தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் தலா ஒரு புதிய பாஸ்போர்ட் சேவை அலுவலகத்தைத் தொடங்க உத்தேசிக்கப்பட்டு இருப்பதாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் சஷி தரூர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் 7 பாஸ்போர்ட் சேவை அலுவலகங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் சஷி தரூர் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் மொத்தம் 68 பாஸ்போர்ட் சேவை அலுவலகங்கள் உள்ளன என்றும் பாஸ்போர்ட் அலுவலகங்களுடன் இணைந்த வகையில் நாட்டில் மொத்தம் 9 பாஸ்போர்ட் சேவை அலுவலகங்கள் உள்ளன என்றும் இந்த இரண்டையும் சேர்த்து இந்த அலுவலகங்களின் மொத்த எண்ணிகை 77 என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து அமைச்சர் சஷி தரூர் இத்தகவல்களைத் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment