வேலூர் கோட்டையில் காவல்துறையினர் குவிப்பு

வேலூர் கோட்டையில் உள்ள மசூதியை முஸ்லிம் அமைப்பினர் முற்றுகையிடப் போவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.வேலூர் கோட்டையில் வரலாற்று பழமை வாய்ந்த மசூதி உள்ளது.

இதனை தொழுகை நடத்த திறக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு அமைப்பினர் ஒன்று சேர்ந்து தொழுகை நடத்த வந்தனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து மசூதியில் 24 மணி நேர காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் பெரம்பலூரில் உள்ள ஒரு அமைப்பினர் கோட்டையில் உள்ள மசூதியில் அத்துமீறி இன்று தொழுகை நடத்தப் போவதாக அறிவித்தனர். இதனையடுத்து கோட்டையில் இன்று கூடுதலாக காவல்துறையினர் நிறுத்தப்பட்டனர்.

கோட்டை நுழைவு வாயில் வாகன சோதனை மற்றும் தீவிர விசாரணைக்கு பின்னரே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். வேலூர் கோட்டையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளதால் பதற்றம் நிலவியது.

0 comments: