பைபர்கிளாஸ் சிலிண்டர் ஏப்ரல் முதல் கிடைக்கும்

ஏப்ரல் மாதம் முதல் பைபர்கிளாசில் தயாரான, துல்லியமாக காஸ் அளவு தெரியக்கூடிய கண்ணைக் கவரும் சிலிண்டர்கள் விற்பனைக்கு வருகின்றன.இப்போது பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டர்கள் இரும்பில் தயாரிக்கப்படுகின்றன. ஒரு சிலிண்டர் தயாரிக்க எண்ணெய் நிறுவனங்கள் செலவிடும் தொகை ரூ.1,050. வெளிநாடுகளில் பைபர்கிளாசில் (கண்ணாடி இழை) சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சிலிண்டர் விலை ரூ.3,200.செலவு அதிகம் என்ற போதிலும் சிலிண்டர்களில் காஸ் எடைக் குறைவு புகார்களைத் தவிர்க்க, துல்லியமாக காஸ் அளவு தெரியக் கூடிய பைபர்கிளாஸ் சிலிண்டர்களை இறக்குமதி செய்ய எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டன. அதற்கு வெடிபொருட்கள் கட்டுப்பாட்டுக்கான தலைமை அதிகாரி சமீபத்தில் அனுமதி அளித்தார்.இதையடுத்து, முதல் கட்டமாக ஒரு லட்சம் பைபர்கிளாஸ் சிலிண்டர்களை இறக்குமதி செய்ய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
சாதாரண சிலிண்டரைவிட அழகிய வடிவிலும், காஸ் அளவு துல்லியமாகத் தெரியும்படி இருப்பதாலும், இறக்குமதி விலை அதிகம் என்பதாலும், அந்த சிலிண்டர்கள் மீது வழக்கமான மானியம் கிடையாது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளன.அதனால் வழக்கமான காஸ் விலையைவிட ரூ.300 கூடுதலாக தந்து மட்டுமே பைபர்கிளாஸ் சிலிண்டரைப் பெற முடியும்.

0 comments: