போலீஸ் குறை தீர்ப்பு கூட்டத்தில் ஒரே நாளில் 850 பேர் கோரிக்கை மனுக் களை கமிஷனர் திரிபாதியிடம் வழங்கினர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை பொது மக்கள் புகார் மனுக்கள் பெறப்படுகின்றன. காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை கமிஷனர் திரிபாதி அல்லது கூடுதல் கமிஷனர்கள் மனுக்களை பெறுகின்றனர். சென்னை புறநகர் போலீசாரை சென்னை போலீசுடன் இணைத்த பிறகு 18 ஆயிரமாக போலீசாரின் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. அவர்களின் குறைகளை கேட்க அதிகாரிகள் தயக்கம் காட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதன்படி, வாரத்தில் சனிக்கிழமைதோறும் போலீசார் தங்களது குறைகளை புகாராக தெரிவிக்கலாம். அதனை தன்னிடமே நேரில் வழங்கலாம் என்று அறிவித்தார்.
இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததது. கமிஷனர் திரிபாதி அறிவித்தபடி நேற்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீசாரின் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்காக பிரத்யேகமாக சாமியானா பந்தலஅமைக்கப்பட்டிருந்தது. போலீஸ் குடியிருப்பு கோரு தல், பணி இடமாற்றம், நிலுவை தொகை வழங்க கோருதல், ஊதிய உயர்வு முரண்பாட்டை நீக்க கோருதல், உயர் அதிகாரிக ளால் ஏற்படும் இடையூறு உள்ளிட்ட பல்வேறு மனுக் களை போலீசார் கொடுத்தனர். ஆயுதப்படை போலீஸ், சட்டம் ஒழுங்கு போலீஸ், குற்றப்பிரிவு போலீஸ், போக்குவரத்து போலீஸ், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் என மொத்தம் 850 பேர் தங்களது குறைகளை புகாராக தெரிவித்தனர். அனைத்தையும் கமிஷனர் திரிபாதி பெற்றுக் கொண்டார்.
0 comments:
Post a Comment