருவர் வீட்டுக்குச் செல்லும்போது, வேலை காரணமாக மெக்சிகோ திரும்புவதாக பொய் கூறுவார். இப்படியே ரகசியமாக இரண்டு மனைவிகளுடன் சாங் வாழ்ந்து வந்தார்.

அதற்கு பேஸ்புக் நெட்வொர்க் இணைய தளம் மூலம் சிக்கல் எழுந்தது. தனது குடும்ப விவரங்களை இரண்டு மனைவிகளும் பேஸ்புக்கில் வெளியிட்டனர். அதன்மூலம் நண்பர்களாகினர். அதன்பிறகு, தங்கள் திருமண படங்களை பரிமாறிக் கொண்டனர். அப்போதுதான் தெரிந்தது, மாப்பிள்ளை சாங், இருவரையும் வசமாக ஏமாற்றிய விஷயம். உடனடியாக முதல் மனைவி போலீசில் புகார் தர... இப்போது சிறையில் இருக்கிறார் சாங்.

0 comments: