பாலஸ்தீன் கைதிகளை குடும்பத்தினர் சந்திக்க தடை

தமது குடும்ப உறுப்பினர்களைச் சந்திப்பதற்கு ரமொன் பாலைவனச் சிறைச்சாலையில்

இஸ்ரேலியச் சிறையில் வாடும் பலஸ்தீன் கைதிகள்

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஜெரூசலவாசிகள் பத்துப்பேருக்கு இஸ்ரேலிய சிறை நிர்வாகம் தடைவிதித்துள்ளது. அக் கைதிகளில் ஒருவர் கண்பார்வையற்றவர் என்பதோடு, இந்தத் தடையுத்தரவு குறித்து இதுவரை எந்தவொரு நியாயமான காரணமும் முன்வைக்கப்படவில்லை.

சில தினங்களுக்கு முன்பு இதே சிறை நிர்வாகம் ஜெரூசலத்தைச் சேர்ந்த கைதி ஒருவரைத் தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருந்ததோடு, அவரது தனிப்பட்ட விபரங்கள், புகைப்படம் உட்பட அவர் தொடர்பான சகல தகவல்களையும் உரிய கோவைகளிலிருந்து அப்புறப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை (03.01.2010) அரசியல் கைதியாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள பலஸ்தீன் எழுத்தாளர் இப்றாஹீம் அப்துல் ஹெய்ஜாவின் தண்டனைக்காலத்தை மேலும் ஆறு மாத காலத்துக்கு நீடிக்குமாறு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை ஐந்தாவது முறையாக உத்தரவு பிறப்பித்துள்ளது.


கடந்த இரண்டு வருட காலமாக எவ்விதக் குற்றமும் சுமத்தப்படாத நிலையில், எத்தகைய விசாரணையுமின்றி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அப்துல் ஹெய்ஜாவின் விடுதலைக்காகப் பொறுமையிழந்து காத்துக்கொண்டிருப்பதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

கைதிகள் நலன்கள் தொடர்பான நிபுணர் ஃபுவாட் அல் ஹஃப்ஷ் இது பற்றிக் கருத்துரைக்கையில்,ஊடகத்துறையைப் பொறுத்தவரையில் அப்துல் ஹெய்ஜா என்ற பெயர் மிகப் பிரபலமானது. அவர் நிறைய ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ள ஒருவர் என்று தெரிவித்தார்.


அப்துல் ஹெய்ஜா பல்வேறு சமூக சேவைகளிலும் நன்கொடை நிதியங்களிலும் பெரும் பங்காற்றிய ஒருவராவார். அவர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் நன்கொடை நிதியத்தின் தலைவராக இருந்து பலஸ்தீனில் பாடசாலைகளும் அனாதை இல்லங்களும் நிறுவப்படுவதற்காக முன்னின்று உழைத்துள்ளார். மேலும், ஜெனினின் அகதி முகாம் புனருத்தாபனப் பணிகளிலும், பலஸ்தீன் கைதிகளுக்கு உணவு, உடை முதலான அத்தியாவசியப் பொருட்களைக் கிடைக்கச் செய்வதிலும் முனைப்பாகச் செயற்பட்டுள்ளார்.

மூன்று ஆண் குழந்தைகளின் தந்தையான 35 வயதான அப்துல் ஹெய்ஜா, நப்லஸிலுள்ள அல் நஜாஹ் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் முதுமாணிப்பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: PIC


0 comments: