2009ம் ஆண்டின் கடைசி காலாண்டில் அதிக வரி கட்டிய விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் பாலிவுட்டில் அதிக வரி கட்டியவர்களாக அக்ஷய் குமாரும், ஆமிர்கானும் உள்ளனர்.
டிசம்பர் மாதத்துடனான காலாண்டில் சச்சின் கட்டிய வருமான வரியின் அளவு ரூ. 1.5 கோடியாகும். நாட்டின் 500 முன்னணி வருமான வரி கட்டுவோரின் பட்டியலில் சச்சின் 115வது இடத்தில் உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியும், ஷேவாக்கும் இதே காலகட்டத்தில் தலா ரூ. 1 கோடி வரியைக் கட்டியுள்ளனர். 500 பேர் பட்டியலில் டோணி 199வது இடத்திலும், ஷேவாக் 201வது இடத்திலும் உள்ளனர்.
இந்த 500 பேர் பட்டியலில் அக்ஷய் குமார் 25வது இடத்திலும், ஆமிர்கான் 26வது இடத்திலும் உள்லனர். இருவரும் தலா ரூ. 4 கோடி வரி கட்டியுள்ளனர். ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய், ஹ்ரித்திக் ரோஷன் எல்லாம் இவர்களுக்கு ரொம்ப தூரத்திற்குப் பின்னால் உள்ளனர்

0 comments:
Post a Comment