தமிழகத்தை ஆளக்கூடாதா? ராமதாஸ் ஆவேசம்!

தமிழகத்தில் 10 ஆயிரம் பேர் உள்ள கலைஞர் ஜாதி தமிழகத்தை ஐந்தாவது முறையாக ஆளுகிறது. நாம் ஏன் தமிழகத்தை ஆளக் கூடாது? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசமாக பேசினார்.

நாமக்கல் மாவட்டம் ப.வேலூர் அருகே வெங்கரையில் நாமக்கல் கரூர் மாவட்ட வன்னியர் சங்க மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு கபிலர்மலை தொகுதி எம்.எல்.ஏ டாக்டர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார்.


மாநாட்டில் பேசிய ராமதாஸ்,


தமிழகத்தில் உள்ள எல்லா ஜாதிக்கும் வெறி பிடித்து விட்டது. நமக்கு மட்டும் தான் உணர்வு உள்ளது. வன்னியர் ஜாதி தான் தமிழகத்தில் மிகப்பெரிய ஜாதி. 2011ல் தமிழகத்தை ஆளப்போகிறோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


அரசின் குறைகள் குறித்து நாள்தோறும் அறிவிப்பு வெளியிடுவேன். அதற்கு முதல்வர் கருணாநிதி, 2011ல் ஆளப் போகிறீர்கள். அப்போது பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார். அவர் வாக்கு பலிக்க வேண்டும்.


தமிழகத்தில் 10 ஆயிரம் பேர் உள்ள கலைஞர் ஜாதி தமிழகத்தை ஐந்தாவது முறையாக ஆளுகிறது. மலையாளத்தை சேர்ந்த எம்.ஜி.ஆர். தமிழகத்தில் 10 ஆண்டு முதல்வராக இருந்தார்.


கர்நாடகாவைச் சேர்ந்த ஜெயலலிதா பத்து ஆண்டு முதல்வராக இருந்தார். நாம் ஏன் தமிழகத்தை ஆளக் கூடாது?.
கருணாநிதி சூழ்ச்சியால் 107 ஜாதிகளுக்கும் சேர்த்து 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.


அதன்படி 100 இடங்களில் ஏழு இடங்கள் மட்டுமே வன்னியர்களுக்கு கிடைக்கிறது. அனைத்து ஜாதிகளையும் கணக்கெடுத்து, அனைவருக்கும் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.


இடஒதுக்கீடு கொடுக்கவில்லையெனில் மூன்று அல்லது நான்கு மாதங்களில் 10 நாள் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம். "காற்றே அசையாதே; சொல்வது வன்னியன்' என்று சொல்லும் அந்த நிலை உருவாகும் என்றார்

0 comments: