வெடி குண்டுகளுடன் வாலிபர் கைது

மத்திய பிரதேச மாநிலம் மகோபா நகரில் ஜான்சி நகருக்கு செல்லும் சாலையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். இன்று காலையில் ராகுல் காந்தி கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சி இருந்ததால் இந்த சோதனை நடந்தது. அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் திரிந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனையிட்டனர். அவனிடம் வெடிகுண்டுகள் உள்பட ஏராளமான வெடிபொருள்கள் இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவனைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராகுல்காந்தி வரும் பகுதியில் வெடிகுண்டுகளுடன் ஒருவன் கைது செய்யப்பட்டிருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

0 comments: