Showing posts with label திருமணம். Show all posts
Showing posts with label திருமணம். Show all posts

பெண்களின் திருமண வயதை அதிகரிக்க சவுதி அரேபிய அரசு திடீர் திட்டம்

மனித உரிமை அமைப்புகளின் நெருக்கடியை அடுத்து, பெண்களின் திருமண வயதை 16 ஆக நிர்ணயிப்பது குறித்து, சவுதி அரேபிய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.சவுதி அரேபியாவில், கடந்தாண்டு 11 வயது சிறுமிக்கு, 80 வயதான முதியவர் ஒருவரை, அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்த ஒரு சில மாதங்களிலேயே அந்த சிறுமி, தனது கணவரை விட்டு பிரிந்து, தன் வீட்டுக்கு வந்து விட்டார். முதியவரிடமிருந்து, விவகாரத்தும் பெறப்பட்டு விட்டது.


இந்த சம்பவத்தை அடுத்து, பெண்களின் திருமண வயதை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை, சவுதி அரேபியாவில் வலுத்து வருகிறது. கடந்த 2005ல் சவுதி மன்னர் அப்துல்லாவால் அமைக்கப்பட்ட மனித உரிமை ஆணையமும், இதே கருத்தை தெரிவித்தது.இதைத் தொடர்ந்து, பெண்களின் திருமண வயதை 16 ஆக அதிகரித்து, அதை சட்டமாக்க, சவுதி அரேபியா அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக, மூன்று கமிட்டிகளை அரசு அமைத்துள்ளது.


இந்த கமிட்டியில் இடம் பெற்றுள்ளவர்கள், குழந்தை நல மருத்துவர், மத அறிஞர்கள், உளவியல் நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி, அதன் அடிப்படையில், இதற்கான முடிவை விரைவில் அறிவிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.சவுதி அரேபியாவிலுள்ள ஒரு தரப்பினர்,'பல ஆண்டுகளுக்கு முன், குழந்தை திருமணங்கள் அதிகமாக நடந்துள்ளன. தற்போது இதற்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை' என்கின்றனர்.சவுதி அரேபியாவை சேர்ந்த ஷேக் அப்துல்லா அல்-மனே கூறுகையில், 'பழங்காலத்திலிருந்த சூழ்நிலை வேறு, தற்போதுள்ள சூழ்நிலை வேறு' என்றார்.

80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி

சவுதி அரேபியாவை சேர்ந்த 12 வயது சிறுமிக்கும் 80 வயது கிழவருக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை முடிப்பதற்காக மணமகள் வீட்டாருக்கு 85 ஆயிரம் ரியால் சீதனமாக கொடுக்கப்பட்டது.

இந்த திருமணம் தன் விருப்பத்துக்கு எதிராகவும் தன் தாயாரின் விருப்பத்துக்கு எதிராகவும் நடத்தப்படடது எனறு கூறி 12 வயது சிறுமி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. சவுதி அரேபியாவின் சட்ட உதவியுடன் இந்த வழக்கு தொடரப்பட்டது.

என் தந்தை தன் ஒன்று விட்ட அண்ணனான 80 வயது கிழவருக்கு பணத்துக்காக திருமணம் செய்து கொடுத்து விட்டார் என்று குற்றஞ்சாட்டி இருந்தார். இந்த வழக்கு சவுதி அரேபியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 80 வயது பெரியவரை விவாகரத்து செய்ய அந்த சிறுமிக்கு கோர்ட்டு அனுமதி அளித்தது.

இந்த வழக்கின் அடிப்படையில் பெண்களுக்கான குறைந்த பட்ச வயதை 16 ஆக உயர்த்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

நவ்யா-சந்தோஷ் மேனன் திருமணம் நடந்தது!

நவ்யாவின் ஊரான ஹரிப்பாடு அருகே உள்ள செப்பாட் அரசு பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட பந்தலில் இந்த திருமணம் நடந்தது.

இந்து முறைப்படி நடந்த இந்த திருமணத்துக்கு நவ்யாவின் உறவினர்கள், நண்பர்கள் என பலர் திரண்டிருந்தனர். நடிகர்கள் திலகன், சுரேஷ் கோபி, வினீத் போன்றோர் வந்திருந்தனர்.

இன்று மாலை 6 மணிக்கு மணமகன் சந்தோஷ் மேனனின் ஊரான செங்கனாச்சேரியில் திருமண வரவேற்பு நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகு மும்பையில் செட்டிலாகிறார் நவ்யா.

அதே நேரம் திரைப்படங்களில் நடிப்பதையும் தொடரவிருக்கிறாராம்.

அனைத்து திருமணங்களுக்கும் பதிவு அவசியம்

கடந்த நவ. 24ம்தேதி முதல் நடந்த அனைத்து திருமணங்களையும் அவசியம் பதிவு செய்ய வேண்டும் என்று தஞ்சை மாவட்டப் பதிவாளர் நெடுஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்து திருமணங்கள் சட்டம், இந்திய, கிறிஸ்துவ திருமண சட்டம், சிறப்பு திருமண சட்டம், முகமதியர்கள் ஷரியத்திருமண சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந்தாலும் தமிழக அரசு தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் கடந்த நவ.24ம்தேதி முதல் நடந்த அனைத்து திருமணங்களையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இந்த திருமணங்கள் திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் திருமணம் நடைபெற்ற எல்லைக்கு உட்பட்ட சார்பதிவாளரிடம் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவிற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். திருமணப் பதிவிற்கான படிவம் மற்றும் விண்ணப்பத்தை எந்தவித விடுதல் அல்லது பிழை இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் திருமணம் நடந்ததற்கான ஆதாரம், இருப்பிட முகவரி, வயது தொடர்பான வரையறுக்கப்பட்ட ஆதாரங்கள் ஆகியவற்றுடன் ரூபாய் 100 கட்ட ணத்தை செலுத்தி திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம்.


இந்த விண்ணப்பத்தில் இணைக்கப்பட்ட ஆதாரங்கள் சரியாக இருந்தால் சம்பந்தப்பட்ட திருமணப்பதிவாளர், மனுதாரருக்கு ஒப்புதல் அளிப்பார். உரிய படிவத்தில் சரியான தகவல்கள் தராத அல்லது உரிய ஆவணங்கள் இணைக்கபடவில்லை என்றால் திருமணப் பதிவாளர் குறைகளை சரி செய்து மனுதாரருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும். தமிழ்நாடு திருமணப் பதிவு விதிகளின் படி திருமணம் நடக்கவில்லை என்று திருமணப்பதிவாளரால் உணர்ந்தால் அந்த மனுவும் திருப்பி அனுப்பி வைக்கப்படும். இந்த மறுப்பு ஆணை மீது சம்பந்தப்பட்ட மனுதாரர் ஆணை பெற்ற 30 நாட்களுக்குள் மாவட்டப் பதிவாளரிடம் மேல் முறையீடு செய்யலாம். அவ்வாறு செய்யப்பட்ட மேல்முறையீடு மீது மாவட்ட பதிவாளரால் பிறப்பிக்கப்படும் உத்தரவு திருப்தி இல்லை என்றால் உத்தரவு பெற்ற 30 நாட்களுக்குள் பதிவுத்துறை தலைவருக்கு மேல் முறையீடு செய்யலாம். பதிவுத்துறை தலைவரின் ஆணையே இறுதியானது ஆகும்.


எனவே கடந்த நவ.24ம்தேதி முதல் நடந்த அனைத்து திருமணங்களையும் எந்தவித ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்யாத அல்லது வீதிமீறல் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்படும். திருமணப்பதிவு தொடர்பான விவரங்கள் அனைத்து பதிவு அலுவலகங்கள், மாவட்ட, துணைப் பதிவு அலுவலகங்களில் அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணைய தளம் www tnreginert.net தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப் பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சுவாதி ரகசிய திருமணம்

விஜய் ஜோடியாக ‘தேவா’ படத்தில் அறிமுகமானவர் சுவாதி. தொடர்ந்து விஜய்யுடன் ‘வசந்த வாசல்’, ‘செல்வா’ படங்களிலும், அஜீத் ஜோடியாக ‘வான்மதி’ படத் திலும் நடித்தார். சமீபத்தில் வெளியான ‘யோகி’ படத்தில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 45 படங்களில் சுவாதி நடித்துள்ளார். வர்ஜீனியாவில் கம்ப்யூட்டர் நிறுவன இயக்குனராக இருப்பவர் கிரண். இவரை ரகசிய திரு மணம் செய்துள்ளார் சுவாதி. இவர்களின் திருமணம், கடந்த நவம்பர் 22&ம் தேதி, ஐதராபாத்தில் ரெட்ஹில்ஸ் பகுதியிலுள்ள மாருதி கார்டனில் நடைபெற்றது.

இதில் இருவீட்டு உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். சுவாதி, கிரண் இருவரும் நேற்று திருப்பதிக்கு சென்று சாமி கும்பிட்டனர். பின் ‘தினகரன்’ நிருபரிடம் சுவாதி கூறும்போது, இருவீட்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் நடந்த திரும ணம் இது.

குறுகியகாலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதால், திரையுலகை சேர்ந்தவர்களை திருமணத்துக்கு அழைக்க முடியவில்லை. ‘யோகி’ என்னுடைய கடைசி படம். இனி சினிமவில் நடிக்க மாட்டேன். கணவர் கிரணுடன் இம்மாத இறுதியில் வர்ஜீனியாவில் குடியேற உள்ளேன் என்றார்.

ஜனவரி‌யி‌ல் நடிகை நவ்யா நாயர் திருமணம்

பிரபல சினிமா நடிகை நவ்யா நாயர் திருமணம் வருகிற ஜனவரி மாதம் நடக்கிறது.அழகிய தீயே, மாயக் கண்ணாடி, பாசக்கிளிகள் உள்ளிட்ட தமிழ் மற்றும் பல்வேறு மலையாள படங்களில் நடித்தவர் நவ்யா நாயர்.
தற்போது இவருக்கு திருமணம் செய்து வைக்க அவருடைய தந்தை ராஜூ, தாய் வீணா ஆகியோர் முடிவு செய்து‌ள்ளன‌ர்.அத‌ன்படி கேரள மாநிலம் சங்கனாச்சேரி மாடையில் குடும்பத்தை சேர்ந்த நாராயண மேனன் மகன் சந்தோஷ் மேனனு‌க்‌கு‌ம், ந‌வ்யா நாயரு‌க்கு ‌திருமண‌ம் நடைபெற உ‌ள்ளது.சந்தோஷ் மேனன் மும்பையில் உள்ள ஒரு தனியார் ‌நிறுவன‌த்‌தி‌ல் மார்க்கெட்டிங் பிரிவு துணைத்தலைவராக பணியாற்‌றி வரு‌கிறா‌ர்.

விரைவில் திருமண நிச்சயம் நடைபெறும் என்றும், வருகிற ஜனவரி மாதம் திருமணம் நடக்கிறது எனவும் நடிகை நவ்யா நாயரின் தந்தை ராஜூ தெரிவித்துள்ளார்.தற்போது நவ்யா நாயர் மம்முட்டியுடன் இணைந்து 'துரோணா` என்ற படத்திலும், சுரேஷ் கோபியுடன் 'சத்கமயா` என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

திலீப்-கலாபவன் மணி ஆகியோர் இணைந்து நடிக்கும் 'பிலிம் ஸ்டார்' என்ற மற்றொரு சினிமாவிலும், ஒரு தமிழ் சினிமாவிலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் ந‌வ்யா நாய‌ர்.

ஷில்பா ஷெட்டி-ராஜ் குந்த்ரா திருமணம்


பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தனது நீண்ட நாள் காதலரான ராஜ் குந்த்ராவை நவம்பர் 22ஆம் தேதி திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின்னர் 24ஆம் தேதி மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை அருகே உள்ள கன்டாலா பகுதியில் ஷில்பாவின் நண்பர் கிரண் பாவாவின் பங்களாவில் ஷில்பா-குந்த்ரா திருமணம் நடைபெற உள்ளது. பஞ்சாபி மற்றும் தென்னிந்திய முறையில் திருமணம் நடைபெறும் என ஷில்பாவின் செய்தித் தொடர்பாளர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
லண்டனில் வாழ்ந்து வரும் அயல்நாட்டு வாழ் இந்தியரான குந்த்ரா, ஷில்பாவுடன் திருமணம் முடிந்த பின்னர் மும்பையிலேயே குடியிருப்பதற்காக ஜூஹூ பகுதியில் புதிய பங்களா ஒன்றை சமீபத்தில் விலைக்கு வாங்கியது நினைவில் கொள்ளத்தக்கது.ஷில்பா-குந்த்ரா திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே அழைக்கப்படுவார்கள் எனத் தகவல்கள்