உடல் உறுப்புகள் தானம்

தலைவலியால் ரத்தக்குழாய் வெடித்து, மூளை சாவு ஏற்பட்ட சிறுமியின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானம் செய்தனர்.வியாசர்பாடி பக்தவச்சலம் காலனியை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகள்கள் ஜெயபாரதி (15), சித்ரா (13). ஜெயபாரதி பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 1 படித்தார்.

ஜெயபாரதிக்கு அடிக்கடி தலைவலி வந்தது. கடந்த 23ம் தேதி மீண்டும் தலைவலி அதிகமானதால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற ஜெயபாரதிக்கு நேற்று காலை திடீரென மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் வெடித்தது. இதனால் மூளை செயலிழந்து மூளை சாவு ஏற்பட்டது. இதுகுறித்து ஜெயபாரதியின் பெற்றோரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். அவர்கள் கதறி அழுதனர்.

பின்னர், மகளின் உடல் உறுப்புகள் தானம் செய்ய முன்வந்து டாக்டர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து, ஜெயபாரதியின் கண், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, தேவைப்படுவோருக்கு பொருத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

0 comments: