வாகுபெற்றவுடன் வாக்கு மாறிய MP

ராமநாதபுரம்: "சேதமடைந்த வீடுகளுக்கு தீர்வளிப்பதாக,' நன்றி அறிவிப்பின் போது ரித்தீஷ்குமார் எம்.பி.,கூறி சென்றும், நடவடிக்கை இல்லை என கிராம மக்கள் கலெக்டரிம் மனு அளித்தனர். திருப்புல்லாணி ஒன்றியம் நல்லான்குடியிருப்பு காலனியில் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த ஐந்து குடும்பங்கள் வசித்து வருகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு தரப் பட்ட வீடுகள், எந்நேரத்திலும் இடியும் தருவாயில் உள்ளது. இது குறித்து அமைச்சர் தங்கவேலன், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

கடந்த லோக்சபா தேர்தலில், ரித்தீஷ்குமார் எம்.பி., வெற்றி பெற்று நன்றி அறிவிப்புக்கு செல்லும் போது, இப்பகுதி மக்கள் தங்கள் நிலை குறித்து முறையிட்டுள்ளனர். ""நடவடிக்கை எடுப்பதாக, '' எம்.பி.,யும் உறுதியளித்து சென்றுள்ளார்.

அதன் பின் அதற்கான எந்த முன்னேற்றமும் இல்லை. தொடர்ந்து மழை, புயல் என அபாயகரமான வீட்டில் வசித்து வெறுத்து போன மக்கள், வழியின்றி கலெக்டரிடம் முறையிட வந்தனர்.

ராமவள்ளி: எங்கள் வீட்டின் நிலையை பார்த்தால் யாரும் வசிக்க முன்வரமாட்டார் கள். முறையிடாத ஆட்கள் இல்லை. எந்த நடவடிக்கையும் இல்லை.
சாந்த்தா : தேர்தல் வெற்றிக்கு நன்றி கூற வந்த ரித்தீஷ்குமார் எம்.பி., யிடம் இது குறித்து முறையிட்டோம். அவரும் செய்து தருவதாக கூறி சென்றார். அதன் பின் எந்த தகவலும் இல்லை.

சரஸ்வதி : வழியின்றி கலெக்டரிடம் முறையிட வந்தோம். ஆனால் கலெக் டரோ, ரித்தீஷ் எம்.பி.,யிடம் செல்லுமாறு கூறியுள்ளார். அவர் இங்கு இல்லை, எப்படி முறையிடுவது என்பதும் தெரியவில்லை, என்றனர்.

0 comments: