சட்டசபையிலிருந்து எதற்கெடுத்தாலும் வெளிநடப்புச் செய்யக் கூடாது, பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது பார்த்துப் பேச வேண்டும், சட்டசபைக்குள் யாரையும் கண்டுகொள்ளாமல் மக்கள் பிரச்சினை குறித்துப் பேசுங்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை தனது கட்சி எம்.எல்.ஏக்களுக்குக் கொடுத்துள்ளாராம் தேமுதிக தலைவர் வியகாந்த்.
நேற்று தேமுதிக எம்.எல்.ஏக்கள் காலையில் சட்டசபைக்கு வந்தனர். பின்னர் வெளிநடப்புச் செய்தனர். அதன் பிறகு கார்களில் ஏறி நேராக கோயம்பேடு வந்தனர். அங்குள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்குப் போய் அங்கு அமர்ந்திருந்த விஜயகாந்த்தைச் சந்தித்தனர்.
இந்த சந்திப்பு ரொம்ப நேரம் நீடித்தது. அப்போது ஏகப்பட்ட அறிவுரைகளை தனது கட்சி எம்.எல்.ஏக்களுக்கு வழங்கினாராம் விஜயகாந்த். அவர் பேசுகையில், சட்டசபையில் யார் எதைப் பேசினாலும் கண்டுக்காதீங்க, உங்கள் பிரச்சினைகளை, அதாவது மக்கள் பிரச்சினை குறித்து கவனத்தோடு பேசுங்கள். சபையில் நாம் பேசினால்தான்தான் மக்களுக்கு உண்மை தெரியவரும். எனவே யார் எதைப் பேசினாலும் கண்டு கொள்ளாமல் பேசுங்கள்.
அடிக்கடி வெளிநடப்புச் செய்யக் கூடாது. பிறகு நமக்கும், அவர்களுக்கும் இடையே வித்தியாசம் இல்லாமல் போய் விடும். நமது கருத்துக்களைத் தைரியமாக எடுத்து வைக்க வேண்டும். நாம் யாருக்கும் பயந்தவர்கள் இல்லை என்பதை காட்ட வேண்டும். வேறு வழியே இல்லை என்ற சூழல் வரும்போது மட்டும் வெளிநடப்புச் செய்யுங்கள்.
பிறகு இன்னொரு விஷயம், கட்சி ரகசியங்கள், முக்கிய முடிவுகள் வெளியே கசிந்து விடாதபடி கவனமாக இருங்கள். அப்போதுதான் அரசியலை சிறப்பாக செய்ய முடியும்.
பிறகு இன்னொரு முக்கியமான விஷயம், பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது பார்த்துப் பேசுங்க, கவனமாக பேசுங்க என்றாராம் விஜயகாந்த்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment