ஹெட்லியின் பாலிவுட் தொடர்புகள்

பாகிஸ்தானிய அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹெட்லிக்கும், பாலிவுட் பிரபலங்களுக்கும் இடையிலான தொடர்புகளை மொராக்கோவைச் சேர்ந்த அவரது முன்னாள் மனைவி அம்பலப்படுத்தியுள்ளார்.அவரது பெயர் பைய்ஸா அவுட்டால்ஹா. இவர் இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்புக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில், எனக்கும் ஹெட்லிக்கும் திருமணமானது. பின்னர் இருவரும் விவாகரத்து செய்து விட்டோம்.
பல்வேறு பெண்களுடன் ஹெட்லிக்குத் தொடர்பு இருந்தது தெரிய வந்ததால் நான் அவரை விவாகரத்து செய்து விட்டேன்.
ஹெட்லிக்கு மும்பை யில் உள்ள பல்வேறு பிரபல பெண்மணிகளுடனும், பாலிவுட் நடிகர்கள்,நடிகைகளுடனும் நல்ல தொடர்பு உள்ளது.நாங்கள் மும்பையில் தங்கியிருந்தபோது ஹெட்டலில், ஹெட்லியின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கிடமாக இருந்தது.
நானும் அவரும் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்குச் சென்றுள்ளோம் என்று கூறியுள்ளார்.இவர் இப்படிக் கூறியுள்ளபோதிலும் ஹெட்லியின் முன்னாள் மனைவி மீதும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு சந்தேகம் உள்ளது. ஹெட்லியின் முன்னாள் மனைவி கொடுத்த தகவலின் பேரில் கோவாவைச் சேர்ந்த ஒரு அமெரிக்க குடிமகனிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
அவர் அவ்வப்போது இந்தியாவை விட்டு வெளியே சென்று திரும்பி வருவது தெரிய வந்துள்ளது.
மணாலி, கோவா ஆகிய நகரங்களில் தனது ரஷ்ய தோழியோடு அவர் தங்கியிருந்துள்ளார்.
இருப்பினும் இவர் எந்தவித விசா முறைகேட்டிலும் ஈடுபடாமல் முறையாக வந்து போயுள்ளது தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

0 comments: