எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி

கம்ப்யூட்டரில் மாநில மொழிகளில் எளிதாக தட்டச்சு செய்வதற்கு வசதியாக தமிழ் உட்பட 14 மொழிகளில் புதிய வசதியை கூகுள் இணைய தளம் தொடங்கியுள்ளது.

இந்த சாப்ட்வேரை பெங்களூரில் உள்ள கூகுள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம் வடிவமைத்தது. அதன் மூலம் உலகம் முழுவதும் இந்திய சாப்ட்வேர் ஆராய்ச்சிக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளது. இதுபற்றி கூகுள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

டிரான்ஸ்லிட்ரேஷன் ஐஎம்இ என்று இந்த வசதி அழைக்கப்படும். ரோமன் கீபோர்டைப் பயன்படுத்தி 14 மொழிகளில் ஏதாவது ஒன்றில் வார்த்தையின் சத்தத்தை அடிப்படையாகக் கொண்டு தட்டச்சு செய்தால் போதும்.

தேர்வு செய்யும் மொழியில் அந்த வார்த்தை பதிவாகும். தட்டச்சு செய்யப்படும்

வார்த்தையின் சத்தத்தை அடிப்படையாக கொண்டு அதன் மூல மொழிக்கு இந்த சாப்ட்வேர் தானாக மாற்றிக் காட்டும். உதாரணமாக, ஆங்கிலத்தில் கே&ஏ&எம்&ஏ&எல் என அடித்தால் தமிழில் கமல் என வரும்.

இதுபோல் தமிழ், தெலுங்கு, உருது, பஞ்சாபி, நேபாளி, மராத்தி, மலையாளம், கன்னடம், இந்தி, குஜராத்தி, கிரீக், பார்சி, பெங்காலி, அரேபிக் ஆகிய 14 மொழிகளில் இந்த சேவையைப் பெறலாம். இதற்கான சாப்ட்வேரை கூகுள்

இணைய தளத்தில் இருந்து இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
இதைப் பயன்படுத்த இன்டர்நெட் இணைப்பு அவசியமில்லை.

ஆப்லைன் முறையிலும் உபயோகிக்க முடியும் என்பதுதான் சாப்ட்வேரின் முக்கிய சிறப்பம்சம்.

9 வயது சிறுமி குழந்தை பெற்றாள்

ஆசியாவில் முதலாவதாக சீனாவைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது.

பெண்கள் பருவம் அடையும் வயதாக 12 முதல் 15 வயது வரை கருதப்படுகிறது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக சில குழந்தைகள் முன்னதாக பருவம் அடையும் சம்பவங்கள் உலகம் முழுவதும் நடக்கின்றன.

அதில் ஒன்றாக, வடகிழக்கு சீனாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி பருவம் அடைந்ததுடன், சக மாணவனுடன் ஏற்பட்ட உறவால் நேற்று முன்தினம் குழந்தை பெற்றாள்.

சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது வல்லுறவுக் குற்றம் என்ற சட்டம் உள்ளது. ஆனால், அதை மீறி பள்ளி மாணவர்கள் இடையே தவறான உறவுகள் அதிகரித்து வருகின்றன.
சாங்சன் நகரில் உள்ள மருத்துவமனையில் அந்த சிறுமிக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.

தாயும்(!) சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் அறிவித்தனர். இதுகுறித்து சட்ட உதவியை சிறுமியின் பெற்றோர் கேட்டுள்ளனர்.
இந்தியா, சீனா உட்பட ஆசிய நாடுகளில் 11 வயதுக்கு கீழ் சிறுமி எவரும் குழந்தை பெற்றதாக இதற்கு முன் தகவல் இல்லை. எனவே, சீன சிறுமி குழந்தை பெற்றதுதான் முதல்முறை.

மிகக் குறைந்த வயதில் குழந்தை பெற்ற சம்பவம் 1939ம் ஆண்டில் பெரு நாட்டில் நடந்தது. 5 வயது சிறுமி அப்போது குழந்தை பெற்றாள். 2006ல் அதே நாட்டின் 8 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது.

உலகம் முழுவதும் 9 வயதில் 5 சிறுமிகளும், 10 வயதில் 9 சிறுமிகளும், 11 வயதில் 8 சிறுமிகளும் குழந்தை பெற்ற சம்பவங்கள் இதுவரை நடந்துள்ளன.

சிங்கப்பூரில் கோலாகலம் !!

சிங்கப்பூரில் இன்று கோலாகலமாக தை பூசம் மிகவும் சிறப்பான முறையில் நடந்தது இதில் அன்று நள்ளிரவு முதல் பால்காவடி எடுத்து பக்கதர்கள் தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றினர் இதில் மலேசியா இந்தோனேசியா பக்தர்கள்ஆளாக கலந்து கொண்டு இவ் விழாவினை சிறப்பித்தனர்.

விஐடியில் கமல்-ஸ்னேகா

வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் இந்த ஆண்டு நடக்கும் ரிவேரா 2010 கலை விழாவில் நடிகர் கமல்ஹாஸன் மற்றும் ஸ்னேகா பங்கேற்கிறார்கள்.

வி.ஐ.டி.யில் இன்று சனிக்கிழமை ரிவேரா 2010 கலைவிழா தொடங்கி பிப்ரவரி 2ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.

இந்த ஆண்டு சர்வதேச அளவிலான ரிவேரா விழாவாக நடத்தப்படுகிறது. காலை 6 மணிக்கு காட்பாடி காந்திநகர் சில்க்மில் பகுதியில் இருந்து வி.ஐ.டி. வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுற்றுச்சூழல் மற்றும் பசுமையை வெளிபடுத்தும் வகையில் கிரீன் மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது.

இதில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றார்கள்.

காலை 9 மணிக்கு வி.ஐ.டி. வளாகத்தில் ரிவேரா-2010 கலைவிழாவை பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ். லட்சுமணன் தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து வி.ஐ.டி.யில் உள்ள அரங்கங்களில் மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு விதமான கலைதிறன் போட்டிகளும், வெளி மற்றும் உள் விளையாட்டு அரங்கங்களில் 20 கிரிக்கெட் போட்டி உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடக்கின்றன.

இன்று மாலை இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தின் இன்னிசை கச்சேரி நடக்கிறது. இதில் நடிகை சினேகா கலந்து கொள்கிறார். அதைத் தொடர்ந்து பிரபல பாலிவுட் பின்னணி பாடகி அனுக்ஷா பங்கேற்று பாடுகிறார்.

31ம் தேதி மாலை ஆங்கில ராக் இசைப்புகழ் மதர்ஜேன், பாலிவுட் பாடகர் ஷான், சிங்கபூர் புகழ் பயர் ப்ளயலஸ் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 1ம் தேதி பிரிஸ்க் பேக்கூர் என்ற நடன நிகழ்ச்சி முன்னாள் இந்திய உலக அழகி பார்வதி ஓமன குட்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் ஸ்டைல் செக் எனும் அழகன்- அழகி போட்டி நடக்கிறது.

2ம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நடிகர் கமலஹாசன் பரிசுகளை வழங்கி பேசுகிறார். இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் வி.ஐ.டி. மாணவர்கள் என 18 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள்.

ரஹ்மான் இசையில் கருணாநிதி எழுதிய செம்மொழி மாநாட்டுப் பாடல்

கோவையில் நடக்கவிருக்கும் செம்மொழி மாநாட்டுக்காக முதல்வர் கருணாநிதி எழுதிய பாடலுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் மாதம் நடைபெறுகிறது. மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது என்பதை விளக்குவதற்கான பாடலை முதல்வர் கருணாநிதி இயற்றியுள்ளார். இந்தப் பாடல் இனி தமிழ் மொழி கருத்தரங்குகள் அனைத்திலும் ஒலிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பாடல் வருமாறு:

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி நம் மொழி - அதுவே
செம்மொழி செம்மொழி -நம் தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!


இந்தப் பாடலுக்கு இசையமைப்பது குறித்து முதல்வர் கருணாநிதியுடன் அவரது இல்லத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார் ஏஆர் ரஹ்மான். துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், கனிமொழி எம்.பி., பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோர் உடன் இருந்தனர்.

ஒரு நிமிடம் பேசினால் ரூ.1.50 லட்சம் கட்டணம்

பிரிட்டனின் முன்னாள் பிரதமரான டோனி பிளேர் ஒரு நிமிடச் சொற்பொழிவுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்டணமாகப் பெறுகிறார்.

லான்ஸ்டவுண் பார்ட்னர்ஸ் என்ற லண்டன் ஹெட்ஜ் ஃபண்ட் நிறுவன ஊழியர்கள் மத்தியில் பேசுவதற்காக இந்தக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாம்.


இந்தக் கட்டணம் உண்மைதானா என்ற கேள்விக்கு டோனியின் பேச்சாளர் பதில் கூறவில்லை. ஆனால் உலக அளவில் சிறந்த சொற்பொழிவாளராக டோனி திகழ்கிறார் என பெரும் சொற்பொழிவே நிகழ்த்திவிட்டார்.

அவரது கட்டுரைகளுக்காக அவது புத்தகத்தை வெளியிடும் நிறுவனம் 46 லட்சம் பவுண்டுகள் தந்துள்ளது என்றார்.
அமெரிக்க வங்கி ஜேபி மார்கன் மற்றும் ஜூரிச் பைனான்சியல் சர்வீசஸ் எனும் இரண்டு நிறுவனங்களுக்கு ஆலோசகராக டோனி இருக்கிறார். ஜேபி மார்கன் ஆண்டுக்கு 20 லட்சம் பவுண்டுகள் வழங்குகிறது.

ஜூரிச் பைனான்சியல் சர்வீசஸ் 5 லட்சம் பவுண்டு வழங்குகிறது. இதைத் தவிர அவருக்கு ஆண்டுக்கு 63,000 பவுண்டுகள் ஓய்வூதியமும் கிடைக்கிறது.
ஸ்பெயின் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் நிகழ்த்திய 90 நிமிட சொற்பொழிவுக்காக 1,80,000 பவுண்டுகள் அவருக்கு கிடைத்துள்ளது என்று அவர் கூறினார்.

பிரதமர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு இதுவரை ஒரு கோடி பவுண்டுகள் டோனி பிளேர் சம்பாதித்திருக்கிறார் என கணக்கிட்டுள்ளனர்.

நாய் பயிற்சிக்கு இஸ்ரேல் தொழில்நுட்பம்

பிசிஎல் செக்யூர் பிரமிசஸ் நிறுவனம், இஸ்ரேலின் டயக்னோஸ் இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து மோப்ப நாய்களுக்கான பயிற்சி மையம் தொடங்கி உள்ளது.


நாட்டின் முதல் தனியார் பயிற்சி மையமான இதில், வெடிகுண்டுகள் மற்றும் கொலையாளிகளை கண்டுபிடிப்பது உள்ளிட்ட மோப்ப பயிற்சிகள் அளிக்கப்படும். ÔÔதீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், தனியார் நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், நட்சத்திர ஓட்டல்களுக்கு இத்தகைய பயிற்சி பெற்ற நாய்கள் தேவை அதிகரித்து வருகிறதுÕÕ என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குப்தா தெரிவித்துள்ளார்.

ஆண்களைவிட பெண்கள் அதிகம் தூங்க வேண்டும்

ஆண்களைவிட பெண்களுக்கு கூடுதல் தூக்கம் தேவைப்படுவதாக இங்கிலாந்து நிபுணர் தெரிவித்துள்ளார்.

லண்டனை சேர்ந்த லாப்பரோ யுனிவர்சிட்டியின் உறக்க ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பேராசிரியர் ஜிம் ஹார்ன். தூக்கம் குறித்து அவர் கூறியதாவது:


நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மூளைக்கு ஓய்வு கொடுப்பதுதான் தூக்கம். சோர்வடைந்த மூளைக்கு புத்துணர்ச்சி கொடுப்பதுதான் தூக்கத்தின் முக்கிய பணி. மூளையின் ஒரு பகுதி கார்டெக்ஸ். இது நினைவாற்றல், தகவல் பரிமாற்றம் ஆகிய பணிகளை செய்கிறது.

ஆழ்ந்த தூக்கத்தின்போது, இது வேலை செய்வதை நிறுத்திக் கொண்டு பகல் நேர இயக்கத்தை மறுஆய்வு செய்கிறது. எனவேதான், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்களுக்கு இரவில் அதிக நேர தூக்கம் தேவைப்படுகிறது.
பெண்களின் மூளை ஆண்களின் மூளையிலிருந்து மாறுபட்டது. குழந்தைகள், கணவன் என குடும்ப பொறுப்பு மட்டுமல்லாது, அலுவலக பொறுப்புகளையும் பெண்கள் சுமக்க வேண்டியுள்ளது. எனவே,

ஆண்களைவிட பெண்களுக்கு அதிக நேர தூக்கம் தேவைப்படுகிறது. சராசரியாக 20 நிமிடமாவது பெண்கள் கூடுதலாக தூங்க வேண்டும்.
நிறுவனத்தின் உயர் பொறுப்பில் உள்ள ஆண்கள் பல்வேறு முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவர்களுடைய மூளை மிகவும் சோர்வடைகிறது.

அவர்களுக்கும் சராசரி ஆண்களை விட கூடுதல் தூக்கம் தேவைப்படுகிறது என்றார்.

ஆஸி. மாடல் அழகி கற்பழித்துக் கொலை

சிட்னியைச் சேர்ந்த பால் ராஜேந்திரன் என்பவர் மாடல் அழகியை கற்பழித்துக் கொலை செய்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

மைஸ்பேஸ் இணையதளத்தின் மூலம் ஜேம்ஸ் கார்ட்டர் என்ற பெயரில், அந்த மாடல் அழகியை தனது வலையில் விழ வைத்தார் பால் ராஜேந்திரன். பின்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23 வயதான அந்த அழகியை தனது அலுவலகத்திற்கு அருகில் உள்ள ஒரு இடத்திற்கு வரவழைத்து அங்கு வைத்து கற்பழித்துக் கொலை செய்ததாக அரசுத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

அதற்கு முன்பு அந்த அழகிக்கு ராஜேந்திரன் அனுப்பிய இ மெயில்களில், தான் லா பெர்லா என்ற உள்ளாடை நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், அதன் விளம்பரங்களில் நடிக்க வைக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும் ஆசை காட்டி தனது வலையில் அவரை விழ வைத்தாராம்.

இந்த வழக்கை விசாரித்த டவுனிங் சென்டர் மாவட்ட கோர்ட் ராஜேந்திரன் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர் குற்றவாளி என தீர்ப்பளித்தது.

தீர்ப்பைக் கேட்டதும் பால் ராஜேந்திரன் கதறி அழுதார். பின்னர் அவருடைய வக்கீல், ராஜேந்திரனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை நீதிபதி டெபோரா பெயன் நிராகரித்து விட்டார்.

ஏப்ரல் 15ம் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று தண்டனை விவரம் வெளியிடப்படும்.

சானியா திருமணம் ரத்து

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, தனது குடும்ப நண்பர் சோரப்புடன் நடக்கவிருந்த திருமணத்தை திடீரென ரத்து செய்துள்ளார்.
ஐதராபாத்தை சேர்ந்த சானியா குடும்பத்தாரும், அதே பகுதியை சேர்ந்த சோரப் குடும்பத்தாரும் பல ஆண்டுகளாக பழகி வந்தனர்.

கடந்த ஆண்டு ஜூலை 10ம் தேதி, இரு வீட்டாரின் ஒப்புதலுடன் சானியா & சோரப் நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் விமரிசையாக நடந்தது.
பி.காம் பட்டதாரியான சோரப், தற்போது இங்கிலாந்தில் எம்பிஏ படித்து வருகிறார். ‘படிப்பு முடிந்தவுடன் திருமணம், சானியா தொடர்ந்து டென்னிஸ் ஆட தடையில்லை’ என்று அவர் அறிவித்திருந்தார்.

திருமணத்துக்குப் பிறகு விளையாட மாட்டேன் என சமீபத்தில் சானியாவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், சோரப்புடனான திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சானியா திடீரென அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘நாங்கள் பல ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்தோம். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு எங்களுக்குள் பல விஷயங்கள் ஒத்துப்போகவில்லை.

கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், திருமணத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளேன். சோரப்புக்கு நல்ல வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்’ என்றார்.
சானியாவின் தந்தை இம்ரான் மிர்சாவும், திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து பத்திரிகையாளர்களுக்கு நேற்று எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார்.

1.38 கோடி ரூபாயில் ஷாருக் மெழுகு சிலை

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கானின் முழு உருவ மெழுகுச் சிலையை ரூ.1.38 கோடி செலவில் லண்டன் அருங்காட்சியகத்தில் அமைத்துள்ளனர்.
லண்டனில் மாடேம் டஸ்சாட்ஸ் அருங்காட்சியகம் உள்ளது.


அங்கு சர்வதேச பிரபலங்களின் அச்சு அசலான மெழுகுச் சிலைகள் அமைக்கப்படுவது வழக்கம். சில தினங்கள் முன்பு அங்கு அமெரிக்க அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்செலி இருவரும் அருகருகே நிற்பது போன்ற மெழுகுச் சிலை திறக்கப்பட்டது.


பாலிவுட் முன்னணி நட்சத்திரமான ஷாரூக் கானின் முழு உருவ மெழுகுச் சிலை நேற்று திறக்கப்பட்டது. அதை ரூ.1.38 கோடி செலவில் அமைத்துள்ளனர். அமெரிக்க பயணத்தின் போது விமான நிலையத்தில் ஷாரூக் கானிடம் பாதுகாப்பு கெடுபிடிகள் நடத்தப்பட்டு, பல மணி நேரம் காக்க வைக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன.

எனினும், அமெரிக்கா, லண்டனில் தனக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதால், அங்கு தொடர்ந்து பயணம் செய்வேன் என்று ஷாரூக் கான் சமீபத்தில் கூறியிருந்தார். பாலிவுட் திரையுலகில் அவரது அந்தஸ்தை உலகளவில் வெளிப்படுத்தும் விதமாக லண்டனில் மெழுகுச் சிலையாக நிற்கும் விஐபிக்கள் வரிசையில் ஷாரூக் இப்போது இடம்பிடித்துள்ளார்.

சாக்லெட் உடை

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உலக சாக்லெட் பொழுதுபோக்கு கண்காட்சி நடைபெறுகிறது. அதில் சாக்லெட்களால் செய்யப்பட்ட உடை, அணிகலன்களை அணிந்து வலம் வந்து பார்வையாளர்களை கவர்ந்த மாடல்கள்

தன்னைத் தானே பெல்ட்டால் அடித்துக் கொண்ட போப்

போப்பாண்டவர் 2ம் ஜான் பால், போப்பாக இருந்தபோது தன்னைத் தானே பெல்ட்டால் அடித்துக் கொள்ளும் பழக்கம் கொண்டிருந்ததாக ஒரு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

பிஷப்பாக இருந்தபோதிலிருந்தே இந்தப் பழக்கம் அவரிடம் இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"Why He's a Saint" என்ற பெயரில் வெளியாகியுள்ள புத்தகத்தில்தான் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது. உண்மையான கிறிஸ்துவராக தான் இருக்க வேண்டும் என்பதற்காகவும், உலக பாவங்களுக்காக தன்னை வருத்திக் கொள்ளும் வகையிலும் இவ்வாறு அவர் செய்து வந்ததாக இந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மான்சிக்னர் ஸ்லவோமிர் ஓடர் என்பவர் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். போப்பாண்டவருக்கு புனிதர் பட்டம் கொடுப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவில் முக்கியப் பொறுப்பு வகித்தவர் இவர்.

இந்தக் குழுவின் முன்பு ஆஜராகி போப்பாண்டவர் 2ம் ஜான் பால் நிகழ்த்திய அற்புதங்கள் குறித்து 114 பேர் அளித்த சாட்சியங்கள் மற்றும் போப்பாண்டவர் குறித்த ஆவணப்படம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த நூலை மான்சிக்னர் எழுதியுள்ளாராம்.

இந்தப் புத்தகத்தை வாடிகன் சிட்டியில் வைத்து வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் மான்சிக்னர் கூறுகையில், தன்னைத் தானே வருத்திக் கொண்ட போப்பாண்டவரின் செயலில் எந்தத் தவறும் இல்லை. உலக பாவங்களுக்காக தன்னைத் தானே வருத்திக் கொண்ட செயல் இது. மேலும் இயேசுநாததர் சிலுவையில் அறைந்தபோது பட்ட துன்பத்தை நினைவு கூரும் விதமாகவும் இவ்வாறு கிறிஸ்தவர்கள் செய்வது இயல்புதான்.

முழுமையான கிறிஸ்துவராக தாங்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ள இது ஒரு கருவியாகும். அந்த வகையில்தான் போப்பாண்டவரும் தன்னைத் தானே துன்புறுத்திக் கொண்டுள்ளார்.

இது மட்டுமல்லாமல் பலமுறை உணவு சாப்பிடாமல் வெறும் வயிற்றோடு இருப்பார் போப்பாண்டவர் 2ம் ஜான் பால். மேலும், வெறும் தரையிலும் படுத்துத் தூங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் மற்றவர்களுக்கு அது தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தனது படுக்கையை தானே கலைத்து விட்டு அதில் படுத்துத் தூங்கியது போல காட்டிக் கொள்வார்.

போப்பாண்டவர் தன்னைத் தானே வருத்திக் கொள்வதை தங்கள் காதுகளால் கேட்டதாக போலந்திலும் (அவர் பிஷப்பாக இருந்தபோது), வாடிகன் சிட்டியிலும் பணியாற்றிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் என்றார் மான்சிக்னர்.

இந்த நூலில், கடந்த 1989ம் ஆண்டு, தனக்கு உடல் நலம் சரியில்லாவிட்டால் போப்பாண்டவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து விடுவேன் என்று போப்பாண்டவர் 2ம் ஜான் தனது கைப்பட எழுதிய கடிதத்தையும் இணைத்துள்ளார் மான்சிக்னர்.

பில் கேட்சுக்கு 3 லட்சம் ட்விட்டர் ரசிகர்கள் : 2 நாளில் சாதனை

மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் இப்பொழுது ட் விட்டர் குழுவில் இணைந்துள்ளார். அவர் சேர்ந்தபின் 2 நாளில் அவரது ட்விட்டர் குழு ரசிகர் களின் எண்ணிக்கை 3 லட்சமாக உயர்ந்துள்ளது.

முதலில் பேஸ் புக்கில் பில் கேட்ஸ் இணைந்திருந்தார். ஆனால் ஏராளமானவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததால் செயலற்ற நிலையில் சென்ற ஆண்டு ஃபேஸ் புக்கில் இருந்து வெளியேறினார். ட்விட்டர் குறுந்தளத்தில் பில் கேட்ஸ் என்ற பெயரில் பலர் கருத்துகளைக் கூற¤வருகின்றனர்.

இதில் பல அவரது கருத்துகளுக்கு எதிரானதாக உள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரிஜினல் பில் கேட்ஸே ட்விட்டரில் இணைந்தார்.

இணைந்ததும் அவர் கூறிய கருத்துகள் என்ன?
தன்னுடைய கருத்துகளை தெரிவிக்கும் www.thegatesnotes.com என்ற இணைய தளத்திற்கான இணைப்புகளைத் தந்துள்ளார். கடந்த 2 நாளில் அவரது ட்விட்டர் ரசிகர்கள் எண்ணிக்கை 3 லட்சமாக உயர்ந்துள்ளது. ஒரு மணிக்கு 20,000 பேர் வீதம் அவருடைய ட்விட்டர் பிளாக்கில் இணைந்த வண்ணம் உள்ளனர்.


துபாய்-ஐஎம்டி கல்வி நிறுவ‌ன‌ க‌ட்டிட‌ திற‌ப்பு விழா

இந்தியாவின் உய‌ர்த‌ர‌ க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ளில் ஒன்றான இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் நிறுவ‌ன‌த்தின் புதிய‌ க‌ட்டிட‌ திற‌ப்பு விழா ஞாயிற்றுக்கிழமை ந‌டைபெற்ற‌து.

க‌ட்டிட‌த்தை துபாய் துணை ஆட்சியாள‌ர் ஷேக் ம‌க்தூம் பின் முஹம்ம‌த் பின் ராஷித் அல் ம‌க்தூம், இந்திய‌ வ‌ர்த்த‌க‌ ம‌ற்றும் தொழில்துறை அமைச்ச‌ர் க‌ம‌ல்நாத், அமீர‌க‌ உய‌ர்க‌ல்வி ம‌ற்றும் அறிவிய‌ல் ஆராய்ச்சித்துறை அமைச்ச‌ர் ஷேக் ந‌ஹ்யான் பின் முபார‌க் அல் ந‌ஹ்யான் ஆகியோர் திற‌ந்து வைத்த‌ன‌ர்.

இப்புதிய‌ க‌ட்டிட‌ம் 225,000 ச‌துர‌ அடியில் துபாய் ச‌ர்வ‌தேச‌ க‌ல்வி ந‌க‌ரில் அமைய‌ப்பெற்றுள்ள‌து. இந்தியாவின் உய‌ர்த‌ர‌ க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ளில் ஒன்றான‌ இந்நிறுவ‌ன‌ம் அமீர‌க‌த்தில் உள்ள‌ மாணாக்க‌ர்க‌ளை க‌வ‌ர்ந்து வ‌ருகிற‌து.

விழாவில் டாக்ட‌ர் ப‌ர்ஹ‌த் ராட், டியூக் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ டீன் பிளேர் ஹெச். ஷெப்ப‌ர்டு உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

சன் டிவி லாபம் 35 சதவீதம்சன் டிவி லாபம் 35 சதவீதம் உயர்வு

மீடியா உலகில் முன்னணி வகிக்கும் சன் டிவி நெட்வொர்க்கின் மூன்றாம் காலாண்டு லாபம் 35 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் சன் டிவியின் நிகர லாபம் ரூ.112.2 கோடியாக இருந்தது. ஆனால் இப்போது அது அது ரூ. 151.9 கோடியாக உயர்ந்துள்ளது.

நிறுவனத்தின் மொத்த வருமானம் 45.88 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.270.8 கோடியாக இருந்த வருவாய் ரூ 395.1 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டில் முதல் மூன்று காலாண்டிலும் சேர்த்து நிகர லாபம் ரூ.402.3 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.323 கோடியாக இருந்தது.

பங்கு விற்பனை மூலம் இந்த நிறுவனம் திரட்டிய ரூ.572 கோடியில், ரூ 8.73 கோடி, புதிய சேனல்கள் துவங்க ஒதுக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் அலுவலகங்கள் அமைக்க மட்டுமே ரூ.62.3 கோடி செலவிடப்பட்டுள்ளது.

சன் டிவி நெட்வொர்க் ஐரோப்பா லிமிடெட் என்ற புதிய துணை நிறுவனம் ஒன்றும் துவங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மூலம் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவில் சன் டிவி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்.

டிடிஎச், ஐபிடிவி, எச்ஐடிஎஸ் மற்றும் எம்எம்டிஎஸ் போன்ற தொழில் நுட்பத்தை விநியோகிக்கும் வர்த்தகத்தில் பல புதிய மாறுதல்களைச் செய்யவும் சன் திட்டமிட்டுள்ளது.

விளம்பர கட்டணம் உயர்வு:

தனது தெலுங்கு மற்றும் கன்னட சேனல்களின் விளம்பரக் கட்டண விகிதங்களை 6 முதல் 16 சதவீதம் வரை உயர்த்துவதாகவும் அறிவித்துள்ளது சன். மலையாள சேனல்களில் 10 சதவீகித கட்டண உயர்வு இருக்குமாம்.

கேடிவி, சன் டிவி, சன் நியூஸ், ஆதித்யா, சுட்டி மற்றும் சன் மியூசிக் போன்றவற்றில் 9 முதல் 33 சதவீதம் வரை கட்டண உயர்வை அறிவித்துள்ளது சன்.

போன் விளம்பரத்தில் நடிக்க அமீர்கானுக்கு ரூ.35 கோடி

பாலிவுட் நடிகர் அமீர் கான் செல்போன் நிறுவன விளம்பரத்தில் நடிப்பதற்காக ரூ.35 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் இந்திய விளம்பர சந்தை வரலாற்றில் அதிகபட்ச சம்பளம் வாங்கியவர் என்ற சாதனை படைத்துள்ளார்.


ஐக்கிய அரபு குடியரசின் எடிசலட் தொலைபேசி நிறுவனம் இந்தியாவில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, பாலிவுட் நடிகர் அமீர் கானுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, எடிசலட் நிறுவன விளம்பரத்தில் கான் தோன்றுவார். மூன்று ஆண்டுகளுக்கான இந்த ஒப்பந்தத்துக்கு ரூ.30 முதல் 35 கோடி வரை சம்பளம் கிடைக்கும். ஆண்டு சம்பளம் ரூ.10 கோடியைத் தாண்டி உள்ளது.


இதற்கு முன்பு, பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக் கான் மற்றும் அமீர் கான் ஆகியோர் விளம்பரத்தில் நடிப்பதற்காக ஆண்டுக்கு ரூ.6 முதல் 8 கோடி வரை சம்பளம் பெற்றதுதான் அதிகபட்சமாக இருந்தது. 3 இடியட்ஸ் பட வெற்றியால் அமீர், புதிய சாதனை படைத்துள்ளார். எனினும், சர்வதேச அளவில் கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் மற்றும் டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.


கசாப் பாதுகாப்புக்கு ரூ. 35 கோடி செலவு

மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி அஜ்மல் கசாபின் பாதுகாப்புக்காக, மகாராஷ்டிரா அரசு இதுவரை ரூ. 35 கோடி செலவு செய்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த ஒரு மனுவுக்கு அளித்த பதிலில், மகாராஷ்டிரா பொதுப் பணித்துறை இந்த தகவலை தெரிவித்துள்ளது.


மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் கசாபுக்கு பலத்த பாதுகாப்புடன் கூடிய சிறப்பு அறை, சிறை வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் மற்றும் சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு செல்வதற்காக சுரங்கப் பாதை அமைக்க ரூ. 5.27 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பணிகளை பொதுப் பணித்துறை செய்தது. அதற்கான தொகையை மாநில உள்துறை அமைச்சகம் இதுவரை கொடுக்கவில்லை.


கசாபின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு படை, இந்தோ & திபெத் பாதுகாப்பு படையின் 255 வீரர்கள், மும்பை காவல் துறையின் 50 வீரர்களுக்கு ஆர்தர் ரோடு சிறையின் 20 போலீஸ் அதிகாரிகளுக்கு ஆன செலவுகள், நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு என இதுவரை ரூ.25 கோடிக்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

கின்னஸ் சாதனையில் இடம்பெறும் ரத்தினக் கல் புத்தர் சிலை

உலகின் மிகப் பெரிய ரத்தினக் கல்லால் ஆன புத்தர் சிலை, வியட்நாமில் அமைக்கப்படுகிறது.

வியட்நாமை சேர்ந்த சுரங்க நிறுவன அதிபர் டாவ் டிராங் குங். இவர் மியான்மரில் தோண்டி எடுக்கப்பட்ட மெகா ரத்தினக் கல்லை கடந்த ஆண்டு செப்டம்பரில் ரூ.9.2 கோடிக்கு வாங்கினார். அக்டோபரில் வியட்நாம் கொண்டு வந்தார். அதன் எடை 35 டன்.


அந்த ரத்தினக் கல்லில் பிரம்மாண்ட புத்தர் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்தப் பணியில் 50 சிற்பக் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, உலகின் மிகப் பெரிய ரத்தினக் கல் புத்தர் சிலை உருவாக உள்ள ரத்தினக் கல்லை வியட்நாம் அதிபர் நுயன் மின் டிரீத், திங்கட்கிழமை திறந்து வைத்தார். அந்த விழாவில் 2,000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

புத்தர் சிலை உருவான பிறகு அந்த சிலையின் எடை 25 டன்னாக இருக்கும் என்று டாவ் டிராங் தெரிவித்தார்.

ரத்தினக் கல்லின் உயரம் 10 அடி, அகலம் 6.5 அடி. அதில் புத்தர் சிலை செதுக்கப்பட்டதும் கின்னஸ் சாதனையில் இடம்பெற விண்ணப்பிக்கப்படும் என்றார் டாவ் டிராங். 4 டன் எடையுள்ள ரத்தினக் கல்லில் 9 அடி உயரத்துக்கு உள்ள புத்தர் சிலைதான் இப்போது கின்னஸ் சாதனையிடம் இடம்பெற்றுள்ளது.

சிலையை செதுக்கி முடிக்க 2 ஆண்டுகள் ஆகும். எனவே, ரத்தினக் கல் மீது இப்போது பெயின்டில் புத்தர் உருவம் வரையப்பட்டுள்ளது.

தாமரை மீது தியான நிலையில் புத்தர் அமைந்திருப்பது போல அது இடம்பெற்றுள்ளது.

கோக்க கோலா நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம்அபராதம்

டெல்லியிலுள்ள சாகர்ப்பூர் நகரில் வசித்து வரும் வினோத் குப்தா என்பவர் நான்கு மாஷா குளிர்பானத்தை வீட்டிற்கு வாங்கிச்

சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற பின் குளிர்பானத்தில் பூச்சி இருப்பதை கண்டு அச்சம் அடைந்தார். பின்னர் அருகில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில்

பாட்டிலுடன் புகார் கொடுத்தார்.

வழக்குப் பதிவு செய்த மாநில நுகர்வோர் மன்றம், நடத்திய ஆய்வில் கோக்க கோலா நிறுவனத்தின் குளிர்பானமான மாஷா வில் பூச்சி இருப்பது உறுதி
செய்யப்பட்டது.

இதனையடுத்து, மாஷா குளிர்பானம் தயாரிக்கும் கோக்க கோலா நிறுவனத்தின் ஒரு யூனிட்டிற்கு ரூ.1 லட்சம் அபராதம் நுகர்வோர் நீதிமன்றம்

விதித்தது. மேலும், பாதிக்கப்பட்ட வாடிக்கையளரான வினோத் குப்தாவிற்கு கோக்க கோலா நிறுவனம் ரூ.5,000 நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டது.

இதனையடுத்து, குளிர்பானங்களில் பூச்சி, நச்சுக்கள் கலந்திருக்கும் என இதுபோ

இந்தியா, இந்தியர்கள் இல்லாமல் இங்கிலாந்து இல்லை

இந்தியா, இந்தியர்கள் இல்லாத இங்கிலாந்தை நினைத்துப் பார்க்க முடியாது என்று இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியாவின் 60வது குடியரசு தினத்தையொட்டி அவர் ஆசியன் லைட் என்ற இதழில் சிறப்புக் கட்டுரை எழுதியுள்ளார்.

அதில் பிரவுன் கூறியிருப்பதாவது...

இந்தியாவுடனான சிறந்த உறவும், இந்திய சமுதாயத்தின் அபாரமான பங்களிப்பையும் எடுத்து விட்டால் இங்கிலாந்து ஒன்றுமே இல்லை. இப்போதுள்ள இங்கிலாந்தாக அது இருக்காது.

இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உறவுகள், 21வது நூற்றாண்டில் சம பங்காளர்கள் என்ற அளவுக்கு மேம்பட்டுள்ளது.

முன்பை விட இரு நாடுகளும் மிகுந்த நட்புடனும், வர்த்தக உறவுகளுடனும் திகழ்கின்றன. இந்தியாவின் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்வதில் இங்கிலாந்து பெருமைப்படுகிறது.

இந்த ஆண்டு இந்திய அரசியல் சாசனச் சட்டம் இயற்றப்பட்டதன் 60வது ஆண்டு தினம் என்பதும் இந்தியாவுக்கு பெருமிதமான ஒன்றாகும்.

இங்கிலாந்து ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்த இந்தியா, குடியரசு நாடாக மலர்ந்த தினம் இது. மிகப் பெரிய அளவிலான மாற்றத்தையும், அபாரமான வளர்ச்சியையும் இந்தியா அடைந்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. உலக அளவில் முக்கிய பங்குதாரராகவும் இந்தியா மாறியிருப்பது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமிதம் அளிக்கும் ஒன்றாகும்.

இங்கிலாந்து சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளும் இந்தியர்களின் அபாரமான உழைப்பு மற்றும் பங்களிப்பால் மெருகேறி மேம்பட்டுள்ளன. இங்கிலாந்தின் வளர்ச்சிக்கு இந்தியர்கள் ஆற்றியுள்ள சேவை மறக்க முடியாததாகும்.

நவீன இங்கிலாந்தில் இந்தியர்களும் ஒரு முக்கிய அங்கம் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் பிரவுன்.

நவ்யா-சந்தோஷ் மேனன் திருமணம் நடந்தது!

நவ்யாவின் ஊரான ஹரிப்பாடு அருகே உள்ள செப்பாட் அரசு பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட பந்தலில் இந்த திருமணம் நடந்தது.

இந்து முறைப்படி நடந்த இந்த திருமணத்துக்கு நவ்யாவின் உறவினர்கள், நண்பர்கள் என பலர் திரண்டிருந்தனர். நடிகர்கள் திலகன், சுரேஷ் கோபி, வினீத் போன்றோர் வந்திருந்தனர்.

இன்று மாலை 6 மணிக்கு மணமகன் சந்தோஷ் மேனனின் ஊரான செங்கனாச்சேரியில் திருமண வரவேற்பு நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகு மும்பையில் செட்டிலாகிறார் நவ்யா.

அதே நேரம் திரைப்படங்களில் நடிப்பதையும் தொடரவிருக்கிறாராம்.

டென்மார்க்-பர்தாவுக்கு இடமில்லை

முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா மற்றும் ஹிஜாப் போன்ற அங்கிகளுக்கு டென்மார்க் சமுதாயத்தில் இடமில்லை என பிரதமர் லார்ஸ் லோக்கி ரஸ்முசென் கூறியுள்ளார்.

டென்மார்க் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2 சதவீதம் பேர் முஸ்லிம்கள் ஆவர்.

இந்நிலையில், டென்மார்க் பிரதமர் ரஸ்முசென் செய்தியாளர்களிடம் கூறுகையில், டென்மார்க் சமுதாயத்தில் பர்தா மற்றும் ஹிஜாப் போன்றவற்றுக்கு சுத்தமாக இடமில்லை. இதுபோன்ற அங்கிகள், பெண்மையை தனிப்படுத்திக் காட்டும் அடையாளமாக கருதப்படுவதால் இதை நாம் முற்றிலும் எதிர்க்கிறோம்.

டென்மார்க் ஒரு வெளிப்படையான மற்றும் ஜனநாயக நாடு. ஒருவரிடம் பேசும்போது, அந்த நபரை எவ்வித பாகுபாடும் இன்றி வெளிப்படையாக எதிர்கொள்ள வேண்டும் என விரும்புகிறோம்.

ஒருவரை மதரீதியாகவோ, பாலினரீதியாகவோ தனிமைப்படுத்தி அடையாளம் காணுவதை நாங்கள் விரும்பவில்லை. பள்ளிக் கூடமானாலும், பணியிடமானாலும் இதை கடைப்பிடிக்க நினைக்கிறோம்.

எனவே தான் இந்த அங்கிகளை டென்மார்க் சமுதாயத்தில் அனுமதிக்கக் கூடாது என்கிறோம்.

ஜனநாயக சட்ட திட்டங்களை மீறாமல் இந்த அங்கிகளை மேலும் கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்றார்.

ஷெரின் பார்ட்டியில் ஸ்ரீசாந்த்

தமிழில் ‘துள்ளுவதோ இளமை', ‘உற்சாகம்' உள்பட பல படங்களில் நடித்தவர் ஷெரின். தற்போது கன்னட படத்தில் நடித்து வருகிறார். இவரும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்தும் ஒரு பார்ட்டியில் சேர்ந்து இருப்பது போன்ற படம் இணைய தளங்களில் வெளியானது. இருவரும் காதலிக்கிறார்கள் என்ற செய்தி பரவியது. இது குறித்து ஷெரின் கூறியதாவது:

ஸ்ரீசாந்த் குடும்பமும் எங்கள் குடும்பமும் மிகவும் நெருக்கம். அவர் கிரிக்கெட்டில் புகழ்பெறுவதற்கு முன்பே எனக்குத் தெரியும். சமீபத்தில் எனது அம்மாவுக்கு பெங்களூரில் உள்ள இத்தாலியன் ரெஸ்ட்டாரென்டில் பிறந்தநாள் விழா நடத்தினேன். இந்த நிகழ்ச்சிக்கு குடும்ப நண்பர் என்ற முறையில் ஸ்ரீசாந்தை அழைத்திருந்தோம். அவரும் வந்திருந்தார்.


அவ்வளவுதான். அப்போது அவருடன் நான் எடுத்துக் கொண்ட போட்டோவை இணையதளத்தில் வெளியிட்டு எனக்கும் அவருக்கும் காதல் என்று வதந்தி பரப்பிவிட்டார்கள். அவர் எனக்கு நல்ல நண்பர் அவ்வளவுதான். அதற்குமேல் எதுவுமில்லை. எனக்கு காதல் வந்தால் அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

மும்பையில் பிப். 27ல் 55வது பிலிம்பேர் விருது விழா

55வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா மும்பையில் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறவுள்ளது.

யாஷ்ராஜ் ஸ்டுடியோவில் விழா நடைபெறும் என இன்று அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு விருதுப் போட்டிக்கு 111 படங்கள் வந்ததாகவும், 37 பிரிவுகளின் கீழ் இவை போட்டியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருது குறித்த பேட்டியின்போது நடிகை ஆசினும் பங்கேற்றார். இவர் மூன்று மொழிகளில் பிலிம்பேர் விருது பெற்ற அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விழா குறித்து ஆசின் கூறுகையில், பிலிம்பேருடனான எனது தொடர்பு நீண்டது. எனக்குத் தெரிந்த முதல் திரைப்பட பத்திரிக்கையே பிலிம்பேர்தான் என்றார் ஆசின்

விலை உயர்வால் வாங்க ஆளில்லை

இந்திய ஏலக்காயின் விலை சர்வதேச சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. விலை உயர்ந்ததால் வியாபாரிகள் வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.


கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் விளையும் ஏலக்காய் அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான், சவூதி அரேபியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு சீசனில் இந்தியாவில் 12 ஆயிரம் டன் ஏலக்காய் விளைச்சல் ஏற்பட்டது.

இதில் 700 டன் ஏலக்காய் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. நடப்பு சீசன் ஜூன் மாதம் துவங்கியது. இந்த சீசனில் 8 ஆயிரம் டன் ஏலக்காய் விளைச்சல் கிடைத்துள்ளது. இதில் ஆயிரம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.


கடந்த ஜனவரி 1ம் தேதியன்று வண்டன்மேட்டில் நடந்த ஏலத்தில் 8 பருவட்டு உயர் ரக ஏலக்காய் கிலோ ஆயிரத்து 507 ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த 2002ம் ஆண்டு 8 பருவட்டு ஏலக்காய் கிலோ ரூ.ஆயிரத்து 225க்கு விலைபோனதுதான் இதுவரை அதிகபட்ச விலையாக இருந்தது.
ஏலக்காயின் வரலாறு காணாத விலை உயர்வு வியாபாரிகளை அச்சத்தில் ஆழ்த்தியது.


நிறுவனங்கள் வாங்குவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன. விலையேற்றம் சர்வதேச சந்தையிலும் எதிரொலித்தது.

அதனால் ஏற்றுமதியாளர்களும் ஏலக்காய் வாங்கி ஸ்டாக் வைப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் 8 பருவட்டு ஏலக்காய் விலை கிலோ ஆயிரத்து 280 ஆக சரிந்தது.
7 பருவட்டு ஏலக்காய் கிலோ ஆயிரத்து 100 ஆக உள்ளது. விலையில் ஏற்ற இறக்கத்தால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

சீனாவில் சாக்லெட் தீம் பார்க்

சாக்லெட்டை பிரபலப்படுத்துவதற்காக சீன தலைநகர் பெய்ஜிங்கில் அடுத்த வாரம் சாக்லெட் தீம் பார்க் தொடங்குகிறது. இது ஏப்ரல் மாதம் வரை நடைபெறுகிறது.


ஒலிம்பிக் கிரீன் என்ற இடத்தில் சாக்லெட் தீம் பார்க் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது வரும் 29ம் தேதி தொடங்க உள்ளது.
மொத்தம் 2 லட்சத்து 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும் இந்த அரங்கின் உட்புறம் 5 டிகிரி வெப்பநிலை பராமரிக்கப்படும். வெளிப்புறத்தில் பல்வேறு நவீன வகை சாக்லெட்கள் காட்சிப் படுத்தப்படும்.


மேலும் சாக்லெட் தயாரிப்பு முறை பற்றி குழந்தைகள் தெரிந்து கொள்வதற்கு இது வாய்ப்பாக அமைவதுடன் பெற்றோருடன் சுவைத்துப் பார்க்கவும் முடியும்.
இதில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பல்வேறு முன்னணி சாக்லெட் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.


இதன்மூலம் சீனாவின் மிகப்பெரிய சந்தையைப் பிடிக்க பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. வரும் ஏப்ரல் மாதம் வரை நடைபெற உள்ள இதைக் காண சுமார் 10 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்ணூர் அருகே பரபரப்பு இருவர் கைது

கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள புது மாகி பகுதியில் நேற்று முன்தினம் இரவு டிஎஸ்பி சசிதரன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனைநிறுத்திசோதனையிட்டபோது அதில் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

அந்த வேனில் இருந்த 150 கிலோ பொட்டாஷியம் நைட்ரேட், 400 கிலோ சார்க்கோல் பொடி, 160 கிலோ அலுமினியப் பொடி, 500 கிலோ அம்மோனியம் நைட்ரேட், 200 கிலோ ஸ்டோன்ஷியம் என மொத்தம் ஒன்றரை டன் வெடிபொருட் களை போலீசார் கைப்பற்றினர்.

இவை அனைத்தும் சக்திவாய்ந்த வெடிபொருள் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்களாகும்.இதையடுத்து வேனில் இருந்த பாலக்காடு வடக்காஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (26), சஜீவ் (46) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இருவரும் வடக்காஞ்சேரியில் உள்ள ஒரு கெமிக்கல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், கண்ணூர் மாவட்டம் தளிப்பரம்பு பகுதியில் உள்ள கெமிக்கல் நிறுவனத்திற்கு இந்த பொருட்களை கொண்டு செல்வதாக தெரிவித்தனர். தொடர்ந்து இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சௌந்தர்யா ரஜினியின் துணிச்சல் முடிவு

கோவா படத்தை சொந்தமாக ரிலீஸ் செய்கிறார் ரஜினியின் மகள் சௌந்தர்யா.

பெரும் பட அதிபர்களே தயங்கும் ஒரு முடிவை துணிச்சலாக மேற்கொண்டுள்ளார் சௌந்தர்யா. இவரது ஆக்கர் ஸ்டுடியோவின் முதல் தயாரிப்பான கோவா படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய இருந்தார். ஆனால் படத்தை வாங்க பல ஏரியாக்களில் விநியோகஸ்தர்கள் முன்வரவில்லை.

எனவே பட வெளியீட்டை ஜனவரி 29ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.


இதற்கிடையே, சன் பிக்ஸர்ஸ் இந்தப் படத்தை வெளியிடும் என்றும் கூறப்பட்டது. ஆனால் செயற்கைக்கோள் ஒளிபரப்பு உரிமையை மட்டும் வாங்கிக் கொண்ட சன், படத்தை தங்களால் வெளியிட முடியாது என ஒதுங்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

தந்தையுடன் கலந்து ஆலோசித்த சௌந்தர்யா, பின்னர் தனியாகவே இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார். இதற்கு ரஜினியின் ஆசியும் உண்டாம். மகளுக்காக, தமிழகத்தின் மிகச் சிறந்த திரையரங்குகளை பெற்றுத் தந்துள்ளார் என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்.

சூர்யா- வடிவேலுவீடுகளில் வருமான வரித்துறை ரெய்ட்

நடிகர்கள் சூர்யா, வடிவேலுவின் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்ட் நடந்தது.

அதே போல இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், முருகதாஸ், தினா ஆகியோரின் வீடுகள மற்றும் அலுவலகங்களிலும் ரெய்ட் நடந்தது.

சென்னை தியாகராய நகரில் போக் ரோட்டில் உள்ள சூர்யாவின் வீட்டிலும் அடையாறில் உள்ள அவரது பங்களாவிலும் வருமான வரித்துறை ரெய்ட் நடந்தது.


விருகம்பாக்கத்தில் உள்ள வடிவேலுவின் வீடு, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் வீடு, அலுவலகம், வளசரவாக்கத்தில் இயக்குனர் முருகதாசின் வீடு, மற்றும் சூர்யாவின் உறவினரும் தயாரிப்பாளருமான ஞானவேல் ராஜா ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடந்தது.

ஸ்பெயின் அரசியல்வாதியை பின்லேடனாக மாற்றிய எஃப்.பி.ஐ


அல்காயிதா தலைவராக கருதப்படும் உஸாமா பின் லேடனின் புதிய புகைப்படம் என்று கூறி தனது புகைப்படத்தை வெளியிட்டதை எதிர்த்து ஸ்பெயின் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரும் அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கெதிரான போரின் எதிர்ப்பாளருமான காஸ்பர் லியாமெஸேயர் எஃப்.பி. யின் தரங்கெட்ட செயலுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகிறார்.

எஃப்.பி. யிடம் நான் விளக்கம் கேட்பேன் இதற்கு போதிய விளக்கம் தராவிட்டால் சட்ட நடவடிக்கைக்கு தயாராவேன் என லியாமெஸேயர் சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

52 ஆம் வயதில் உஸாமா எவ்வாறிருப்பார் என்பதை காண்பிப்பதாக கூறி எஃப்.பி.ஐயின் ஃபாரன்சிக் வல்லுநர்கள் உயர்தர தொழிநுட்பத்தை பயன்படுத்தி தயாராக்கியதாக கூறி கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் புகைப்படத்தை வெளியிட்டனர்.
இந்தப் புகைப்படத்தை பார்த்து மிக கவனமாக பரிசோதித்த பிறகு அது தனது புகைப்படத்தை இனையதளத்திலிருந்து எடுத்து சில மாற்றங்கள் செய்து வெளியிட்டிருப்பது லியாமெஸேயருக்கு தெரியவந்தது.
லியாமெஸேயர் கடந்த தேர்தலில் பிரச்சாரத்தில் பயன்படுத்திய புகைப்படத்திலிருந்து நெற்றி, முடி, தாடை ஆகியவற்றை வெட்டி ஒட்டி மாற்றம் ஏற்படுத்திதான் பின்லேடன் புகைப்படத்தை உருவாக்கியதாக எஃப்.பி. சம்மதித்துள்ளது. எஃப்.பி. யின் இந்த தரங்கெட்ட செயல் மூலம் தனது பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது என லியாமெஸேயர் கூறுகிறார்.
பின்லேடனுக்கு இந்தப் புகைப்படத்தால் எதுவும் நிகழப்போவதில்லை, ஆனால் எனது கதி? லியாமெஸேயர் கூறுகிறார். இதனைத் தொடர்ந்து வெளியுறவுத் துறையின் ரிவார்ட் ஃபார் ஜஸ்டிஸ் என்ற இணையதளத்திலிருந்து எஃப்.பி. அந்த புகைப்படத்தை வாபஸ் பெற்றுள்ளது.

செய்தி:
தேஜஸ் மலையாள நாளிதழ்

ஹைத்தியில் ராணுவ ஆதிக்கத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி- நிகரகுவா அதிபர் குற்றச்சாட்டு

மனாகுவா:ஹைத்தியில் ராணுவ ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா பூகம்ப பேரிடரை பயன்படுத்துவதாக நிகரகுவா அதிபர் டானியல் ஒர்டேகா குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஹைத்தியில் புனர்நிர்மாண நடவடிக்கைகள் கவலையை ஏற்படுத்துகிறது. அமெரிக்க ராணுவம் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டை தன் வசம் கொண்டுவந்துள்ளது.

ஒர்டேகா இது குறித்து தெரிவிக்கையில், "பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாக 10 ஆயிரம் ராணுவத்தினரை ஹைத்திக்கு அனுப்பியதாக பெண்டகன் தெரிவித்துள்ளது.

ஹைத்தியின் தலைநகரான போர்ட்டோ பிரின்சில் முக்கிய விமானநிலையத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்க ராணுவத்தின் 82 ஆம் ஏர்போண் டிவிசனில் பாரா ட்ரூப் கடந்த வெள்ளிக்கிழமை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது.

அதிபர் மாளிகை உட்பட தகர்ந்த நிலையில் ஹைத்தி அரசு ஏறக்குறைய செயலற்ற நிலையில் உள்ளது. ஹைத்தியில் ராணுவத்தை அனுப்பியது நியாயமல்ல.

ஹைத்திக்கு தேவை பேரிடர் நிவாரண நடவடிக்கைகளாகும். ராணுவத்தை அல்ல. எல்லா நாடுகளும் ராணுவத்தை அனுப்பினால் அது பைத்தியக்காரத்தனமாகும். ஹைத்தியை ஆக்கிரமித்துள்ள ராணுவத்தினரை அமெரிக்கா வாபஸ் பெறும் என்று நம்புகிறேன்". இவ்வாறு ஒர்டேகா கூறினார்.
1915 ஆம் ஆண்டு அரசியல் ஸ்தரத்தன்மையை காரணம் காட்டி அமெரிக்கா ஹைத்தியை ஆக்கிரமித்தது. 1934 வரை அமெரிக்கா ராணுவம் ஹைத்தியில் நிலைக்கொண்டது. ஏற்கனவே ஹைத்திக்கு 31 ராணுவ டாக்டர்கள் உட்பட நிவாரண நடவடிக்கை குழுவினரையும் நிவாரணப்பொருட்களையும் ஹைத்திக்கு அனுப்பியிருந்தது.

செய்தி:
தேஜஸ் மலையாள நாளிதழ்

2010ன் தொடக்கத்திலேயே 4 அமெரிக்க வங்கிகள் திவால்

இந்த ஆண்டின் தொடக்கமே அமெரிக்க வங்கித் துறைக்கு கசப்பானதாக மாறியுள்ளது. வருடம் பிறந்து 15 நாட்களில் 4 வங்கிகள் அங்கு திவாலாகியுள்ளன.

ஜனவரி 15ம் தேதியன்று மட்டும் 3 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. அவை - பார்ன்ஸ் பேங்கிங் கம்பெனி, செயின்ட் ஸ்டீபன் வங்கி, டவுன் கம்யூனிட்டி வங்கி மற்றும் டிரஸ்ட் ஆகியவை.

கடந்த வாரம் வாஷிங்டனைச் சேர்ந்த ஹாரிசன் வங்கி திவாலானது. இந்த ஆண்டின் தொடக்க மாதத்திலேயே நான்கு வங்கிகள் திவாலாகியுள்ளது அமெரிக்க வங்கித் துறையைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவர்கள் ஜனநாயகத்தை கொலைச் செய்துள்ளார்கள்: அன்னா ஹஸாரே

புனே:தகவல் அறியும் உரிமைச் சட்டத்துறையில் பணியாற்றிய சதீஷ் ஷெட்டியைக் கொன்றதன் மூலம் அக்கிரமக்காரர்கள் கொலைச் செய்தது ஜனநாயகத்தை என்று சமூக சேவகர் அன்னா ஹஸாரே தெரிவித்துள்ளார்.

அஹ்மத் நகர் மாவட்டத்தில் ரலேகாவ் சித்தியில் கண் அறுவைசிகிட்சை முடிந்து ஓய்வெடுத்துவரும் ஹஸாரே செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். ஊழலுக்கெதிராக எந்தவொரு சமரசத்திற்கு இடம்கொடுக்காமல் கடந்த 7 வருடங்களாக அன்னாஹஸாரேயுடன் பணியாற்றிவந்த ஷெட்டி நேற்று முன் தினம் கொல்லப்பட்டார்.

ஷெட்டியை கொல்வது மட்டுமல்ல ஜனநாயகத்தின் ஆன்மாவையும் கொல்வதுதான் அவர்களது நோக்கம். அரசின் அதிகாரத்தில் செயல்படும் சிலரின் ரகசிய ஆதரவு இல்லாமல் இந்தக்குற்றம் நடந்திருக்க வாய்ப்பில்லை. கொலையைக் குறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டுமென்று கூறும் ஷெட்டியின் குடும்பத்தினரின் கோரிக்கையை தானும் ஆதரிப்பதாக ஹஸாரே தெரிவித்தார்.

ஷெட்டியின் மரணம் அமைப்பிற்கு இழப்பு என்று மஹாராஷ்ட்ரா தகவல் அறியும் உரிமை துறை கமிஷனர் விஜய் குவலேகர் கூறினார். தகவல் அறியும் உரிமை த்துறையின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்காவிட்டால் சட்டத்தின் நோக்கம் தோல்வியுறும் என அவர் சுட்டிக்காட்டினார்.

செய்தி:
தேஜஸ் மலையாள நாளிதழ்

சமூக எழுச்சி மாநாட்டு அலுவலகம் திறப்பு கோவையில்...

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
நடத்தும் சமூக எழுச்சி மாநாடு பிப்ரவரி 0-21ம் தேதியில் மதுரையில் நடக்கயுள்ளது. இதையொட்டி தமிழக முழுவதும் சுவர் விளம்பரம், தெருமுனை பிரச்சாரம், பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அதையொட்டி கோவையில் கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாநாட்டு அலுவலகம் கோவை மாநகரத்தில் கோட்டைமேடு பகுதி,மற்றும் கரும்புகடை பகுதிகளில், மாநாட்டு அலுவலகம் திறப்புவிழாஞயிற்றுகிழமை நடந்த்து.

மாநாட்டு அலுவலத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சவுகத் அலி அவர்கள் கொடி ஏற்றினார். மாநாட்டு அலுவலத்தை மாவட்ட தலைவர் ராஜா உசேன் அவர்கள் திறந்து வைத்தார். சிறப்புரையாக மாவட்ட செயலாளர் நாசர் அவர்கள். தெற்கு மாவட்ட செயலாளர் காதர் ஆகியோர்கள் உரை நிகழ்த்தினார்கள். அனைவரையும் மாவட்ட செயலாளர் ஜலில் வரவேற்றார்.

50 ஓட்டல்கள் கார்ல்சன் திட்டம்

உலகின் முன்னணி ஓட்டல் குழுமமான கார்ல்சன் இந்தியாவில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, ஆர்எச்டபிள்யூ ஓட்டல் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் நிறுவனத்தில் 13 சதவீதமாக உள்ள தமது பங்கை 87 சதவீதமாக உயர்த்த ஒப்பந்தம் செய்துள்ளது.

கடந்த 1998 முதல் இந்தியாவில் செயல்பட்டு வரும் கார்ல்சன் ஓட்டல்களை ஆர்எச்டபிள்யூ நிர்வகித்து வருகிறது.
மேலும் 28 ஆக உள்ள ஓட்டல்களின் எண்ணிக்கையை 2012ம் ஆண்டில் 78 ஆக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

ஸ்ரேயாவின் 'ஏறக்குறைய நிர்வாணம்

சுஜாதா நாவலின் தலைப்பு அல்ல இது... ஸ்ரேயா ஏறக்குறைய நிர்வாணமாகவே போஸ் தந்திருக்கும் காலண்டருக்கான தலைப்பு.

ஹாலிவுட் நடிகைகளையே மல்லுக்கு அழைக்கும் அளவுக்கு முன்னேறி விட்டார் ஸ்ரேயா.

சமீபத்தில் 2010 காலண்டருக்காக ஹைதராபாத் ஸ்டுடியோ ஒன்றில் அவர் கொடுத்த போஸ்கள்தான் இன்றைக்கு இன்டஸ்ட்ரி 'டாக்'. தென்னிந்திய சினிமா மாத இதழ் ஒன்றுதான் ஸ்ரேயாவை இப்படி அப்பட்டமாக துகிலுரிந்துள்ளது.

முன்பு மாக்சீம் இதழுக்கு அவர் கொடுத்த போஸ்களை விட இரண்டு மடங்கு அதிக கவர்ச்சி காட்டியுள்ளார் இந்த முறை. இந்த காலண்டரை சமீபத்தில் ஸ்ரேயாவே அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படங்களில் நடித்த முன்னணி கதாநாயகிகள் எவரும் இவ்வளவு துணிச்சலாக அழகைக் காட்டியதில்லையாம்.

அட அவ்வளவு ஏன்... இதே காலண்டரில் ரீமா சென்னின் படமும் உள்ளது. ஆனால் ஸ்ரேயாவிடம் அவர் படுதோல்வியைத் தழுவியிருக்கிறாராம் 'காட்டும்' விஷயத்தில்...

சிவசேனா மிரட்டல்-ஹெய்டன் உதறினார்-கில்கிறைஸ்ட் வரமாட்டார்

ஆஸ்திரேலிய அணியை மகாராஷ்டிராவில் ஆட விட மாட்டோம் என்று சிவசேனா விடுத்துள்ள மிரட்டலை முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ ஹெய்டன் நிராகரித்துள்ளார். தான் ஐபிஎல்-3 போட்டிகளில் நிச்சயம் பங்கேற்பேன் என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால், ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டனான கில்கிறைஸ்ட் சிவசேனாவின் மிரட்டல் கவலை தருவதாக கூறியுள்ளார். எனவே அவர் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.


மார்ச் 12ம் தேதி ஐபிஎல் -3 போட்டித் தொடர் தொடங்குகிறது. இதில் கில்கிறைஸ்ட், ஹெய்டன், ரிக்கி பான்டிங், சைமணட்ஸ் உள்ளிட்ட 30 ஆஸ்திரேலிய வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.


2வது ஐபிஎல் தொடரின் சாம்பியனாக டெக்கான் சார்ஜர்ஸ் உள்ளது. இந்த முறையும் வென்று பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள சார்ஜர்ஸ் அணியின் கேப்டன் கில்கிறைஸ்ட் ஆர்வமாக உள்ளார்.


ஆனால் சிவசேனாவின் மிரட்டல் தனக்கு கவலை தருவதாக அவர் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம், இந்தியாவில் விளையாடலாம் என பச்சைக் கொடி காட்டினால் தான் இந்தியாவுக்கு செல்வது குறித்து முடிவு செய்யவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


அதேசமயம், மாத்யூ ஹெய்ட்ன், ஜேசன் கிரெஸ்ஜா உள்ளிட்டோர் தாங்கள் இந்தியாவுக்கு வர தயங்கவில்லை என்று தெரிவிதுள்ளனர்.

எகிப்து:முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்திற்கு புதிய தலைவர் முஹம்மது பாதி

எகிப்தின் முக்கிய எதிர்க்கட்சியும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இஸ்லாமிய இயக்கமுமான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்திற்கு(இஃவானுல் முஸ்லிமீன்) புதிய தலைவராக முஹம்மது பாதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் தலைவரான முஹம்மது அகஃப்பின் ராஜினாமாவைத் தொடர்ந்தே இந்தத் தேர்வு நடைபெற்றது. எகிப்தின் தெற்கு பகுதி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரான முஹம்மது பாதி ஷூரா கவுன்சில் உறுப்பினர்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக முன்னாள் தலைவரான முஹம்மது அகஃப் தெரிவித்தார்.

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் எகிப்தில் தடைச் செய்யப்பட்டிருந்தாலும் அவ்வியக்கம் கடந்த 2005 ஆம் ஆண்டு எகிப்து பாராளுமன்றத்தேர்தலில் குறிப்பிட்ட தொகுதிகளில் சுயேட்சையாக வேட்பாளர்களை நிறுத்தி அதில் பெரும்பாலானவற்றில் வெற்றிவாகை சூடியது. எகிப்தின் முக்கிய எதிர்கட்சியாகவும் மாறியது.

முஹம்மது பாதி இஃவானுல் முஸ்லிமீன் இயக்கம் 1928 ஆம் ஆண்டு துவங்கப்பட்டதிலிருந்து 8-வது தலைவராவார். 1943 ஆம் ஆண்டு மஹல்லா எல் குப்ரா நகரத்திலுள்ள நைல் டெல்டா பகுதியில் பிறந்தார் முஹம்மது பாதி.

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் பாரா மிலிட்டரி பிரிவின் உறுப்பினர் எனக்குற்றஞ்சாட்டி 9 ஆண்டுகள் சிறைத்தண்டனையை 1960இலிருந்து அனுபவித்தவர் முஹம்மது பாதி. இதற்கு முன்பு இவ்வியக்கத்தின் சித்தாந்த கல்வி(Ideological education) பிரிவின் பொறுப்பை வகித்திருந்தார்.

source:
aljazeera

முஸ்லிம் டாக்சி டிரைவரின் நேர்மை

பயணி தவற விட்ட ரூ.95,000 பணத்தை 350 கி.மீ. பயணம் செய்து திரும்ப ஒப்படைத்தார் டாக்சி டிரைவர்.

நியூயார்க்கில் டாக்டருக்கு படிக்கும் வங்கதேச மாணவர் முகுல் அஸாதுஸ்ஸமான். இவர் தனது படிப்புச் செலவுக்காக பகுதி நேர டாக்சி டிரைவராக பணியாற்றுகிறார்.

கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது இவரது டாக்சியில் பெலிகா லெட்டரி (72) என்ற இத்தாலிய பாட்டி பயணம் செய்தார்.

டாக்சியில் தனது பர்சை மறந்து வைத்து விட்டு இறங்கிச் சென்றார் பெலிகா. அதில் ரூ.95,000(13000 இத்தாலியன் லிரா) இருந்தது. டாக்சியில் பணத்துடன் பர்ஸ் இருப்பதை பார்த்த அஸாதுஸ்ஸமான், அதில் இருந்த முகவரியில் ஒப்படைக்க டாக்சியை கிளப்பினார்.

சுமார் 87 கி.மீ. பயணம் செய்து வீட்டைக் கண்டுபிடித்த முகுலுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வீடு பூட்டியிருந்தது. எனினும், போன் நம்பரை கதவில் எழுதிவிட்டு நியூயார்க் திரும்பினார்.
சில மணி நேரத்தில் அவரது போனில் பெலிகா தொடர்பு கொண்டார். உடனடியாக, மீண்டும் அவரது வீட்டுக்கு பணத்துடன் விரைந்தார் முகுல்.

தவற விட்ட பணத்தை 350 கி.மீ. பயணம் செய்து திரும்ப ஒப்படைத்த அஸாதுஸ்ஸமானுக்கு பரிசு அளிக்க விரும்பியும் அதை வாங்க மறுத்தார் அஸாதுஸ்ஸமான்.

நியூயார்க் போஸ்ட் என்ற பத்திரிகைக்கு இதுத்தொடர்பாக பேட்டியளித்த அஸாதுஸ்ஸமான், "எனது தாயார் நான் 5 வயதாக இருக்கும்பொழுது கூறுவார், ’நேர்மையாளனாக இரு!கடினமாக உழை! நீ வாழ்க்கையில் உயருவாய்!’" என்று தன்னிடம் கூறியதாக அவர் கூறினார்.

பக்ராம் சிறைக் கைதிகளின் பெயர் பட்டியலை அமெரிக்கா வெளியிட்டது

ஆப்கானிஸ்தானின் குவாண்டனாமோ என்றழைக்கப்படும் பக்ராம் சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டிருக்கும் 654 சிறைக் கைதிகளின் பெயர் விபரத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

சிறைக் கைதிகளைக் குறித்தும் அவர்களை நடத்திய விதம் குறித்தும் ஆதாரங்கள் வேண்டுமென்று கோரி அமெரிக்காவிலிலுள்ள சிவில் லிபர்டீஸ் யூனியன் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி அளித்த மனுவில்தான் இந்தப்பெயர் பட்டியலை அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டனர்.

சிறைக் கைதிகளைக் குறித்த முக்கிய விபரங்கள் தற்ப்பொழுதும் முழுமையாக வெளியிடப்படவில்லை என எ.சி.எல்.யு கூறினார். ஏற்கனவே இப்பட்டியலை வெளியிட அமெரிக்கா மறுத்திருந்தது.

பக்ராம் சிறைச்சாலையில் நடவடிக்கைகளை ஒளிவு மறைவற்ற முறையில் வெளிக்கொண்டுவருவதற்கான முயற்சியின் ஆரம்ப நடவடிக்கைதான் இது என எ.சி.எல்.யு வின் வழக்கறிஞர் மெலிஸா குட்மான் கூறினார்.

சிறைக்கைதிகள் எவ்வளவு காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், எந்த நாட்டைச் சார்ந்தவர்கள், போர்க்களத்திலிருந்தா அல்லது ஆப்கானிஸ்தானிற்கு வெளியேயிருந்து பிடிக்கப்பட்டவர்களா ஆகிய விபரங்களும் வெளிவரவேண்டியதிருக்கிறது என அவர் தெரிவித்தார்.

பக்ராம் சிறைக்கொட்டடியில் 16 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர் என அமெரிக்கா பாதுகாப்புத்துறை வெளியிட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2009 செப்டம்பர் வரை பக்ராம் சிறைக்கொட்டடியில் அடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 654.

2001 டிசம்பரில் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது முதல் அமெரிக்க கூட்டுப்படையினர் காபூலின் வடக்கு பகுதியிலிலுள்ள பக்ராம் விமானத்தளத்தை சிறைக்கொட்டடியாக பயன்படுத்தி வருகிறது. இங்கு அடைக்கப்பட்டவர்கள் தாங்கள் கொடூரமான முறையில் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதாக கடந்த ஆண்டு புகார் கூறியிருந்தனர்.

செய்தி:
தேஜஸ் மலையாள நாளிதழ்

தலித் இளைஞரை மலம் திண்ண வைத்த ஜாதி வெறியர்கள்!

தலித் இளைஞரின் வாயில் மனித மலத்தை வைத்து திணித்ததாக தேவர் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் மேலக்கோயில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் சடையாண்டி (24) போலீசில் அளித்துள்ள புகாரில், 'கடந்த 7ம் தேதியன்று மேலக்கோயில்பட்டி கிராமத்தில் சென்று கொண்டிருந்தேன். அப்போது சாதி கிறிஸ்தவர்கள் நான்கைந்து பேர் ஒன்றாக சேர்ந்துகொண்டு என்னை வழிமறித்தனர்.

இந்த தெருவில் செருப்பு போட்டுக்கொண்டு போகக்கூடாது என சொல்லியும் திமிறாக செருப்புக்காலுடன் நடக்கிறாயா எனக் கேட்டனர். நான் அவர்களுக்கு பதில் சொல்லாமல் சென்றதால் ஆத்திரப்பட்டு ஜாதிப்பேர் சொல்லி திட்டி என்னை மடக்கினர். அந்த கும்பலில் இருந்த ஆரோக்கியசாமி, டேவிட், செல்வேந்திரன், கென்னடி, கண்ணதாசன், பீட்டர், அன்பு ஆகியோர் என்னை அடித்தனர்.

இரண்டுபேர் என்னை வலுக்கட்டாயமாக பிடித்துக்கொண்டு, வாயைத் திறந்து மனித மலத்தை திணித்தனர். என் முகத்திலும் அசிங்கப்படுத்தினர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தின் போது அங்கிருந்த சிலர் தன்னை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்ததாகவும், பயம் காரணமாக போலீசில் உடனடியாக புகார் தெரிவிக்கவில்லை என்றும் சடையாண்டி கூறினார்.

இதையடுத்து நேற்று போலீசார் இப்புகாரின் பேரில் ஆரோக்கியசாமி உட்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். யாரும் உடனடியாக கைது செய்யப்படவில்லை. இதற்கிடையே, சடையாண்டியை அடித்ததாகக் கூறப்படும் இளைஞர் தரப்பிலும் போலீசில் புகார் தரப்பட்டுள்ளது. அதில், 'சடையாண்டி குடித்துவிட்டு வந்து எங்களிடம் தகராறு செய்தார்' என்று கூறப்பட்டுள்ளது.

'அல்லாஹு அக்பர்' என்ற சொல்லைக் கேட்டால் கடிப்பதற்கு நாய்களுக்கு பயிற்சியளிக்கும் இஸ்ரேல்


அல்லாஹு அக்பர்(அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று அரப் முஸ்லிம்கள் சொல்வதைக் கேட்டால் அவர்களை தாக்கி கடிப்பதற்கு இஸ்ரேல் ராணுவம் நாய்களுக்கு பயிற்சி அளித்துவருகிறது.

அரப் மூவ்மெண்ட் ஃபார் ரினீவல் பார்டியின் தலைவரும் இஸ்ரேல் பாராளுமன்ற உறுப்பினருமான அஹ்மத் திபி இதனை வெளிப்படுத்தியுள்ளார். பாராளுமன்றக் கூட்டத்தின் போது திபி இதனைக் குறித்து கேள்வியெழுப்பினார்.

இத்தகையதொரு பயிற்சி நாய்களுக்கு அளிக்கப்படுகிறதா என்பதைக் குறித்து தெளிவுப்படுத்த வேண்டுமென்றும் அல்லாஹு அக்பர் என்று கூறுவது உங்களை ஏன் பயப்படுத்துகிறது என்றும் திபி இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார்.

இஸ்ரேல் ராணுவத்தின் இந்த நடவடிக்கையை முதலில் வெளிக்கொணர்ந்தது இஸ்ரேல் ரேடியோவின் ராணுவச் செய்தியாளர் கார்மேல மினாஷை என்பவர்.
ஏற்கனவே டாக் ஸ்க்வாடின் ப்ளீனம் திருவிழாவில் இஸ்ரேல் பாதுகாப்புத் துறையின் பயிற்சிகளை கண்ட ராணுவ வீரர்களின் தாய்மார்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் திபி கூறுகிறார்.

"அல்லாஹு அக்பர்" என்ற வசனத்தை நீங்கள் பயப்படுகின்றீர்களா? நான் உங்கள் அனைவரிடமும் கூறுகிறேன், அல்லாஹுதான் பெரியவன், இங்கு என்னை கடிக்க ஏதேனும் நாய்கள் உண்டா?- ஆவேசத்தோடு கேட்கிறார் திபி.
செய்தி:
தேஜஸ் மலையாள நாளிதழ்

துப்பாக்கி வாங்க குழந்தையை விற்ற பெண் கைது

பீனிக்ஸ் (Phoenix) அமெரிக்கா - தான்யா நாரே (Tanya Nareau) என்ற 33 வயது பெண் துப்பாக்கி ஒன்றை வாங்குவதற்காக தனது இரண்டு வயது குழந்தையை பண்டமாற்று முறையில் விற்றதற்காக கைது செய்யப்பட்டார்.


இச்சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் போலீஸார் தான்யாவின் வீட்டிற்கு சோதனையிடச் சென்றனர். அங்கு அவளது குடும்ப நண்பர் ஒருவர் தன்னிடமிருந்து துப்பாக்கி பெறுவதற்காக தான்யா குழந்தையைக் கொடுத்ததை ஒப்புக் கொண்டார்.


சட்டப்படி தன்னால் துப்பாக்கி வாங்கி இயலாததாலும், தனது நண்பன் குழந்தையை நல்லவிதமாக பராமரிப்பான் என்ற நம்பிக்கையிலும் நடந்து கொண்டதாக தான்யா போலீஸாரிடம் தெரிவித்தார். காவல்துறை அவரை சிறையில் அடைத்துள்ளது.

சன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை

வேட்டைக்காரன் படம் சரியில்லை என்பது தெரிந்த விசயம். சன் டிவியின் விளம்பரத்தால் அது கொஞ்சம் மறைந்து போனது. விளம்பரத்தால் ஓரளவு கலெக்‌ஷன் ஆகிக்கொண்டிருந்தது.


இந்த நேரத்தில் சன் பிக்சர்ஸ், படத்தை ஓட வைப்பதற்கு ஏவி.எம். பாணியை கையாண்டதுதான் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதையாகிவிட்டது.

வேட்டைக்காரன் படத்தை தயாரித்தது ஏவி.எம்.தான். பொதுவாக ஏவி.எம். தயாரித்த படங்கள் ஓடுவதற்கு அந்நிறுவனம் பல பரிசு போட்டிகளை அறிவிப்பது வழக்கம். இந்த போட்டிகளில் முக்கிய நட்சத்திரமாக பெரும்பாலும் பங்கேற்று பரிசு அளித்தது நடிகை மனோரமா.

இப்படி பரிசு போட்டி அறிவிப்புகள் மக்கள் மத்தியில் ‘’ஆஹா அப்ப படம் ஓடலையா’’ என்ற கமெண்ட்டை கிளம்பும். வேட்டைக்காரனிலும் அதுதான் நடந்திருக்கிறது.

வேட்டைக்காரன் படத்திலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்போருக்கு 25 ஆயிரம் பரிசு என்ற விளம்பரம் வந்ததுமே வேட்டைக்காரன் படம் பார்க்காதவர்களும், அப்படம் பற்றி கேள்விப்படாதவர்களும், ‘’ஏன் வேட்டைக்காரன் படம் நல்லாயில்லையா? படம் ஓடலையா? இப்படி போட்டியெல்லாம் வைக்கிறாங்களே?’’என்ற கேள்வியை எழுப்பிவிட்டார்கள்.

அப்புறமென்ன, தியேட்டர்களில்.......!(சொல்ல வேண்டுமா என்ன..தெரிந்த விசயம்தானே)

மும்பை மராத்தான்-மும்பை மராத்தான்- ஜொலித்த ஸ்டார்கள்

மும்பையில் இன்று நடந்த மும்பை மராத்தான் நிகழ்ச்சியில் ஏராளமான திரைப்பட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

மும்பையில் இன்று 7வது மும்பை மராத்தான் போட்டி நடந்தது. இதில், திரையுலகைச் சேர்ந்த வித்யா பாலன், ஜெனீலியா, ராகுல் போஸ், ரித்தீஷ் தேஷ்முக், குல் பனாக், மஹிமா சவுத்ரி, ஜான் ஆப்ரகாம் என ஏகப்பட்ட பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

மாடல்-நடிகரான மிலிந்த் சோமன் போட்டி தூரமான 42.1 கிலோமீட்டர் தூரத்தை ஓடிக் கடந்தார். தாரா சர்மா, சோஃபி, புரப் கோஹ்லி ஆகிய நட்சத்திரங்களும் இதில் கலந்து கொண்டு ஓடினர்.

அதேபோல அனந்த் மஹிந்த்ரா உள்ளிட்ட தொழிலதிபர்களும் பங்கேற்றனர். அதேசமயம், வருடா வருடம் தவறாமல் பங்கேற்கும் அனில் அம்பானி இந்த முறை வரவில்லை.

சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு ஓடினார் என்பது குறிப்பிடத்தக்

பொங்கல் நாளன்று நெல்லை மாவட்டத்தில் ரூ. 3 கோடி மது விற்பனை

நெல்லை மாவட்டத்தில் பொங்கல் நாளான்று டாஸ்மாக் கடைகளில் ரூ. 3.1 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.36 லட்சம் அதிகம் ஆகும்.

நெல்லை மாவட்டத்தில் 223 டாஸ்மாக் மதுகடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 49 கடைகள் மாநகராட்சி பகுதியிலும், 174 கடைகள் மற்ற பகுதிகளிலும் இயங்கி வருகின்றன.


நெல்லை மாவட்ட டாஸ்மாக் கடைகளில் சராசரியாக நாளொன்றுக்கு 1 கோடி் ரூபாய் வரை மதுபானங்கள் விற்பனையாகிறது. விழாக்காலங்களில் விற்பனை கூடுதலாகி வருகிறது.


கடந்த தீபாவளி பண்டிகைக்கு ரூ.3 கோடியே 34 லட்சத்திற்கு மதுபானங்கள் விற்னையானது. இந்நிலையில் பொங்கல் தினத்தன்று ரூ.3 கோடியே 1 லட்சத்து 5,800க்கு விற்பனையாகி உள்ளது.


கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஓப்பிடும்போது இந்த ஆண்டு ரூ.36 லட்சம் அதிகமாகும். இதன் மூலம் 13 சதவீதம் விற்பனை

பழம்பெரும் கம்யூ. தலைவர் ஜோதிபாசு மரணம்

பழம்பெரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசு இன்று பிற்பகல் கொல்கத்தா மருத்துவமனையில் மரணமடைந்தார்.

அவருக்கு வயது 95. ஜனவரி 1ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஏ.எம்.ஆர்.ஐ. மருத்துவமனையில் நிமோனியா காரணமாக அனுமதிக்கப்பட்டார் ஜோதிபாசு. அங்கு தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சில நாட்களுக்கு முன்பு அவரது இதயம், சிறுநீரகம், நுரையீரல் ஆகியவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. முதலில் சிறுநீரகம் செயலிழந்தது. பின்னர் நுரையீரல், இதயம் ஆகியவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன.

நேற்று இரவு அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்தது. அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் ஜோதிபாசு மரணமடைந்தார். இதுகுறித்து இடதுசாரி கூட்டணி கமிட்டியின் தலைவர் பிமன் போஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜோதிபாசு நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற சோகச் செய்தியை உங்களிடம் பெருத்த வருத்தத்துடன், கனத்த இதயத்துடன் கூறிக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

ஜோதிபாசுவின் தனி மருத்துவர் டாக்டர் அஜீத் குமார் மைத்தி கூறுகையில், 11.47 மணிக்கு ஜோதிபாசு மரணமடைந்தார் என்றார்.

ஜோதிபாசுவுக்கு சந்தன் என்ற மகன் உள்ளார். அவருடைய மனைவி கமலா நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்தார்.

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து 23 ஆண்டுகள் இருந்து பெரும் சாதனை படைத்தவர் ஜோதிபாசு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் சிறந்த காராக நானோ தேர்வு

உலகின் மலிவு விலை காரான டாடா நானோ, இந்த ஆண்டின் சிறந்த காருக்கான ÔÔஆட்டோகார் விருது 2010ÕÕக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த விருதை தனியார் வர்த்தக சேனல் குழுமம் ஆண்டுதோறும் அளித்து வருகிறது.

மும்பையில் இந்த ஆண்டுக்கான சிறந்த கார் தேர்வு விழா நேற்று நடந்தது. அதில் டாடா நானோ பெயர் அறிவிக்கப்பட்டது.

அதைத் தயாரிக்கும் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்படும். காரின் விலையும் ரூ.1 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்டைக்காரன்’ ஒளிபரப்பு கேபிள் டிவி அதிபர் கைது

ஈரோடு மாவட்டத்தில் கேபிள் டி.வி.யில் ‘வேட்டைக்காரன்’ ஒளிபரப்பியதால், கேபிள் டிவி உரிமையாளர் கைது செய்யப்பட்டார். ஒளிபரப்பு தளவாடங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் கேபிள் டிவிகளில் புதிய படங்கள் ஒளிபரப்பு செய்வதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில், ஈரோடு, பவானி, கோபி சுற்று வட்டாரப் பகுதியிலுள்ள திரைப்பட சி.டி. கடைகள் மற்றும் கேபிள் ஒளிபரப்பு மையங்களில் போலீசார் நேற்று முன்தினம் காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர். பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, பெரும்பாலான சி.டி. கடைகள் பூட்டியிருந்ததால் யாரும் சிக்கவில்லை.


கேபிள் ஒளிபரப்பு நிலையங்களில் மேற்கொண்ட சோதனையில் பவானி அருகேயுள்ள குருப்பநாயக்கன்பாளையம் சக்தி கேபிள் நெட்வொர்க் மையத்தில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் வேட்டைக்காரன் படம் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கேபிள் உரிமையாளர் யுவராஜ்(25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அங்கிருந்த ஒளிபரப்பு சாதனங்கள், கம்ப்யூட்டர், வேட்டைக்காரன் உள்ளிட்ட புதுப்பட சிடிகளை பறிமுதல் செய்தனர்.


இது குறித்து எஸ்.பி.ஜெயச்சந்திரன் கூறுகையில், ‘கேபிள் சேனல் ஒளிபரப்புகளை கண்காணித்து வருகிறோம். உரிமம் இல்லாத புதுப்படங்களை ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை எடுப்போம். கேபிள் டிவி மற்றும் சி.டி. கடைகளில், உரிமம் இல்லாமல் புதுப்பட சி.டி.கள் வைத்திருந்தால் கைது செய்யப்படுவார்கள்’ என்றார்.

கசாப்பை மீட்க முயன்ற லஷ்கர் இ தொய்பா

மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, பாதுகாப்புப் படையினரிடம் சிக்கிக் கொண்ட அஜ்மல் கசாப்பை மீட்க பாகிஸ்தானிய லஷ்கர் இ தொய்பா சதியாளர்கள் முயன்றதாக அமெரிக்க கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெட்லி, ராணா மீதான குற்றச்சாட்டுப் பதிவின்போது சிகாகோ கோர்ட்டில் எப்.பி.ஐ அதிகாரிகள் இதைத் தெரிவித்தனர்.

மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின்போது பாதுகாப்புப் படையினரிடம் கசாப் சிக்கிக் கொண்டதை அறிந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பினர், தாஜ், டிரைடன்ட் ஹோட்டலில் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்தவர்களை விடுவிப்பதாகவும், கசாப்பை மட்டும் விட்டு விடுமாறும் இந்தியத் தரப்பிடம் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் அது நிறைவேறவில்லை. அதற்குள் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் இந்தியப் படையினர் சுட்டு வீழ்த்தி விட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மசூதி நுழைவு போராட்டம்

வேலூர் கோட்டையில் அமைந்துள்ள மசூதியில் முஸ்லிம்களுக்கு தொழுகை நடத்த அனுமதிக்குமாறு பல முறை மத்திய மாநில மற்றும் தொல்பொருள் துறைக்கு முஸ்லிம்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை அனைத்தும் நிராகரிக்கபட்டு வந்துள்ளன.

இதனை கண்டித்து வருகின்ற ஜனவரி 20 வேலூர் கோட்டை மசூதியில் நுழைவு போராட்டம் நடத்த உள்ளனர் இதில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற உள்ளது.

உலக காதலர்களை மயக்கும் ஓசூர் ரோஜா

காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூரில் இருந்து 4 கோடி ரோஜா மலர்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரம், கடல் மட்டத்தை விட 1500 அடி உயரத்தில் உள்ளது.

எல்லா மாதங்களிலும் சீரான தட்பவெப்பம் நிலவுவதால் இங்கு காய்கறிகள், ரோஜா மலர்கள் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் 3125 ஏக்கர் நிலப்பரப்பில் மலர் சாகுபடி நடக்கிறது.

இதில், 700 ஏக்கர் நிலப்பரப்பில் பசுமை குடில் அமைத்து மலர் உற்பத்தி செய்கின்றனர். இங்கு உற்பத்தியாகும் ரோஜா மலர்கள், ஹாலந்து, போலந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், மலே சியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.