போக்குவரத்து மாற்றம்

தாம்பரத்தில் புதியதாக நடைமுறைப்படுத்தப்பட் டுள்ள போக்குவரத்து மாற்றத் தால், இதுவரை நிலவி வந்த நெரிசல் முற்றிலுமாகக் குறைந் துள்ளது. தாம்பரம் - முடிச்சூர் சாலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் மேம்பாலப் பணி துவக்கப்பட்டது. இதனால், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

வாலாஜாபாத் சாலையில் இருந்து முடிச்சூர் சாலை வழியாக வரும் வாகனங்கள், காந்தி சாலை வழியாக ஜி.எஸ்.டி., சாலையை அடைய வேண்டும். குரோம்பேட்டையில் இருந்து வரும் வாகனங்கள், ஹென்கலா ஓட்டல் அருகே ஜி.எஸ்.டி., சாலையில், "யூடர்ன்' எடுத்து, ராஜாஜி சாலை, கக்கன் சாலை வழியாக முடிச்சூர் சாலையை அடைய வேண்டும் என அறிவிக்கப் பட்டது. ஆனால், இந்த போக்குவரத்து மாற்றத்தால், ஜி.எஸ்.டி., சாலையிலும், ராஜாஜி சாலையிலும் கடும் நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டனர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, சம்பந்தப் பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவின்படி, தாம் பரத்தில் நேற்று முன்தினம் முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றத் தால், இதுவரை தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலை, ராஜாஜி சாலைகளில் தினசரி ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாகக் குறைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமமின்றி சென்று வருகின் றனர். தாம்பரத்தில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுத்த, சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

0 comments: