நாகையில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

நாகையில் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்து உதைத்து, படகினை சேதப்படுத்தியதுள்ளதாக இன்று கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.

நாகை துறைமுகம்பகுதியைச்சேந்த ஆறு மீனவர்கள் ‌கடந்த 20-ம் தேதி கடலுக்கு விசைப்படகில் சென்றனர். இவர்கள் 35 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், விசைப்படகினை மறித்து, அதில் நட்டப்பட்டிருந்த இந்திய தேசிய கொடியை கிழித்தனர்.

பின்னர் மீனவர்கள் கொண்டுவந்த உணவுப்பொருட்கள் மற்றும் உடமைகளை பறித்து கடலில் வீசி எறிந்ததுடன், மீன்பிடி வலைகளை அறுத்தனர். தமிழக மீனவர்களை பூட்ஸ் காலால் சரமாரியாக மித்து தாக்கியுள்ளனர்.

இதில் மூன்று மீனவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.இது குறித்து இன்று அதிகாலை கரைக்கு திரும்பிய ஆறுமீனவர்களும் கடலோர போலீசாரிடம் மேற்‌கண்ட தகவல்களை தெரிவித்துள்ளனர்.

0 comments: