சென்னையில் கடல் கொந்தளிப்பு

வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக தமிழக கடல் பகுதியில் கடந்த 1 வாரமாக பலத்த காற்று வீசுகிறது. இதனால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் 55 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் கடலில் பலத்த காற்று வீசும் என்று தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.
எனவே மீனவர்கள் ஒரு வாரமாக கடலுக்கு மீன் பிடிக்கச்செல்லவில்லை. சென்னை மெரீனாவிலும் கடந்த சில தினங்களாக கடல் கொந்தளிப்பு காணப்படுகிறது. இன்றும் அலைகள் பல அடி உயரும் எழும்பி சீறிப் பாய்ந்தன. பட்டினப்பாக்கம் மீனவர் குடியிருப்பு பகுதியில் கடல் நீர் புகுந்தது. பெசன்ட் நகர், திருவான் மியூர் பகுதியிலும் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.
எனவே இந்த பகுதி மீனவர்கள் இன்றும் கடலுக்கு செல்லவில்லை. எண்ணூர், திருவொற்றியூர், காசிமேடு பகுதியில் கடல் மிகுந்த சீற்றத்துடன் உள்ளது. இன்றும் வழக்கத்தை விட அதிக உயரமாக அலைகள் எழும்பி வேகமாக கரையை தாக்குகிறது. கடந்த ஒரு வாரமாக இந்த பகுதியில் கடல் சீற்றம் காணப்படுகிறது. கடலோரம் உள்ள சில குடியிருப்பு பகுதி களில் கடல் நீர் புகுந்து இருக்கிறது. கடல் சீற்றம் காரணமாக இங்கு மீனவர்கள் இன்று 7-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

0 comments: